காரட் தக்காளி சூப்

தேதி: November 18, 2006

பரிமாறும் அளவு: இரண்டு பேர்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

காரட் - ஒன்று (வில்லைகளாக நறுக்கியது)
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
பூண்டு பல் - 2
இஞ்சி - 1/2 அங்குலம்
பிரிஞ்சி இலை - ஒன்று
மிளகுத் தூள் - 1/2 தேக்கரண்டி
பால் - 50 மில்லி லிட்டர்
புதினா இலை - 2
கொத்தமல்லித் தழை
வெங்காயம் - ஒன்று (பொடியாக அரிந்தது)
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

ப்ரஷர் குக்கரில் காரட், தக்காளி, பூண்டு, இஞ்சி, புதினா இலை, உப்பு இவைகளை 3/4 லிட்டர் நீரில், மூன்று விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.
ப்ரஷர் அடங்கியவுடன் குக்கரைத் திறந்து இஞ்சி, பூண்டு, பிரிஞ்சி இலை இவைகளை நீக்கிவிட்டு, காரட், தக்காளி இவை இரண்டையும் எடுத்து, மிக்ஸியில் ஒரு சுற்று அடித்து மறுபடியும் வெந்தநீரில் கலந்து வடிகட்ட வேண்டும்.
கடாயை அடுப்பில் வைத்து, சூடாக்கி, வெண்ணெய் உருக்கி, அரிந்த வெங்காயத்தை வதக்கி, வடிகட்டிய சாற்றை கலந்து, மிளகுத் தூள் சேர்த்து, 2 கொதி வந்தவுடன், பாலை ஊற்றிச் சூடாக பரிமாறலாம்.
கொத்தமல்லித் தழை தூவினால் அழகு சேர்க்கும்.


எளிமையாகவும் சுவையாகவும் செய்யக்கூடியது.
புதினா இலை இல்லையென்றால் விட்டு விடலாம். சூப் கெட்டியாக விரும்பினால், கார்ன் மாவு ஒரு தேக்கரண்டி நீரில் கரைத்து, இறக்கும் போது கலந்து விடலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

very nice recipe... Thanks for sharing it