வெங்காயம் சேர்த்த ரசம்

தேதி: March 6, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

புளி - எலுமிச்சை அளவு
தக்காளி - ஒன்று
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகு - அரை தேக்கரண்டி
தனியா - அரை தேக்கரண்டி
துவரம் பருப்பு - அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
சின்ன வெங்காயம் - 4
பூண்டு - 4 பல்
கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை - 10
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - 6


 

தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும்.
புளி முதல் கறிவேப்பிலை வரை உள்ள அனைத்துப் பொருட்களையும் மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து, (பூண்டு வாசனை பிடித்தவர்கள் ஒரு பல் பூண்டை நசுக்கிப் போடலாம்) அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்க்கவும். அதனுடன் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு பொங்கி வந்ததும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.
சுவையான வெங்காயம் சேர்த்த ரசம் தயார்.

பச்சை மிளகாய்க்கு பதிலாக வரமிளகாயும் சேர்க்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இப்படி ஒரு ரசம் வைக்கும் முறை இப்ப தான் பார்க்கிறேன். புதுசா இருக்கு. அவசியம் செய்துட்டு சொல்றேன் செல்வி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Selvi Mom நானும் ரசத்திர்க்கு வெங்காயம் எல்லாம் சேர்ப்பேன், அரைத்து வைத்து இப்ப‌ தா பாக்கிறேன், செய்து பாக்கிறேன்

yours lovable
Maha

ரசம் சூப்பரா ஈசியா இருக்கு அக்கா.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

அன்பு செல்வி மேடம்,

வித்தியாசமான‌ குறிப்பு. வெங்காய‌ வாசனையுடன் ரசம் ரொம்ப‌ நல்லா இருக்கும்.

செய்து பார்க்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

இரசம் சூப்பர் :) பச்சை மிளகாய்க்குபதிலா வறமிளகாய் சேர்த்து அரைத்து வைப்பதுண்டு. இதுபோல் செய்து பார்க்கிறேன் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நானும் இதே முறையில் தான் ரசம் வைப்பேன் மேடம்,என் கணவருக்கு பச்சை மிளகாய் அரைத்து சேர்ப்பது பிடிக்கும். வெங்காயமும்,கொத்தமல்லி விதையும் சேர்ப்பதில்லை,
இந்த முறையில் முயற்ச்சிக்கிரேன்.

வித்தியாசமான‌ ரசம்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அன்பு வனி,
எங்க ஊர்ப்பக்கம் இப்படி ஒரு வகை ரசம் வைப்பாங்க. செய்து பாருங்க.

அன்புடன்,
செல்வி.

அன்பு மகா,
அரைத்து வைத்துப் பாருங்க. வித்தியாசமான சுவை இருக்கும்.

அன்புடன்,
செல்வி.

அன்பு உமா,
ஈசியா செய்யலாம் இந்த ரசம். முயற்சித்துப் பாருங்க

அன்புடன்,
செல்வி.

அன்பு சீதாலஷ்மி,
செய்து பார்த்துட்டு சொல்லுங்க!

அன்புடன்,
செல்வி.

அன்பு அருட்செல்வி,
நானும் முன்னெல்லாம் அப்படி தான் வைப்பேன். ஒரு முறை இப்படி செய்து பார்த்தேன். நல்லா இருந்துச்சு. அதிலிருந்து இந்த முறைதான். முயற்சித்துப் பாருங்களேன்.

அன்புடன்,
செல்வி.

அன்பு வாணி,
வெங்காயம் சேர்த்து செய்து பாருங்க. நல்லா இருக்கும்.

அன்புடன்,
செல்வி.

அன்பு முசி,
மிக்க நன்றி

அன்புடன்,
செல்வி.