காஞ்சிபுரம் இட்லி

தேதி: February 17, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.7 (3 votes)

 

பச்சரிசி - 350 கிராம்
உளுந்து - 250 கிராம்
வெந்தயம் - 2 தேக்கரண்டி
மிளகு - 3 தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 100 கிராம்
பெருங்காயம்
கறிவேப்பிலை
சுக்கு - 10 கிராம்
உப்பு - தேவையான அளவு


 

பச்சரிசியுடன் உளுந்து, வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து இரண்டரை மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் நைஸ் ரவை பதத்தில் அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவில் மிளகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் மற்றும் நன்கு தட்டி பொடி செய்த சுக்கு சேர்த்து, உப்புப் போட்டு கரைத்து 10 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
புளிக்க வைத்த மாவை மறுநாள் எடுத்து எண்ணெய் தடவிய அல்லது வாழை இலை வைத்த ஒரு அலுமினியப் பாத்திரத்தில் பாதி அளவிற்கு ஊற்றி, 20 முதல் 25 நிமிடங்கள் வரை வேகவிட்டு இறக்கி வைக்கவும்.
மணமான காஞ்சிபுரம் இட்லி ரெடி. இதற்கு வெங்காய சட்னி அருமையான சைட் டிஷ்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எனக்கு பிடிச்ச இட்லி. நானும் இதே போல் தான் தாளிப்பேன், ஆனால் மாவு காம்பினேசன் வேறு. அழகாக வெட்டி வெச்சிருக்கீங்க, அடுத்த முறை உங்க ஸ்டைலில் செய்துடுறேன் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அக்கா இட்டிலிக்கு use பன்ற மாவுல‌ செய்ய‌ முடியாதா அக்கா

இட்லி சூப்பரா இருக்கு ரேவ்ஸ். நான் இதுவரைக்கும் காஞ்சிபுரம் இட்லி செய்ததில்லை. செய்து பார்க்குறேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

அன்பு ரேவதி,

ரொம்ப நாளா செய்யணும்னு நினைச்சிட்டிருந்த ரெசிபி. சீக்கிரமே செய்து பார்க்கிறேன், நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

செய்துட்டு சொல்லுங்க. வனி.நீங்க எப்படி செய்விங்க.அதையும் சொல்லிபோடுங்க. தான்க்ஸ் வனி

Be simple be sample

இல்லமா,இந்த முறை ஈசியாதான் இருக்கும்,இது மாதிரியே செய்ங்க.இதுக்கு நாம உளூந்து அதிகமா சேர்க்கிறோம்.இட்லிமாவு சரி வராது.தான்க்ஸ் மா

Be simple be sample

தான்க்யூ உமா.நானும் இதுதான் முதல் முறை .செய்துட்டு சொல்லுங்க .நல்ல ருசி,மணமா நல்லாருக்கும்

Be simple be sample

சீக்கிரம் செய்து பார்த்துட்டு சொல்லுங்க சீதாம்மா .தான்க்யூ

Be simple be sample

ரேவதி செய்தாச்சு சாப்பிட்டாச்சு, நல்லா இருந்துச்சு வெங்காய சட்னியோட சாப்பிட சாப்பிட போய்ட்டே இருந்துச்சு. பசங்களுக்கும் ரொம்ப பிடிச்சுது கேக் மாதிரி வேற இருந்துச்சா ரொம்ப விரும்பி சாப்பிட்டாங்க

காஞ்சிபுரம் இட்லி குறிப்பு மிக அருமை :) வாழ்த்துக்கள் ரேவ் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

காஞ்சிபுரம் இட்லி குறிப்பு பட்டய‌ கிளப்புது....சூப்பர்.. வாழ்த்துக்கள் ரேவ் :)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

இவ்வ்ளோ சீக்கிரம் செய்து பார்த்துட்டு பதிவிட்டதுக்கு நன்றீ உமா.குட்டிஸ்க்கும் பிடிச்சது ரொம்ப சந்தோஷம்பா

Be simple be sample

பதிவுக்கு. ரொம்ப நன்றீ செல்வி

Be simple be sample

தான்க்யூ சுமி

Be simple be sample

ரேவதி அக்கா குறிப்பு அருமை,
நான் இன்னும் இந்த‌ இட்லி சாப்பிட்டது இல்லை, செய்துட்டு சொல்றேன் அக்கா.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

காஞ்சிபுரம் இட்லி மிக‌ நன்றாக‌ இருந்தது. மிக்க‌ நன்றி...

காஞ்சிபுரம் இட்லி இதை அலுமினிய தட்டில் தான் செய்யவேண்டுமா இல்ல எவர்சில்வர் இல்ல தட்டிலும் செய்யலாமா என்று கூறுங்கள்.

யாராவது சொல்லுங்க பா

தான்க்யூ விஜி.

மஞ்சுளா. சில்வர் பாத்திரமும் செய்யலாம்.வாழை இலை வச்சா ஈசியா ஒட்டாம வரும்.

Be simple be sample