சக்கரைவள்ளி கிழங்கு பாயசம்

தேதி: February 13, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

 

சக்கரைவள்ளி கிழங்கு - ஒன்று
சீனி - 5 தேக்கரண்டி
தேங்காய்ப் பால் - அரை டம்ளர்
ஏலக்காய் - 2
மைதா - ஒரு தேக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை


 

சக்கரைவள்ளி கிழங்கை தோல் சீவி கேரட் துருவியில் துருவிக் கொள்ளவும்.
ப்ரஷர் குக்கரில் துருவிய கிழங்கைப் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
கிழங்கு வெந்ததும் அதில் ஏலக்காய், சீனி, உப்புப் போட்டு கலக்கவும். மைதாவை சிறிது தண்ணீரில் கரைத்து பாயசத்தில் ஊற்றிக் கலக்கவும்.
அதனுடன் தேங்காய்ப் பால் ஊற்றி மிதமான தீயில் வைத்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும்.
சுவையான சக்கரைவள்ளி கிழங்கு பாயசம் ரெடி.

சீனி போத வில்லையெனில் சுவை பார்த்துக் சிறிது சேர்த்துக் கொள்ளவும். மைதா சேர்த்தால் நீர்க்க இருக்கும் பாயசம் கொஞ்சம் கெட்டியாகும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரொம்ப அறுமைங ரொம்ப ரொம்ப அறுமைங எங்க வீட்டு குட்டீஸ்கு ஏற்ற டிஷ்ங

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

சக்கரைவள்ளி கிழங்கு பாயசம் மிகவும் அருமை இப்பவே செய்யலாம் ஆனால் கிழங்கு இல்லை. பார்க்கும் போதே சாப்பிட ஆசையா இருக்கு.

பார்க்கவே சாப்பிடனும் போல‌ இருக்கு செய்முறையும் ஈசியா இருக்கு ரஸியா .

அன்பு ரஸியா,

அழகாக‌ செய்து காண்பித்திருக்கீங்க‌. நல்லா இருக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி

பாயசம் வித்தியாசமா அருமையா இருக்கு. வாழ்த்துக்கள்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

முதல் பதிவுக்கு நன்றி ஜன்னத்துல், ஆமாம் குட்டீஸ்க்கு பிடிக்கும்

Eat healthy

நன்றி பாலா, ஆமாம் சீசனில் தான் இந்த கிழங்கு கிடைக்கும், ஃப்ரான்ஸீல் கிடைக்கும் கிழங்கு ஆப்ரிக்காவிலிருந்து வருகிறது, கிழங்கு வாங்கியதும் செய்து சாப்பிடுங்க

Eat healthy

நன்றி தேவி, அவசியம் செய்து சாப்பிடுங்க, நான் உங்களுக்கு ஆசையை கெளப்பி விட்டுட்டேன், ஈஸியான வேலைதான், 15 நிமிடங்கள் போதும்

Eat healthy

நன்றி சீதா மேடம்.

Eat healthy

நன்றி உமா, செய்து சாப்பிட்டுவிட்டு சொல்லுங்க

Eat healthy

டிஷ் நல்லா இருக்கு அக்கா ... சீக்கிரமா செய்து பார்க்கனும் செய்துட்டு வபதிவு போடுறென்.. அம்மவோட‌ ஃபேவரிட் இந்த‌ கிழங்கு...

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ரஸியா அக்கா, சூப்பர்
புது விதமான‌ ஈஸி பாயாசம், ட்ரை பண்றேன்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

Thanku for ur esy recipe..kandipa try panren...

Kalam pon ponrathu

கனிமொழி நன்றிபா, எனக்கும் பிடிச்ச கிழங்கு இது, செய்து அம்மாக்கு முதலில் கொடுங்க.

Eat healthy

தங்கை சுபி பாராட்டுக்கு நன்றி, செய்து பாருங்க.

Eat healthy

U welcome kutimarana

Eat healthy

தங்கை சுபி,
நன்றி ரஸியா அக்கா,

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

பாயசம் பார்சல் பிலிஸ்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.