பீட்ரூட் சட்னி

தேதி: March 10, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (3 votes)

 

பீட்ரூட் - 2
வரமிளகாய் - 4
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
தேங்காய் - ஒரு துண்டு
சின்ன வெங்காயம் - 4
புளி - சிறிதளவு
எண்ணெய்
உப்பு - தேவையான அளவு


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். பீட்ரூட்டை துருவிக் கொள்ளவும், தேங்காயை சிறு துண்டுகளாக்கி வைக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வரமிளகாய் முதல் சின்ன வெங்காயம் வரை உள்ள‌ பொருட்களை வதக்கி ஆற‌வைக்கவும்.
பிறகு அதே வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பீட்ரூட்டை வதக்கி நீர் தெளித்து வேகவைக்கவும்.
வதக்கி ஆறவைத்த பொருட்களுடன் புளி மற்றும் உப்புச் சேர்த்து அரைத்து, பிறகு பீட்ரூட்டையும் அதனுடன் சேர்த்து அரைத்தெடுக்கவும்.
சுவையான‌ பீட்ரூட் சட்னி தயார்.

இங்கு கொடுத்துள்ள அளவைவிட பீட்ரூட்டை குறைவாக‌ச் சேர்த்துள்ளேன். அதனால் நிறம் குறைவாகத் தெரிகிறது. குறிப்பிலுள்ளபடி செய்தால் நன்கு கலராக‌ இருக்கும். பெரிய‌ பீட்ரூட்டாக இருந்தால் ஒன்று சேர்த்தால் போதும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர் கலர்ஃபுல் சட்னி. செய்துருவோம் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறிப்பு அருமை :) வாழ்த்துக்கள் ப்ரியா :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அன்பு பிரியா,

வண்ணமயமான‌ சத்தான‌ சட்னி. பாராட்டுக்கள்.

அன்புடன்

சீதாலஷ்மி

சூப்பர் சட்னி, இதை குழந்தைகளுக்கு கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்.

எளிமையான‌ குறிப்பு,சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அன்பு பிரியா,
கலர்ஃபுல்லான, சத்தான சட்னி!

அன்புடன்,
செல்வி.

ப்ரியா முகப்புல‌ பார்க்கவே அழகா இருக்கு சட்னி, எப்போதும் இப்படி வித்யாசமா சட்னி அரைச்சா நான் மட்டும் தான் சாப்பிடனும் வீட்டுல‌ இன்னக்கி எல்லாருக்குமே பிடிச்சிருந்தது நல்லா இருக்கு ப்ரியா நன்றி

கலர்ஃபுல் சட்னி. நல்லாருக்கு ப்ரியா.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நான் இதுவரை பிட்ரூட் ல் சட்னி செய்ததில்ல,இமுறையில் செய்துப் பார்க்கிறேன்.