கறிவேப்பிலை மீன் குழம்பு

தேதி: February 20, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

மீன் - அரை கிலோ (வஞ்சிரம் (அ) ஏதேனும் முள்ளில்லாத மீன்)
சின்ன வெங்காயம் - ஒரு கப்
தக்காளி - இரண்டு
முழுப் பூண்டு - ஒன்று
புளிக் கரைசல் - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
வறுக்க:
சோம்பு - ஒரு மேசைக்கரண்டி
சீரகம் - ஒரு மேசைக்கரண்டி
மிளகு - ஒன்றரை தேக்கரண்டி
வரமிளகாய் - 5 (அ) 6
பூண்டு - 4 பல்
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
வதக்க:
கறிவேப்பிலை - ஒன்றரை கப்
தேங்காய்பூ - ஒரு கப்
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
தாளிக்க:
நல்லெண்ணெய் - கால் கப்
கடுகு - அரைத் தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு


 

மீனுடன் மஞ்சள் தூள் சேர்த்து சுத்தம் செய்து, சிறிது உப்பு சேர்த்து பிரட்டி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
வறுக்கக் கொடுத்துள்ளவற்றை சிவக்க வறுத்தெடுத்து ஆறவிடவும்.
வதக்க வேண்டியவற்றை பச்சை வாசனை போக வதக்கியெடுத்து ஆறவைக்கவும்.
ஆறியதும் வறுத்தவற்றுடன் வதக்கியவற்றைச் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கவும். பிறகு வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
அதனுடன் அரைத்த விழுது, புளிக்கரைசல், தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
குழம்பு கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும், மீனைச் சேர்த்து 5 நிமிடங்கள் வேகவிட்டு இறக்கவும்.
சுவையான கறிவேப்பிலை மீன் குழம்பு தயார். சூடான சாதம், இட்லி, தோசை ஆகிய அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.

மிளகு மற்றும் மிளகாய் அவரவர் விருப்பத்திற்கேற்ப சேர்த்துக் கொள்ளலாம். மீனுடன் உப்பு சேர்த்து ஊறவைப்பதால் குழம்பில் உப்பு சேர்க்கும் போது கவனமாக சேர்க்கவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

உமா எனக்கு கறிவேப்பிலை, கொத்தமலி அரைத்து சேர்த்தால் குழம்பு வகைகள் ரொம்ப பிடிக்கும்... மகனுக்கு உடல் நலமில்லை, அதனால் கொஞ்ச நாளா அசைவம் எடுக்கல. அவசியம் அடுத்த முறை மீன் வாங்கி இதையே செய்துட்டு சொல்றேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குழம்பு மிகவும் அருமை... விருப்ப பட்டியலில் சேர்த்தாச்சு

குழம்பு வாசம் இங்க‌ வரை வீசுது.அருமை!.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

சூப்பர் மீன் குழம்பு.

உமா மீன்குழம்பு அருமை :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கறிவேப்பிலை மீன் குழம்பு வாசம் இங்க‌ வரை வந்துடுச்சு, சூப்பர்..:) அடுத்த‌ வாட்டி மீன் வாங்கும் போது செய்துட்டு சொல்றேன், வாழ்த்துக்கள் உமா..:)

முக‌ப்புத்தக்த்துல‌ தயிர் காய்ச்சியதும், பூண்டு ஊறுகாய் போட்டோவும் பார்த்தேன், ரொம்ப‌ நன்றி உமா..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

கறிவேப்பிலை மீன் குழம்பு இங்க‌ வரை மணக்குது வித்யாசமான‌ குறிப்பா இருக்கே இப்படி யோசிச்சது கூட‌ இல்லை. செய்து வேண்டியது தான். உமா உங்க‌ குறிப்புகள் எல்லாமே வித்யாசமானதா இருக்கு.
அறுசுவை பார்த்த‌ பிறகு தான் ஏதோ என் சமையலில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டு இருக்கறதா சொல்றாங்க‌ அப்பறம் எங்க‌ இப்படிலாம் யோசிக்க‌ போறேன்.

குறிப்பை வெளியிட்ட குழுவினருக்கு நன்றி.

வனி
பதிவுக்கு நன்றி வனி. பையனுக்கு என்ன உடம்புக்கு. இப்ப பரவாயில்லயா?
செய்துட்டு சொல்லுங்க.

ப்ரியா
நன்றி ப்ரியா

முசி, பாரதி & செல்வி
பதிவுக்கும் பாராட்டுக்கும் நன்றி தோழிஸ்.

சுமி
பதிவுக்கு நன்றி சுமி. செய்துட்டு கண்டிப்பா பதிவு போடுங்க.

தேவி
பதிவுக்கு நன்றி தோழி. இது என் ப்ரண்ட் சொன்ன ரெசிபி. ரொம்ப நல்லாருக்கும். கண்டிப்பா செய்து பாருங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

இப்ப தான் சுடச்சுட மீன் குழம்பும் சாதமும் உள்ள தள்ளிட்டு வரேன் :) சூப்பர்ங்க. ரொம்ப சூப்பர். முடிந்தால் ஃபோட்டோவும் போடுறேன். வஞ்சரத்தில் தான் செய்தேன், நல்ல சுவை. மிக்க நன்றி.

**மகனுக்கு இந்த குறிப்பு வந்த சமயம் வயிற்று பிரெச்சனை, வாந்தி பண்ணிக்கொண்டிருந்தான். இப்போது நலம் உமா. பதிவு போட்ட பின் தான் உங்க கேள்வியையே பார்த்தேன். அன்போடு விசாரித்தமைக்கு நன்றி உமா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

செய்து பதிவிட்டதுக்கு நன்றி வனி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

குழம்பு மிகவும் அருமை... விருப்ப பட்டியலில் சேர்த்தாச்சு