காரட் சட்னி

தேதி: November 18, 2006

பரிமாறும் அளவு: 2 பேர்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

காரட் - ஒன்று
சாம்பார் வெங்காயம் - 6
காய்ந்த மிளகாய் - 3
உளுத்தம் பருப்பு - 3 தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு.
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு


 

காரட்டை பொடியாக நறுக்கிக் கொண்டு, கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு, காரட் பச்சை வாசம் நீங்கும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.
அதோடு புளி, வெங்காயம், காய்ந்த மிளகாய் இவைகளைப் போட்டு வதக்கி, தனியே எடுத்து வைக்க வேண்டும்.
மறுபடியும் கடாயில் உளுத்தம் பருப்பை பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது எல்லாவற்றையும் பெருங்காயம், உப்பு இவைகளுடன் சேர்த்து மிக்ஸியில் நீர் கலந்து நைஸாக அரைக்க வேண்டும்.
கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து கலவையில் சேர்த்து கலக்கி பரிமாறலாம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

இதுவரை காரட் சேர்த்து சட்னி செஞ்சது இல்ல - நல்லா இருக்கு. தோசைக்கு சாப்பிட போறோம். waiting for husband !!

இப்படிக்கு,
சந்தனா

அன்பு சகோதரி ஜுபைதா

இன்று தோசையுடன் இந்த சட்னி மிகவும் நன்றாக இருந்தது நன்றி

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

உங்க காரட் சட்னி இன்று செய்தேன் ரொம்ப நல்லாருந்துது.
இதுவரை காரட்டில் செய்ததில்லை இதுவே முதல் முறை இட்லிக்கு நல்லா இருந்துது.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.