கல கல பாகற்காய்

தேதி: November 20, 2006

பரிமாறும் அளவு: 4 பேர்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பாகற்காய் - 1/4 கிலோ (இரண்டாகப் பிளந்து வில்லைகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்)
இஞ்சி, பூண்டு விழுது - 1/4 தேக்கரண்டி.
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி.
தனியாத் தூள் - 1/2 தேக்கரண்டி.
கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி.
ஆம்சூர் (காய்ந்த மாங்காய்த் தூள்) - 1/4 தேக்கரண்டி.
சோம்புத்தூள் - 1/4 தேக்கரண்டி
சுக்குத்தூள் - 1/4 தேக்கரண்டி.
கடலை மாவு - 6 தேக்கரண்டி.
அரிசி மாவு - 2 தேக்கரண்டி.
கார்ன் மாவு - 2 தேக்கரண்டி.
கறிவேப்பிலை பொடியாக நறுக்கியது - 2 ஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 2 தேக்கரண்டி.
உப்பு - தேவையான அளவு.
எண்ணெய் - பொரிப்பதற்கு.


 

பாகற்காயை உப்பு போட்டு ஒரு ஆவி வரும் வரை வேக வைத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
எல்லா மசாலாவையும் பாகற்காயுடன் நன்றாகக் கலந்து உப்பு ருசி பார்த்து சேர்த்து, 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
இப்போது கடாயில் எண்ணெய் சூடானவுடன் கலவையை உதிரி உதிரியாகப் போட்டு, மிதமான தீயில் பொரித்தால் கலகலவென, பொன்னிறமாக வறுவல் தயாராகிவிடும்.


இந்த வறுவலை, கவனமாகவும் நிதானமாகவும் தயார் செய்தால் மொறு மொறுவென ருசியாக அமையும்.
சுக்குத்தூள் இல்லையென்றால் விட்டுவிடலாம்.

மேலும் சில குறிப்புகள்