வாழைத்தண்டு கூட்டு

தேதி: November 20, 2006

பரிமாறும் அளவு: 4 பேர்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வாழைத்தண்டு - ஒன்று
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கியது).
கடுகு - 1/4 ஸ்பூன்.
பயத்தம் பருப்பு - 3 மேசைக்கரண்டி.
கடலைப் பருப்பு - 3 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்.
உப்பு - தேவையான அளவு.
கறிவேப்பிலை - சிறிதளவு
அரைக்க வேண்டியவை:
தேங்காய் துருவல் - 4 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - 1/2 இன்ச்.
தயிர் - 50 மில்லி லிட்டர்


 

வாழைத்தண்டை வில்லைகளாக நறுக்கி, பின்னர் சிறு ஒரு செ.மீ க்யூப்களாக துண்டு செய்து கொள்ள வேண்டும். நீரில் போட்டு நாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
ப்ரஷர் குக்கரில் வாழைத்தண்டு, பருப்பு, மஞ்சள் தூள், தேவையான உப்பு இவைகளுடன் 2 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.
ப்ரஷர் அடங்கியவுடன், அவைகளுடன் தயிரில் போட்டு அரைத்த கலவையை சேர்த்து, உப்பு ருசி பார்த்து, கூட்டு பதம் வரும்வரை கொதிக்க வைக்க வேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, கடுகு, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து, தாளித்து கூட்டுடன் கலந்து பரிமாறலாம்.


வாழைத்தண்டுக்கு பதில் கீரை அல்லது செளசெள அல்லது சுரைக்காய் போட்டு கூட்டு செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஜுபைதா... வாழைத்தண்டுடன் கடலைப்பருப்பு தான் சேர்ப்போம். இன்றுதான் சிறுபருப்பு சேர்த்தோம்.. தயிர் சேர்ப்பதும் இதுவே முதல் முறை. நல்ல சுவை. மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா