கொத்தவரங்காய் பொரியல்

தேதி: November 20, 2006

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கொத்தவரங்காய் - கால் கிலோ
வெங்காயம் - ஒன்று
காய்ந்தமிளகாய் - நான்கு
பூண்டு - இரண்டு பற்கள்
கடலைப்பருப்பு - இரண்டு மேசைக்கரண்டி
தேங்காய்ப்பூ - இரண்டு மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் - அரைதேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்புத்தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி


 

கடலைப்பருப்பை ஊறவைத்து தண்ணீர் சுண்ட வேகவைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பூண்டை நசுக்கி வைக்கவும்.
கொத்தவரங்காயை வேண்டிய துண்டுகளாக நறுக்கி கொதிக்கும் உப்பு கலந்த நீரில் போட்டு மூன்று நிமிடம் வேகவைத்து வடிகட்டி வைக்கவும்.
வாயகன்ற சட்டியில் எண்ணெயை காய வைத்து கடுகைப் போட்டு வெடித்ததும் உளுத்தம்பருப்பு, காய்ந்தமிளகாய், கறிவேப்பிலைப் போட்டு வறுத்து, நசுக்கிய பூண்டு வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.
பிறகு வேகவைத்த காயைக் கொட்டி உப்புத்தூள், மஞ்சள்தூளைப் போட்டு நன்கு கிளறிவிடவும்.
அடுப்பின் அனலை குறைத்து வைத்து ஐந்து நிமிடத்திற்கு அனலில் வைத்திருக்கவும்.
பிறகு வேகவைத்த கடலைப்பருப்பை கொட்டி தேங்காய்ப்பூவைப் போட்டு நன்கு கிளறி இறக்கி விடவும்.


மேலும் சில குறிப்புகள்