தக்காளி சட்னி

தேதி: February 24, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (4 votes)

 

தக்காளி - 4
சின்ன வெங்காயம் - 200 கிராம்
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய், கடுகு
சின்ன வெங்காயம் - 4
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம், வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலையை நன்றாக வதக்கியெடுத்து ஆறவைக்கவும்.
அதே வாணலியில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, பொடியாக நறுக்கிய 4 சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும். (வதக்கிய தக்காளி துண்டுகளில் இரண்டினைத் தனியாக எடுத்து ஆறவைக்கவும்).
ஆறவைத்த வெங்காயக் கலவையுடன் புளி மற்றும் எடுத்து வைத்துள்ள தக்காளி துண்டுகளிரண்டையும் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த கலவையை வதக்கிய தக்காளியுடன் சேர்த்து, தேவைக்கேற்ப உப்பு போட்டு நன்றாக கொதிக்கவிட்டு இறக்கவும்.
மிகவும் சுவையான தக்காளி சட்னி ரெடி. இட்லி, தோசைக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நானும் தக்காளி சட்னி இதே பொருட்களை (புளி மட்டும் இல்லை) வைத்து தான் செய்வேன் இரு வேறு முறைகளில்... ஒன்று எல்லா பொருட்களையும் தாளித்து நன்கு வதக்கி நீர் சேர்த்து கொதிக்க‌ விட்டு இறக்குவேன்... இல்லையென்றால் எல்லாவற்றையும் வத்க்கி அரைத்து பின்பு தாளித்து விடுவேன்... இரண்டும் வேறு வேறு சுவை... அடுத்த‌ முறை செய்யும்போது உங்கள் முறையில் செய்து பார்க்கிறேன்... (புளி சேர்த்தால் ரொம்ப‌ புளிப்பாக‌ இருக்காதா?) படங்கள் பளிசுனு இருக்கு......

அருள் அக்கா,
எங்க‌ வீட்லேயும் இதே மெத்தடுல‌ தான் செய்வோம் அக்கா.
வதக்கிய தக்காளி தனியா சேர்க்க மாட்டோம், அவ்ளோதான். இதையும் ட்ரை பண்றோம்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

எங்க வீட்ல இன்னைக்கு காலை டிபன் இட்லியும், இந்த தக்காளி சட்னியும் தான். ரொம்ப நல்லா இருந்துச்சு.

கலை

தக்காளி சட்னி எங்க வேற மாதிரி செய்வோம். நீங்க வித்யாசமா செய்திருக்கிங்க சூப்பர் இந்த சட்னியை நான் ட்ரை பன்னுரேன்.

ப்ரியா நானும் நீங்கள் சொல்லும் விதத்தில் அரைப்பது உண்டு. அதிலயும் சிலசமயம் தேங்காய் போட்டு, போடாமனு அரைச்சிருக்கேன்.
எங்கள் வீட்டிற்கு வந்த மதுரை தோழி ஒருவர் சொன்னமுறை இது. மதுரை தக்காளி சட்னினு போடமறந்துட்டேன்.
சிறு துண்டு புளிசேர்த்ததால் சுவை கூடியது. புளிப்பு அதிகமா இருக்குமோனு நினைச்சா பெங்களூரு தக்காளில அரைச்சு பாருங்க, நான் நாட்டுத்தக்காளிதான் போட்டேன். சுவையா இருந்தது.
பராட்டிற்கும், ஊக்குவிப்பிற்கும் மிக்க நன்றி ப்ரியா :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

சுபி தனியா போட்டு பாருங்க சுவை வேற்படலாம்.
மிக்க நன்றி சுபி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கலை பிடிச்சிருந்ததா, ரொம்ப நன்றி :) எங்க வீட்லயும் அனைவரும் விரும்பி சாப்பிடவே, அறுசுவைக்கு அனுப்பினேன். சின்ன சின்ன மாறுதல் கூட சுவையை கூட்டவோ , குறைக்கவோ செய்கிறது.
மேடம் வேணாமே ப்ளீஸ்ஸ்ஸ்..:(

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

பாரதி முயற்சி பண்ணி பாருங்க :) மிக்க நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

எனது குறிப்பினை வெளியிட்ட அட்மின்குழுவினருக்கு மிக்க நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

செய்முறை ஈஸியா இருந்துச்சு அருள். டேஸ்ட் ரொம்ப‌ நல்லா இருந்துச்சு. தக்காளி மாட்டும் தான் சேர்த்து அரைச்சேன் புளி சேர்த்துக்கல‌. ஆனாலும் நல்லா இருந்துச்சு

நானும் இதுபோல் தான் செய்வேன்,சிறுது சீனியும்,பூண்டுநம் சேர்த்து செய்வேன்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அருள்,

தக்காளி சட்னி பார்க்கவே ஜோரா இருக்கு! படங்கள் எல்லாமும் பளிச்சுன்னு உடனே செய்துபார்க்க சொல்லுது! :-) புளி வைத்து செய்வது புதுசா இருக்கு, கட்டாயம் செய்துப்பார்த்து சொல்கிறேன். நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

செல்வி சட்னி நல்லாருக்கு. அடுத்த தடவை இட்லிக்கு செய்துட்டு சொல்றேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா