மசாலா இடியாப்பம்

தேதி: February 22, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

திருமதி. ஆமினா அவர்களின் மசாலா இடியாப்பம் குறிப்பைப் பார்த்து சிறு மாற்றங்களுடன் செய்தது.

 

வேகவைத்த இடியாப்பம் - 4
வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று
முட்டை - 2
பச்சை மிளகாய் - ஒன்று
கரம் மசாலா தூள், தனி மிளகாய் தூள் - தலா அரை தேக்கரண்டி
முந்திரி - 6
தாளிக்க:
கடுகு, உளுந்து - ஒரு தேக்கரண்டி
பட்டை, லவங்கம் - 2
எண்ணெய் - 4 தேக்கரண்டி


 

வேகவைத்த இடியாப்பத்தை உதிர்த்துக் கொள்ளவும்.
கடாயில் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து, முந்திரி, வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் முட்டைகளை உடைத்து ஊற்றவும்.
முட்டை அரைபதமாக வெந்ததும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும், உப்பு, கரம் மசாலா தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து வதக்கி, உதிர்த்து வைத்துள்ள இடியாப்பத்தைச் சேர்த்து பிரட்டவும்.
இடியாப்பத்துடன் மசாலா நன்றாக சேர்ந்து வந்ததும் இறக்கி வைக்கவும்.
சுவையான மசாலா இடியாப்பம் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ம்ம்ம்.... கலக்குது இடியாப்பம்... அருமை....

ரேவதி இன்னக்கி காலையில செய்தாச்சு நல்லா இருந்துச்சு. முட்டை மட்டும் சேர்த்துக்கல ரேவதி.

நல்லாஇருக்கு.நான் ச‌ற்று வித்தியாசமாக‌ செய்வதுண்டு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நல்ல‌ குறிப்பு.. முயற்சித்து விட்டு சொல்கிறேன் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

Romba nalla eruku. Pidikkathavanga kooda try pannuvangga.