ஈஸி சிக்கன் கறி

தேவையானவை
சிக்கன்--அரைகிலோ
காய்ந்த மிளகாய்-5
மிளகாய்தூள்-1 1/2 ஸ்பூன்
தேங்காய்- அரை மூடி (துருவியது)
தாளிக்க-கடுகு,கடலைபருப்பு,கறிவேப்பிலை
எண்ணெய்-100 மில்லி
உப்பு- தேவைக்கேற்ப
செய்முறை--
சிக்கனை மிக சிறு துண்டாக கட்பண்ணி கழுவி நீரின்றி பிழிந்துஎடுக்கவும்
வாணலியை மிதமானதீயில் அடுப்பில்வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,கடலைபருப்பு போட்டு தாளித்து நறுக்கின வெங்காயம் ,மிளகாய்,கறிவேப்பிலை வதக்கவும்.
சிக்கனையும்,மிளகாய்தூளையும் சேர்த்து எண்ணெயில் வதக்கவும் .தேவையானஉப்பு சேர்த்து நீர்ஊற்றி மூடி வைக்கவும்
சிக்கன்வெந்து தண்ணீர் வற்றியதும் துருவிய தேங்காய் சேர்த்து பிரட்டி
இறக்கவும்.
சாதத்துடன் பிசைந்து சாப்பிடவும்,தயிர்,ரசம் சாப்பாட்டிற்கும் நன்றாக இருக்கும்.
குறிப்பு- எண்ணெய் சற்று அதிகமாக இருந்தால் தான் ருசியாக இருக்கும்

மேலும் சில பதிவுகள்