ஆட்டீரல் கரடா

தேதி: November 23, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ஆட்டீரல் - 300 கிராம்
உருளைக்கிழங்கு - 100 கிராம்
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 100 கிராம்
மசாலாத்தூள் - ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
மிளகாய்தூள் - 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 3 ஸ்பூன்
தேங்காய் விழுது - 2 ஸ்பூன்
மல்லிக்கீரை - அரை கட்டு
உப்பு - அரை ஸ்பூன்
எண்ணெய் - 8 ஸ்பூன்


 

ஈரலை சுத்தம் செய்து, உருளைக்கிழங்கை தோல் நீக்கிக்கொண்டு, இரண்டையும் 2 இன்ச் அளவிலான சிறிய துண்டங்களாக வெட்டிக்கொள்ளவும்.
தக்காளி, 3/4 பாகம் வெங்காயம் இரண்டையும் நைசாக நறுக்கி அத்துடன் சேர்த்துக் கொள்ளவும்.
மசாலாத்தூள், மஞ்சள்தூள், மிளகாய்தூள், பாதி இஞ்சி பூண்டு விழுது, உப்பு, தேங்காய் விழுது அனைத்தையும் அதனுடன் சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி, மீதி வெங்காயத்தையும் நைசாக நறுக்கிக் கொண்டு, எண்ணெயை சூடாக்கி அதில் போட்டு தாளிக்கவும்.
வெங்காயம் முறுக ஆரம்பிக்கும் போது, மீதி இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு தாளித்து, பிரட்டி வைத்துள்ள கலவையை கொட்டி 2 நிமிடம் வதக்கிவிட்டு, சுமார் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
வெந்த பிறகு, தண்ணீர் வற்றி திரண்டாற் போல் வரும் போது மல்லிக் கீரையை நைசாக நறுக்கிப் போட்டு, பிரட்டி விட்டு இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்