நெல்லை அவியல்

தேதி: February 28, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

கத்தரிக்காய் - 2
வாழைக்காய் - ஒன்று
உருளைக்கிழங்கு - ஒன்று
சேப்பங்கிழங்கு - 2
அவரைக்காய் - 3
பீன்ஸ் - 4
கேரட் - 2
புடலங்காய் - ஒன்று
முருங்கைக்காய் - ஒன்று
பட்டர் பீன்ஸ் - சிறிது
பட்டாணி - சிறிது
பெரிய வெங்காயம் - ஒன்று
தயிர் - அரை கப்
தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
கறிவேப்பிலை - சிறிது
அரைக்க:
பச்சை மிளகாய் - 6
சின்ன வெங்காயம் - 8
பூண்டு - 2
தேங்காய்ப்பூ - 2 மேசைக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை தோலுரித்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
மிக்ஸியில் பச்சை மிளகாயுடன் உப்பு சேர்த்து ஒரு சுற்று அரைக்கவும். (உப்பு சேர்த்து அரைப்பதால் பச்சை மிளகாய் நன்றாக அரைபடும்). பிறகு அதனுடன் தேங்காய்ப்பூ, வெங்காயம், பூண்டு மற்றும் சீரகம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
காய்கறிகளையும், கிழங்குகளையும் சீரான அளவில் நறுக்கி வைக்கவும்.
அனைத்து காய்கறிகளையும் குழையாமல் வேகவைத்து, அதனுடன் மிளகாய் விழுதைச் சேர்த்து நன்கு கிளறவும்.
மிளகாய் விழுது காய்கறிகளுடன் சேர்ந்து, பச்சை வாசனை போகும் வரை ஓரிரு கொதி வரவிடவும். கொதி வந்ததும் தயிரைச் சேர்த்து கிளறவும்.
ஒரு கொதி வந்ததும் தேங்காய் எண்ணெயைச் சேர்த்து கிளறி இறக்கி வைக்கவும். (தேங்காய் எண்ணெயை பச்சையாகவே சேர்க்க வேண்டும். சூடுபடுத்த வேண்டாம்). கடைசியாக சுத்தம் செய்த கறிவேப்பிலையை கிள்ளி அவியலில் போடவும்.
சுவையான நெல்லை அவியல் தயார். தாளிதம் தேவையில்லை. விரும்பினால் கடுகு, பருப்பு தாளித்துச் சேர்க்கலாம்.

அவியல் பிரட்டினாற்போல இருக்க வேண்டும். நான் சாதாரணமாக காய்கறிகளை சற்று குழைய வேகவைத்து செய்வதால் படத்தில் அவியல் குழைவாகத் தெரிகிறது.

நெல்லை அவியலுக்கு காய்கறிகள் குழைந்துவிடாமல், ஒன்றுடன் ஒன்று ஒட்டாத பதத்தில் வேகவைக்கவும். (காய்கறிகள் தனித்தனியாக தெரிவதுபோல் இருக்க வேண்டும்). எனவே காய்கறிகளை வேகவைக்கும் போது அளவாகத் தண்ணீர் சேர்க்கவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹெல்தி அன்ட் டேஸ்டி டிஷ் சூப்பரா இருக்கும்மா... :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

Mom colourfull pictures,இவ்லோ காய்யும் போடனுமா மா , நா try பன்னிட்டு சொல்றமா

நிறைய காய்கறிகளோட அவியல் அருமை :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ரொம்ப நல்லா இருக்கு, என் குழந்தைக்கு குழைவாக உள்ள சாதம் தான் ரொம்ப பிடிக்கும் அதனால இந்த நெல்லை அவியலை செய்து கொடுக்கிறேன். நன்றி அம்மா.

அன்பு கனிமொழி,

முதல் பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு மஹா,

எல்லாக் காயும் சேர்க்கணும் என்று இல்லை. இருக்கும் காய்களை வைத்து மட்டும் செய்யலாம்.

கேரளாவில் அன்றன்று உள்ள‌ காய்களை மட்டும் வைத்தே அவியல் செய்வாங்கன்னு சொல்வாங்க‌.

இதில் சேர்க்கும் தேங்காய் எண்ணெயும் தயிரும் தரும் வித்தியாசமான‌ சுவைதான் அவியலின் சிறப்பு.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு அருட்செல்வி,

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு பாலபாரதி,

செய்து பார்த்து சொல்லுங்க‌. பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அவியல் மிகவும் அருமைமா... செய்ய ஆசையா இருக்கு

அவியல் அருமை சீத்தாம்மா. விருப்பபட்டியல்ல சேர்த்துட்டேன். செய்துட்டு சொல்றேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

அன்பு பிரியா, அன்பு உமா,

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி. செய்து பார்த்து, சொல்லுங்க‌.

அன்புடன்

சீதாலஷ்மி

இம்முறை முடியல, வசுக்கு ரொம்ப பிடிச்ச டிஷ், கட்டாயம் அடுத்த முறை வரும் போது செய்து கொடுக்கறேன் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எங்க வீட்ல எல்லோருக்கும் ரொம்ப பிடித்தது அவியல்.எங்க அம்மா வைக்கும் அவியலின் ருசியே தனிதான்,சாப்பிடும்போது எது என்ன காய் என்று சொல்லி விடலாம்,குழையாமல் தண்ணீர் விடாமல் வைப்பார்கள்,காய்களிலிருந்து வரும் நீரே போதும் என்பார்கள்.ஆனால் என் கணவருக்கு குழைந்த அவியல் தான் இஷ்டம்.நானும் இதே முறையில் தான் வைப்பேன்.

செய்முறைக்கு கீழே நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வரிகள் எங்க அம்மா செய்யும் அவியலை நியாபகப் படுத்தி விட்டது.

சூப்பர்..அப்டியே தொட்டுக்க‌ கடலைபருப்பு அடை 1 சூடா தாங்க‌ :‍)

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

அன்பு வாணி,

நீங்க‌ சொல்வ்து ரொம்ப‌ சரி. காய்கள் தனித்தனியாத் தெரியணும். சாப்பிடும்போது, காரட், முருங்கைகாய், சேம்பு எல்லாம் தனியாக‌ எடுத்து, தொட்டுக் கொண்டு சாப்பிடுவோம்.

அவியல் செய்யறப்ப‌ முதலில் ஊற‌ வைத்த‌ கடலைப்பருப்பு போட்டு, ஒரு கொதி வர‌ விடுவோம். அப்புறம் சேனைக்கிழங்கு, கொத்தவரங்காய், மொச்சைப்பயறு = பலாக்கொட்டை இருந்தால் அதுவும் போடுவ்துண்டு. பிறகு, சேம்பு, உருளை, காரட், அப்புறம் = பீன்ஸ், அவரை, இதுக்கு அப்புறம்தான் சீக்கிரம் வேகக்கூடிய‌ கத்தரிக்காய் வாழைக்காய் சேர்த்து வேக‌ வைப்போம். இப்படி காய்களின் வேகும் தன்மையைப் பொறுத்து ஒவ்வொண்ணா சேர்க்கும்போது, கடைசியில் எல்லாக் காய்களும் ஒன்று போல‌ குழையாமல் வெந்து விடும்.

இப்ப‌ எல்லாம் அவசர‌ சமையல் = குக்கரில் எல்லாக் காய்களையும் போட்டு ஓரிரு விசில் வைத்தால் வெந்து விடுகிறது.

அதோட‌ , மீதமிருக்கும் சாம்பாரையும் அவியலையும் ஒன்றாகப் போட்டு, கொதிக்க‌ விட்டு, செய்யும் சுண்டக்கறியும் தயிர் சாதமும் ராத்திரி சாப்ப்பாட்டுக்கு ரசித்து சாப்பிடுவதுண்டு. இப்ப‌ அதெல்லாம் மலரும் நினைவுகளாகி விட்டது.

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு ஜெயா,

அடைக்கும் அவியலுக்கும் ஜோரான‌ பொருத்தமாகத்தான் இருக்கும்.

மதியம் அவியல் செய்யும்போது, சாயங்கால‌ டிஃபன் அடை செய்யறதுண்டு. (டூ இன் 1:):)

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

இன்று அவியல் செய்தேன் சீதாம்மா ரொம்ப நல்லாருந்தது. குறிப்புக்கு நன்றிம்மா.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா