சேமியா இட்லி

தேதி: November 18, 2006

பரிமாறும் அளவு: 2 பேர்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

சேமியா - 100 கிராம்
ரவை - 25 கிராம்
தயிர் - 250 மில்லி லிட்டர்
காரட் - ஒன்று (துருவியது)
குடைமிளகாய் பொடியாக நறுக்கியது - ஒரு ஸ்பூன்
கொத்தமல்லி - பொடியாக நறுக்கியது.
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ஒரு ஸ்பூன்


 

கடாயில் எண்ணெய் விட்டு சேமியாவை பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
அதே போல் ரவையையும் தனியாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
இரண்டும் சூடு குறைந்தவுடன் தயிர், நறுக்கிய காய்கள், உப்பு இவைகளுடன் கலந்து இட்லி மாவு பதத்துடன் 1/2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் இட்லி சட்டியில் 10 நிமிடம் வேக வைத்து சூடாக சட்னியுடன் பரிமாறலாம்.


அரிசி மாவு ஒரு மேஜைக்கரண்டி கலந்து, ஊத்தப்பம் போலவும் வார்க்கலாம்.
மைக்ரோவேவில் வைத்தால் 5 நிமிடம் போதும்.

மேலும் சில குறிப்புகள்