காலிஃப்ளவர் ஃப்ரை

தேதி: November 23, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

சிறிய காலிஃப்ளவர் - ஒன்று
கடலைமாவு - கால் கப்
அரிசிமாவு - 3 மேசைக்கரண்டி
மக்காச் சோளமாவு - ஒரு மேசைக்கரண்டி
ப்ரெட் தூள் - சிறிதளவு
மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
சிவப்பு கலர் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

முதலில் காலிஃப்ளவரை சிறு சிறு பூக்களாக பிரிக்கவும். பின் உப்பு, மஞ்சள் தூள் கலந்த தண்ணீரில் 10 நிமிடங்கள் போட்டு பின் தண்ணீரில் கழுவிக் கொள்ளவும்.
பின் ஆவியில் 7 நிமிடங்கள் வேகவைத்துக் கொள்ளவும். வெந்த காலிஃப்ளவரோடு கடலைமாவு, அரிசிமாவு, மக்காச்சோள மாவு, ப்ரெட் தூள், மிளகாய் தூள், சிவப்பு கலர், உப்பு போட்டு நன்றாக பிரட்டவும்.
அகலமான வாணலியில் 4 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும் பிரட்டிய காலிஃப்ளவரை போட்டு காலிஃப்ளவர் முறுகும் வரை வதக்கி சூடாக பரிமாறவும்.

மேலும் சில குறிப்புகள்

Comments

முத்துலக்ஷ்மி,

உங்க குறிப்ப பாத்து, காலிஃப்ளவர் ப்ரை செஞ்சு பாத்தேன். ரொம்ப டேஸ்டா இருந்துச்சு:-)
இனிமேல் ஸ்னாக்ஸ்ல, அதிகமா, இந்த காலிஃப்ளவர் ப்ரை இடம்பெரும்:-)

அன்புடன்
ஹர்ஷினி :)

அன்புடன்
ஹர்ஷினி :)

மிகவும் சுவையாக இருந்தது. கலர் மட்டும் சேர்க்கவில்லை. மற்றதெல்லாம் சேர்த்தேன். அரிசிமா, சிவப்பரிசிமாதான் சேர்த்தேன். உடனே சாப்பிட க்ரிஸ்பியா இருந்தது. பிரகு இளகி கொஞ்சம் எண்ணெய் தன்மையாகிவிட்டது. அப்பிடிதான் இருக்குமா? ஆனால் சுவை மிகவும் நல்லா இருந்தது. வாழ்த்துக்களும் நன்றியும்.
-நர்மதா:)

டியர் ஹர்ஷினி & நர்மதா,

நீங்கள் எனது குறிப்பை தேர்ந்தெடுத்து சமைத்து பார்த்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி. பாபு அண்ணா காலிபிளவர் பிரை சொதப்பிவிட்டது என்று குறிப்பிட்டிருந்ததை பார்த்து கஷ்டமாக இருந்தது. சகோதரி நிலா நீங்கள் அதிக நேரம் காலிபிளவரை வேகவைத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். மீண்டும் நீங்கள் இருவரும் பாராட்டியமைக்கு நன்றி....................

உங்க குரலையே ரொம்ப நாளாக் காணோம்மேன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்:-)

உண்மைதான், காலிப்ளவர் ப்ரையை நாங்க கொஞ்சம் சொதப்பிட்டோம்.(உங்க குறிப்புல தப்பு இல்லே. தப்பு எங்க மேல.:) கடலை மாவு அதிகமா போச்சு. நாங்க கப் அளவு, ஸ்பூன் அளவு எல்லாத்துக்கும் ஸ்டேண்டர்டு கப்ஸ், ஸ்பூன்ஸ் யூஸ் பண்றோம். கால் கப் கடலைமாவு நாங்க எடுத்துகிட்ட அளவு காலிப்ளவருக்கு ரொம்ப அதிகமா போச்சு. அடுத்து ப்ரட் தூள் இல்லாம, ஒரு ரஸ்க்கை பொடி பண்ணி சேர்த்துக்கிட்டோம். எப்போதுமே இந்த சிறிதளவு, தேவையான அளவுகள் பிரச்சனைதான். எவ்வளவு தூள் சேர்க்கிறதுன்னு தெரியாம ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்தோம். இதுவும் சொதப்பலுக்கு ஒரு காரணம்.

கடைசியா நாலு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு காலிப்ளவரை போட்டு முறுகும் வரை வதக்கவும்னு இருக்கவும் ரொம்ப நேரம் வதக்கிட்டோம். கடலைமாவு பச்சைவாடை போகவே இல்லை. அதனால இன்னும் ரொம்ப நேரம் வதக்கிற மாதிரி ஆச்சு. தூள்கள் அதிகமா இருந்ததால சட்டி அடிப் பிடிச்சிக்கிட்டே இருந்துச்சு. அதை பிரட்டிவிட, பிரட்டிவிட பூவெல்லாம் உதிர் உதிரா ஆச்சு.

இன்னொரு முறை அதை சரியா செஞ்சிட்டு உங்களுக்கு சொல்றேன். எங்களது செய்முறை இதுதான். எங்க எங்க தப்பு பண்ணியிருக்கோம்னு பாருங்க..

டியர் பாபு அண்ணா,

வணக்கம். நான் 3 மாதம் இந்தியா டிரிப் போய் வந்ததால் அறுசுவையில் பங்கு பெற முடியவில்லை. நீங்கள் படத்தில் குறிப்பிட்டுள்ளதை பார்த்தால் எல்லாமே சரியாக தான் உள்ளது. ரஸ்க்தூள் உபயோகிப்பதால் சுவை இன்னும் கூடும். எண்ணெயின் அளவுதான் கம்மியாக உள்ளது போல் தெரிகிறது. என்னுடைய அளவிலும் தவறுகள் இருக்கலாம். நீங்கள் தேர்ந்தெடுத்து, சமைத்து பதில் அனுப்பியதற்கு மிக்க நன்றி. மீண்டும் சந்திப்போம். நன்றி.

வணக்கம் சகோதரி. உங்களை மீண்டும் அறுசுவையில் பார்ப்பதில் மகிழ்ச்சி.

எண்ணெய் குறைவாக உள்ளது என்று குறிப்பிட்டு இருக்கின்றீர்கள். எங்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே இருந்த ஒரு சந்தேகம், பிரட்டிய காலிப்ளவரை அதிக எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்க வேண்டுமா (கோபி 65 மாதிரி) அல்லது குறைந்த எண்ணெய்யில் பொரியல் செய்வது போன்று வதக்க வேண்டுமா என்பதுதான். நீங்கள் வதக்க வேண்டும் என்றுதான் குறிப்பில் கொடுத்து இருந்தீர்கள்.

ஆனால் இப்போது எண்ணெய் அதிகம் சேர்க்க வேண்டும், ரஸ்க் தூள் சேர்த்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று குறிப்பிடுவதை வைத்துப் பார்த்தால் நீங்கள் எண்ணெய்யில் 65 போல் பொரித்து எடுப்பதைதான் mean பண்ணியிருக்கின்றீர்களா? கொஞ்சம் குழப்பமாக உள்ளது. ஏனென்றால் நாங்கள் வதக்குவதற்கு ஊற்றிய எண்ணெய்யே கொஞ்சம் அதிகம் போல் தோணிற்று. அதோடு மட்டுமன்றி அந்த ரஸ்க் தூள் காலிப்ளவருடன் சேரவேயில்லை. மாவு காலிப்ளவர் எல்லாவற்றையும் ஒன்றாக பிசையும் போது தண்ணீர் ஊற்றவேண்டுமா என்பதும் குறிப்பில் இல்லாததால், முதலில் நாங்கள் தண்ணீர் ஊற்றாமல் சேர்த்தபோது மாவு தனியா இருந்தது. பின்னர் சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்தோம்.

மீண்டும் ஒருமுறை செய்யவேண்டும். சாதாரணமாக கோபி பொரித்து எடுத்து கோபி 65 செய்வது தெரியும். இது அப்படி பொரித்தல் என்று இல்லாமல் வதக்குதல் என்று இருந்ததால், கறி போன்று கொஞ்சம் புதுமையாக இருக்கும் என்று எண்ணி முயற்சி செய்தோம். ரஸ்க் தூளையும், கடலை மாவையும் இன்னும் கொஞ்சம் குறைத்து இருந்தோம் என்றால் மிக நன்றாக வந்திருக்கும் என்று எண்ணுகின்றேன்.

குறிப்புகளை செய்து பார்த்துவிட்டு, குறை கூறுகின்றானே என்று நினைக்காதீர்கள். அனுபவம் இல்லாத நான் செய்கையில் எனக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை நான் இங்கே தெரியப்படுத்த விரும்புகின்றேன். அது புதிதாய் சமைப்பவர்களுக்கு உதவலாம் என்ற நல்லெண்ணத்தில். நீங்கள் சமைத்தீர்கள் என்றால் அது சிறப்பாய் வரும் என்பதை அனைவரும் அறிவர். எனவே இது உங்களைக் குறித்தான விமர்சனம் என்று எடுத்துக் கொள்ளாதீர்கள். எனது அனுபவம். அவ்வளவுதான்.

மீண்டும் உங்கள் பங்களிப்பை தொடங்கி, விரைவில் செஞ்சுரி அடிக்க வாழ்த்துகின்றேன்.

அன்பு தங்கை முத்துலட்சுமி எப்படி இருக்கீங்க? இன்று தங்களின் இந்த குறிப்பை செய்துப் பார்த்தேன். நன்றாக இருந்தது. மீண்டும் அறுசுவையில் தொடர்ந்து உங்களின் பங்களிப்பை தொடரும்படி கேட்டுக் கொள்கின்றேன். நன்றி.

டியர் பாபு அண்ணா,

விரைவில் பதில் அளித்துவிட்டீர்கள். நான் நினைத்தேன் நீங்கள் இந்த கேள்வியை கண்டிப்பாக கேட்பீர்கள் என்று. கண்டிப்பாக இந்த ஃபரை பொரிப்பது அல்ல. வதக்குவது தான். நான் இதை செய்யும் போது தண்ணீர் தெளிக்காமல் தான் பிசைந்தேன். நீங்கள் சிறிது தண்ணீர்தான் சேர்த்திருப்பது போல் தெரிகிறது. இதனால் காலிபிளவர் பிரியாது. நீங்கள் ஊற்றியுள்ள எண்ணெய்க்கு அதிகமான காலிபிளவர் சேர்த்திருப்பது போல் தெரிகிறது. இங்குள்ள காலிபிளவர் கொஞ்சம் கெட்டியாகயுள்ளது அதனால் பிரியாமல் வருகிறது என்று நினைக்கிறேன். நான் உங்களுக்கு மீண்டும் செய்து பார்த்து எதை மாற்ற வேண்டும் என்று சொல்கிறேன். மீண்டும் சந்திப்போம். நன்றி......

அன்பின் முத்துலெக்ஷ்மி, இதை மறுபடியும் இன்று செய்தேன். முன்பைவிட நன்றாக வந்தது. நாலே நாலு மேசைக்கரண்டி எண்ணெய்தான் விட்டேன். நல்லா மொரு மொரு என்று இருந்தது.
இன்னும் 5 குறிப்பு குடுங்களேன். நூறைப் பிடித்து விடலாம் :)
-நர்மதா:)