வெண்டைக்காய் தயிர்பச்சடி

தேதி: February 12, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.7 (3 votes)

 

வெண்டைக்காய் - 10
கெட்டித் தயிர் - முக்கால் கப்
அரைக்க:
தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி
வரமிளகாய் - 2
கிராம்பு - 2
தாளிக்க:
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு - அரைத் தேக்கரண்டி
வரமிளகாய் - ஒன்று
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு


 

வெண்டைக்காயைக் கழுவி துடைத்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரைக்கக் கொடுத்துள்ளவற்றை தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கவும். வெண்டைக்காயை உப்பு சேர்த்து நிறம் மாறாமல் வதக்கவும்.
பின்பு அரைத்த கலவையைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கி வைக்கவும்.
நன்கு ஆறியதும் தயிர் கலந்து பரிமாறவும். சுவையான வெண்டைக்காய் தயிர் பச்சடி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Hi how r u
ஈசீ ரெசபி ட்ரைபென்னிடுவோம்ல

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

குயிக் ஆ செய்கிற டிஷ்.வெண்டைக்காயில் தயிர் சேர்த்து இது மாதிரி செய்தது கிடையாது.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

;) முதல்ல சாஸ் இருக்கான்னு தான் பார்த்தேனாக்கும். ஹஹஹா. சூப்பர் டிஷ் உமா. அவசியம் செய்து பார்க்கறேன், வெண்டைக்காய் தயாராக இருக்கு வீட்டில். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு உமா,

தயிர் பச்சடி நிறைய‌ வெரைட்டியாக‌ செய்ய‌ ரொம்பவும் பிடிக்கும். கண்டிப்பாக‌ இந்தக் குறிப்பு செய்து பார்க்கிறேன். ரொம்ப‌ நல்லா இருக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி

போட்டோஸ் அருமையா இருக்கு. பச்சடியும் தான். அவசியம் செய்து பார்க்கிறேன்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

குறிப்பை வெளியிட்ட டீமுக்கு நன்றி.

ஜனதுல்
நான் நல்லாருக்கேன். நீங்க எப்டி? செய்துட்டு எப்டி இருந்ததுன்னு சொல்லுங்க.

முசி
நன்றி முசி. வித்தியாசமான சுவையில் இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க.

வனி.
நன்றி வனி. செய்துட்டு சொல்லுங்க.

சீத்தாம்மா
நன்றிம்மா. கராம்பு சேர்க்குறதால வித்தியாசமான சுவையில் இருக்கும்.

மஞ்சு
உங்க பதிவுக்கு ரொம்ப நன்றி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

சிம்பிள் அண்ட் டேஸ்டி டிஷ் .... சூப்பர்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

பதிவுக்கு நன்றி கனி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

வெண்டைக்காய் தயிர் பச்சடி சூப்பர், நான் வாழைக்காய்ல‌ தான் இப்படி செய்வேன், இனி வெண்டைக்காய்லேயும் செய்து பார்க்கிறேன், வாழ்த்துக்கள் உமா..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

பதிவுக்கு நன்றி சுமி. செய்துட்டு கண்டிப்பா பதிவு போடுங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா