இலை பக்கோடா

தேதி: March 30, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கடலைமாவு - 2 கப்
மிளகாய்தூள் - 2 தேக்கரண்டி
எள் - ஒரு தேக்கரண்டி
நெய் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு
உப்பு - தேவைகேற்ப


 

கடலைமாவு, எள், மிளகாய்த்தூள் இவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து வெண்ணெய் அல்லது நெய் விட்டு பிசையவும்.
தேவையெனில் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் இலை பக்கோடா அச்சில் மாவினை எடுத்துக் கொண்டு நேரடியாகவே எண்ணெய்யில் பிழிந்து விடவும்.
வெந்ததும் எடுத்து ஒரு செய்தித்தாளை போட்டு எண்ணெய் வடிந்த பின்பு வேறு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.


மேலும் சில குறிப்புகள்