வாழைக்காய் கோஃப்தா

தேதி: November 20, 2006

பரிமாறும் அளவு: 4 பேர்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வாழைக்காய் - ஒன்று (தோலுடன் இரண்டாக வெட்டி குக்கரில் வேக வைக்க வேண்டும்)
வறுத்து அரைக்க வேண்டியவை:
இஞ்சி - ஒரு தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது)
பூண்டு - ஒரு தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு - 2 தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது)
பொட்டுக்கடலை - 4 தேக்கரண்டி
பட்டை - சிறு துண்டு.
கிராம்பு - ஒன்று
ஏலக்காய் - ஒன்று
சோம்பு - ஒரு தேக்கரண்டி.
காய்ந்த மிளகாய் - 3
மிளகு - 1 தேக்கரண்டி.
சீரகம் - 1/2 தேக்கரண்டி.
உப்பு - தேவையான அளவு
கோஃப்தா கலவைக்கு:
பெரிய வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி.
தனியாத்தூள் - 1/2 தேக்கரண்டி.
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி.
கறிவேப்பிலை - 2 தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு.
பொரிப்பதற்கு - தேவையான எண்ணெய்.


 

வறுக்க வேண்டியவற்றை எண்ணெய் சேர்த்து, மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து, நீர் தெளித்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி பேஸ்ட் போல் செய்து கொள்ள வேண்டும்.
தோல் நீக்கிய வாழைக்காயை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ள வேண்டும்.
கடாயில் 4 தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கி, வெங்காயத்தையும் கறிவேப்பிலையையும் பொன்னிறமாக வதக்கி, அதனுடன் மிளகாய்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு கலந்து, அதனுடன் அரைத்த பேஸ்ட், வாழைக்காய் சேர்த்து நன்கு பிரட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, தட்டையாகவோ அல்லது உருண்டையாகவோ மிதமான தீயில் பொரித்து எடுக்க வேண்டும்.


மாலை சிற்றுண்டியாகவும் தரலாம்
வாழைக்காய்க்கு பதிலாக, சிக்கன் கீமாவோ அல்லது மட்டன் கீமாவோ பயன்படுத்தினால் அருமையான சுவையான கோஃப்தா கிடைக்கும்.

மேலும் சில குறிப்புகள்