antharankam

frieds,enakku 22 years aaguthu. thirumanam aagi 5 months thaan aagirathu.enakku pona thadavai period aana 20th day en kanavarudan onraai iruntha piraku adivajitril oru vithamaana thaanka mudijaatha vali etpaddathu. athudan pirappu urupil irunthu sila reththa kaddikal mathiri vanthichu( full stop size). athu ethanaal enra vidayam therijavillai.athukku pirakum correct time la period vanthichu...enakku enna santhegam enraal, period aagi 15th day kulanthai undaajirunthaal adutha period uarum varaikum uravu kondaal 100% kulanthai undaagathaa?.

kajalakshi,

உங்களது முதலாவது கேள்விக்கு நான் சொல்லக் கூடியது, ஒரு வைத்தியரை அணுகவும். அவர் தரும் மருந்து, மாத்திரைகள் அறிவுரைகள் பயன் தரும். கணவரையும் அழைத்துச் செல்லுங்கள். உங்களது வைத்தியர் உங்களைப் பரிசோதனை செய்து, தகுந்த மருந்து தருவார்.

அடுத்த கேள்வி, கர்ப்பமான பின் 15 நாட்களில் மீண்டுமொரு கர்ப்பம் தரிக்குமா என்பது.

பெண்களின் உடலிலுள்ள மகத்துவங்களில் இதுவும் ஒன்று.
அது, பொதுவாக, கருத்தரித்த கணத்திலிருந்தே முட்டைப் பைகள்(ovaries) முட்டையை வெளியேற்றுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும். இது கருத்தரித்த குழந்தை கருப்பையை விட்டு வெளியேறும் வரை.

இது, ஏற்கனவே உருவான கருவுக்கு, கருப்பை உகந்த பாதுகாப்பையும் ஊட்டத்தையும் தருவதற்காகவே.
ஆக, அப்படி ஒரு பயம் கொள்ளத் தேவையில்லை.

குழந்தை பிறந்த பின் ஒரு சில வாரங்களில் உடல் பழைய நிலையை அடையும் வேளை, முட்டைப் பை திரும்பவும் முட்டைகளை மாதமொருமுறை வெளியேற்ற ஆரம்பிக்கும்.

ஆனால், எதற்கும் விதிவிலக்குகள் உண்டு.

நன்றிகள்.

மிதமாகப் பேசு - பேசுவதை
இதமாகப் பேசு... (எனது வாசகம்)

மேலும் சில பதிவுகள்