பயறு வடை

தேதி: March 4, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

பச்சைப்பயறு - ஒரு கப்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 3 பல்
கறிவேப்பிலை - 2 இணுக்கு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க

பச்சைப் பயறை சுத்தம் செய்து ஐந்து மணி நேரம் ஊறவைக்கவும்.
ஊறிய பயறில் தண்ணீரை வடித்துவிட்டு பூண்டு மற்றும் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கி அரைத்த கலவையுடன் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்த மாவை வடைகளாகத் தட்டிப்போட்டுப் பொரித்தெடுக்கவும்.
மாலை நேரத்தில் டீயுடன் சூடாகப் பரிமாற சுவையான, சத்தான பயறு வடை தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

சூப்பர்... எப்ப்டி இப்படி வித விதமா ஹெல்தியா யோசிக்கறீங்க?? நாளைக்கே செய்துடுவோம்ல. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பர் ஈஸி குறிப்பு உமா. சத்துடன் சுவையாகவும் இருக்கும் என நினைக்கிறேன். செய்துவிட்டு கருத்தை பகிர்கிறேன்.

போட்டோஸ் கலர்புல்லா இருக்கு. வடையும் தான். வாழ்த்துக்கள்.

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

குறிப்பை வெளியிட்ட டீமுக்கு நன்றி.

வனி
முதல் பதிவுக்கு நன்றி வனி. செய்துட்டு சொல்லுங்க. சூடா சாப்பிட்டா ரொம்ப நல்லாருக்கும்.

ஜெயலக்‌ஷ்மி
பதிவுக்கும் பாராட்டுக்கும் நன்றி. செய்துட்டு சொல்லுங்க.

மஞ்சு அக்கா
வாழ்த்துக்கு நன்றி அக்கா.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

உமா அருமையான ஆரோக்கியமான குறிப்பினை கொடுத்தமைக்கு வாழ்த்துக்கள் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அன்பு உமா,

பாசிப்பயறு வடை = பாக்கறதுக்கே நல்ல‌ கரகரப்பா இருக்கு. சுவையும் அபாரமாக‌ இருக்கும். பாராட்டுக்கள்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு உமா,
சுவை மட்டுமல்ல‌, நல்ல‌ சத்தான‌ வடையும் கூட‌.

அன்புடன்,
செல்வி.

எனக்கு பச்சை பயரில் சுழியம் பண்ண தெரியும் இப்ப வடையும் செய்ய போறேன். வடை சூப்பர் பா.

பதிவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி செல்வி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

பதிவுக்கும் பாராட்டுக்கும் ரொம்ப நன்றிம்மா.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

ரொம்ப நன்றி அக்கா உங்க பதிவுக்கு.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

வடை சூப்பர்,நான் ச‌ற்று வித்தியாசமாக‌ செய்வேன்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

பதிவுக்கு நன்றி முசி. நீங்க எப்படி செய்வீங்க?

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

வாவ் உமா... செய்துட்டேன், சம சூப்பரா இருக்கு. சாப்பிடுறதை நிறுத்தவே முடியல... வருசையா உள்ள அனுப்பிக்கிட்டே இருக்கேன் ;) நன்றி உமா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சாரி வனி இப்பதான் பதிவை பார்த்தேன். செய்து சாப்பிட்டு பதிவும் போட்டதுக்கு ரொம்ப நன்றி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

இன்று செய்தேன் நன்றாக இருந்தது

செய்து பார்த்து பதிவிட்டதுக்கு நன்றி தோழி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

வனி படம் போட்டுக் காட்டியதால பயறு வடை செய்தேன், நல்லா இருந்தது உமா

செய்து பார்த்து பதிவிட்டதுக்கு நன்றி வாணி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

வாவ்...ஹெல்தியான‌ குறிப்பு.கட்டயம் நாளைக்கு செய்ய‌ போறேன்

நன்றி நிகிலா. ரொம்ப நல்லாருக்கும் செய்துட்டு கண்டிப்பா சொல்லுங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா