மல்டி க்ரெய்ன் கிரேவி

தேதி: March 7, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (4 votes)

கொண்டைக்கடலை, பயறு, காராமணி, ராஜ்மா - தலா கால் கப்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - இரண்டு
கறிவேப்பிலை - சிறிதளவு
சிக்கன் மசாலா தூள் - இரண்டு தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
சின்ன வெங்காயம் - அரை கப்
தக்காளி - 2
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - ஐந்து பல்
தேங்காய் - அரை கப்
தாளிக்க:
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - 3
எண்ணெய் - தேவையான அளவு

கொண்டைக்கடலை, பயறு, காராமணி, ராஜ்மா அனைத்தையும் தனித்தனியாக ஊறவைத்து அளவாக தண்ணீர் ஊற்றி உப்புச் சேர்த்து வேகவைத்து தண்ணீருடன் வைத்திருக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலைச் சேர்த்து சிவக்க வதக்கவும்.
நன்கு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
அதனுடன் தூள் வகைகள் மற்றும் உப்புச் சேர்த்து வதக்கவும்.
அனைத்தும் வதங்கியதும் வேக வைத்த தானியங்களைத் தண்ணீருடன் சேர்த்து வேகவிட்டு இறக்கி வைக்கவும்.
சத்தான, சுவையான மல்டி க்ரெய்ன் கிரேவி தயார். சாதம், சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

கலக்குங்க... கலவையா பயிறு வகை சேர்த்து கலக்குங்க :) செய்துருவோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு உமா,

சத்தான‌ சமையல் குறிப்புகளை, முத்து முத்தாகக் கொடுத்து அசத்துறீங்க‌.

புரதச்சத்து நிறைந்த‌ பயறு வகைகளை, பயன்படுத்தி, செய்திருப்பது ரொம்ப‌ நல்லா இருக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி

ஹாய், எல்லா விதமான‌ பயிறும் கலந்து செய்திருப்பது புதிதாக‌ உள்ளது., சத்தான சமையல்.
வாழ்த்துக்கள்.....

குறிப்பை வெளியிட்ட அன்பான அறுசுவை டீமுக்கு நன்றி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

முதல் பதிவுக்கும் பாராட்டுக்கும் நன்றி வனி. செய்துட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

பாராட்டுக்கு ரொம்ப நன்றிம்மா.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

வாழ்த்துக்கு நன்றி சசி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

சத்தான கலவை பயிறுகள் கொண்ட ரெசிப்பி தான், உங்க குறிப்புகளும் வித்தியாசமாகத்தான் இருக்கு உமா, கண்டிப்ப டிரை பண்ரேன்.

uma sister ராஜ்மா item சேர்க்க‌ வேன்டியது அவசியமா, நா movie ல‌ த‌ இதை கேள்வி பட்டுள்ளேன், dish is Very Colour full , last picture very nice

yours lovable
maha

பாராட்டுக்கு நன்றி வாணி. செய்துட்டு எப்டி இருந்ததுன்னு சொல்லுங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

வருகைக்கு நன்றி மகா. உங்களுக்கு என்ன தானியங்கள் கிடைக்குதோ அதை வச்சு பண்ணலாம். ராஜ்மா சேர்க்காட்டி பரவாயில்லை.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

சுவையான‌,சத்தான‌ சூப்பர் குறிப்பு.செய்து பார்க்கிரேன்.படங்கள் பளிச்!!

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

பதிவுக்கு நன்றி முசி செய்துட்டு சொல்லுங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

உமா சுவையான ஆரோக்கியமான குறிப்பிற்கு வாழ்த்துக்கள் :)
ரஜ்மா தவிர மற்ற பொருட்களை போட்டு செய்து பார்க்கிறேன். எங்க வீட்ல அனைவருக்குமே ரஜ்மா ஒத்துக்காது.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

Nandri Selvi. Seythuttu sollunga

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

அன்பு உமா,
சத்தான கிரேவி. நல்ல குறிப்பு.

அன்புடன்,
செல்வி.

nanum itha try panni pakkuren .