Iui

Iui 3 தடவை செய்தும் பலன் இல்லை. எங்களுக்கு எந்த வித பிரச்சனையும் இல்லாத போது ஏன் என்னால் கர்ப்பம் தரிக்க முடியவில்லை மனதுக்கு ரொம்ப கஸ்டமா இருக்கு யாராவது advice தாங்கள் plz

ஏங்க உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லைல அப்ப கவலைய விடுங்க இறைவன் நினைத்தால் அற்ப நேரம் அதிகம் பிரார்தியுங்கள் இறைவனிடம் மன்றாடுங்கள் உங்களுக்கு குழந்தைபாக்கியம் கிடைக்கும் நானும் பிரார்திக்கிரேன்

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

Nan iui paneerukan ennaku ippo nalli
Thalli iruku but stomach pain iruku ennaku bayama iruku madam please help me

கற்பமாகும்போதும் அடிவயிறு வலிக்கும்.பீரியட் வர மாதிரிதான் இருக்கும் .கவலை படாதீங்க.உங்களுக்கு பீரியட் வரும் முன்பு எப்பொழுதும் வலிக்குமா?
வலி அதை போல் உள்ளதா அதிகமாக உள்ளதா?

சுசி iui னு சொல்ராங்கள பா அப்படினா என்னப்பா. அந்தமாதிரி ட்ரீட்மென்ட் எடுத்தா தாய்மை சீக்கிரம் அடையலாமா.

ஷமி இந்த லிங்க் படிச்சு பாருங்க. விளக்கமா எழுதி இருகாங்க
http://www.arusuvai.com/tamil/node/32907

ஹாய் கிருத்திகா கர்பமா இருக்கிங்களா இப்ப உங்களுக்கு எத்தன மாதம் ஆகுது. உங்க பதிவை எல்லாம் படித்தேன். ட்ரீட்மென்ட் எடுத்து தானே கர்பம் ஆனிங்க. நீங்க எடுத்த ட்ரீட்மென்ட்ட பத்தி எனக்கு கொஞ்சம் சொல்லுங்க பா. எனக்கு பீரியட் வந்து 13ஆம் நாள் ஸ்கேன் பன்ன வர சொன்னாங்க பா. நீங்க கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க பா...

எனக்கு கருமுட்டை வெளிவர 11 ஆம் நாள் ஊசி போட்டாங்க அப்புறம் 16 ஆம் நாள் வர சொல்லி முட்டை வெளி வந்துவிட்டதானு பார்தாங்க 11 முதல் 20 நாட்கள் ஒன்றாக இருந்தோம் தோழி

நான் இப்பொழுது 2 1/2 மாதம் கர்ப்பம் தோழி.

கிருத்திகா நீங்க 11 னாம் நாள் ஸ்கேன்னுக்கு போனீங்கள சாப்டு போனீங்க இல்ல வெறும் வயிற்றோடு போனீங்களா.எவ்வளவு நாள் இந்த ட்ரீட்மென்ட் எடுத்திங்க பா.எத்தன ஸ்கேன் எடுப்பாங்க எத்தன ஊசி போட்டாங்க பா.
நீங்க நல்லா சாப்பிடுங்க நல்லா ரெஸ்ட் எடுங்க பா..

11 ஆம் நாள் கருமுட்டை எந்த பக்கம் இருக்குனு ஸ்கேன்ல பார்த்துட்டு ஒரே ஊசி தான் போட்டாங்க. 16ஆம் நாள் ஸ்கேன்ல கருமுட்டை வெளியே வந்துவிட்டதா என்று ஸ்கேன்ல பார்த்தாங்க. நான் சாப்பிட்டு தான் போனேன் தோழி.

மேலும் சில பதிவுகள்