பள்ளிபாளையம் சிக்கன்

தேதி: February 25, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.7 (3 votes)

 

சிக்கன் - அரை கிலோ
சின்ன வெங்காயம் - கால் கிலோ
காய்ந்த மிளகாய் - 12
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 10
தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

சிக்கனை எலும்பு இல்லாமல் கொட்டைப்பாக்கு அளவிற்கு சிறு துண்டுகளாக்கி சுத்தம் செய்து தண்ணீரை வடித்து வைக்கவும். மற்ற தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். காய்ந்த மிளகாயை சிறு துண்டுகளாக கிள்ளி விதையை எடுத்து விட்டு மிளகாயை மட்டும் தனியாக வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கிள்ளி வைத்த மிளகாயைப் போட்டு, சிவந்தவுடன் நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கனைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து சிக்கனை நன்கு வதக்கவும். இரண்டு கை அளவு தண்ணீரை தெளித்துவிட்டு மூடி வேகவைக்கவும்.
தண்ணீர் வற்றி சிக்கன் வெந்தவுடன் தேங்காய் துருவல் சேர்த்து கிளறிவிட்டு இறக்கவும்.
சுவையான பள்ளிபாளையம் சிக்கன் தயார். பிரியாணி, தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்குப் பொருத்தமான பக்க உணவு இது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

டெம்டிங் ரெசிபி... நான் தான் முதல் ல‌ பதிவிட்டது சோ அந்த‌ கடசி ப்ளேட் ஃபுல் சிக்கன் எனக்கு தான் :) கட்டாயமா ட்ரை பண்ணிட்டு சொல்லுறேன் மேடம்.. பள்ளிபாளையம் ஊர் ஸ்பெஷல் ஆ இது .. இல்ல‌ இந்த‌ ரெசிபியால‌ பள்ளிப்பாளையம் ஸ்பெஷலா ... தெரிஞ்சுகலாம் நு கேக்குறேன்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ஈஸியான டிஷ்
தேவையான பொருற்களும் கம்மி ஐ சீக்கிரம் சமைக்கலாம்ல சிக்கன் வீட்ல இருக்கு இன்று இதுதான் கரி வீட்டாட்கள அசத்திடுவோம்ல

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

நல்ல‌ குறிப்பு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

இதே போல தான் சிக்கன் சிந்தாமணியும் செய்வோம் தூள் வகைகள் இல்லாமல்

செல்விக்க்க்க்கோவ்வ்வ்வ் என்னாதீது ஊர்க்கிட்டயே நெருங்கிட்டீங்க‌. அந்தூர்ல‌ இருந்து கொஞ்சம் மேக்கால‌ வந்தா எங்கம்மா வீடு இருக்கு.

சிக்கன் சூப்பர் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அன்பு கனிமொழி,
கடைசி பிளேட் மட்டும் போதுமா? இங்கே வந்தா இன்னும் அதிகம் கிடைக்கும்:) ஊர் ஸ்பெஷல் தான் இது. எங்க‌ ஊர்ப்பக்கம். சிம்பிளா இருந்தாலும், சுவை சூப்பரா இருக்கும். ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க‌.

அன்புடன்,
செல்வி.

அன்பு ஜனாதுல்,
சிக்கனை பொடியாக‌ நறுக்குவது ஒன்றுதான் வேலை. மீதி எல்லாம் சுலபம். செய்தாச்சா? வந்து சொல்லுங்க‌.

அன்புடன்,
செல்வி.

அன்பு பிரியா,
ஓ! நீங்க‌ சிந்தாமணின்னு சொல்வீங்களா? ஈரோட்டில் இப்படி தான் சொல்வாங்க‌. ரொம்ப‌ ஃபேமஸ் ரெசிபி இது. நன்றி.

அன்புடன்,
செல்வி.

அன்பு முசி,
நன்றி முசி. முயற்சித்துப் பாருங்க‌:)

அன்புடன்,
செல்வி.

அன்பு அருட்செல்வி,
கூப்பிட்ட‌ குரல் இங்கேயே கேட்டுருச்சு. நம்ப‌ ஊரும் அதேங்க‌. சமைச்சு, சாப்பிட்டுட்டு சொல்லுங்க‌.

அன்புடன்,
செல்வி.

நல ்லா இருந்ததுபா

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

அன்பு ஜனாதுல்,
மிக்க‌ நன்றிப்பா! புதுசா வந்துருக்கீங்களா? டைப்பிங் பிரச்னையா இருக்கா? போகப் போக‌ பழ்கிடும். அப்ப‌ எங்களை விட‌, அதிகமா நீங்க‌ டைப் அடிப்பீங்க்:)

அன்புடன்,
செல்வி.

ரொம்ப காலமா என் கணவருக்காக பள்ளிபாளையம் சிக்கன் ரெசிப்பி தேடிக் கொண்டேயிருக்கேன்.நான் தேடிய எல்லா தளங்களிலும் இது போன்று ட்ரை version தான் இருந்தது.ஆனால் என்னவர் கிரேவியோடுதான் அவர் ஈரோட்டில் எப்போதோ உண்டதாக சொன்னார்.எங்கு தேடியும் கிடைக்கவில்லை.சில மாதங்களுக்கு முன் ஊருக்கு சென்றிருந்த போது மதுரை அம்மா மெஸ்-ல் பள்ளி பாளையம் சிக்கன் சாப்பிட்டோம். அவர் சொன்னது போன்று கிரேவியுடன் தான் இருந்தது,ருசியும் பிரமாதமாக இருந்தது.சின்ன வெங்காயம் தான் சேர்த்திருந்தார்கள்.

செல்வி மேடம் உங்களுக்கு அந்த ரெசிப்பி தெரிந்தால் பிளீஸ் பகிர்ந்து கொண்டு என் கணவரிடமிருந்து என்னைக் காப்பாற்றுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

அக்கா சிக்கன் ஈசி & சூப்பர். விருப்பப்பட்டியலில் சேர்த்துருக்கேன். சீக்கிரம் செய்துட்டு சொல்றேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

அன்பு வாணி,
ஒரிஜினல் ரெசிபி இப்படித்தான் பொரியல் போல‌ இருக்கும். சில‌ இடங்களில் அவங்க‌ அவங்க‌ சௌகரியகத்திற்கு ஏற்றாற் போல் மாற்றிக்கிறாஙக‌. அப்ப்டி மாற்றி செய்தது தான் உங்க‌ கணவர் சாப்பிட்டதாக‌ இருக்கும்.

ஏனெனில், இதில‌ பெரிசா எந்தப் பொருளும் சேர்க்கிறதில்லை. அதனால் கிரேவி பதம் வருவதற்கு வாய்ப்பு இல்லை. ஆனாலும், ரொம்ப‌ ட்ரையாக‌ வரும் வரை அடுப்பில் இருக்கக் கூடாது. கொஞ்சம் சதசதப்பு இருக்க‌ வேன்டும். அப்போது தான் சுவை அதிகமாக‌ இருக்கும்.

உங்களுக்காக‌ நானும் முயற்சித்துப் பார்க்கிறேன்.
நன்றி வாணி.

அன்புடன்,
செல்வி.

அன்பு உமா,
ஈசி மட்டுமல்ல‌. சுவையும் நன்றாக‌ இருக்கும். செய்து பார்த்துட்டு சொல்லுங்க‌. நன்றி.

அன்புடன்,
செல்வி.