ஆட்டுக்குடல் வறுவல்

தேதி: March 11, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (3 votes)

 

ஆட்டுக்குடல் - முக்கால் கிலோ
சின்ன வெங்காயம் (அ) பெரிய வெங்காயம் - அரை கிலோ
பச்சை மிளகாய் - 10
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
தேங்காய்ப்பூ - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். ஆட்டுக்குடலை கல் உப்பு போட்டுத் தேய்த்து ஓடும் நீரில் (Running Water) நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
குக்கரில் ஆட்டுக்குடலுடன் சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் வேக வைக்கவும்.
வெந்ததும் தண்ணீரை வடிகட்டிவிட்டு குடலைத் தனியாக எடுத்து வைக்கவும்.
கடாயில் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் வேக வைத்த குடலைச் சேர்த்து, மிளகாய்த் தூள், கரம் மசாலா மற்றும் உப்புச் சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்கவும்.
பிறகு தேங்காய்ப்பூவைச் சேர்த்துக் நன்கு கிளறிவிடவும்.
தீயின் அளவை அதிகரித்து 5 நிமிடங்கள் கைவிடாமல் கிளறி, ட்ரையானதும் இறக்கவும்.
சுவையான ஆட்டுக்குடல் வறுவல் தயார்.

இதற்கு சின்ன வெங்காயமும், தேங்காயும் தான் அதிக சுவை சேர்க்கும். இந்த வறுவலை மறுநாள் வைத்து உண்டால் அதிக ருசியாக இருக்கும். இதை மெத்தென்று சுட்ட தோசையினுள் வைத்து ரோல் செய்து சாப்பிட சுவையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சத்தியமா இதை நான் ட்ரை பண்றேன்னு சொல்ல மாட்டேன் ;) ஏன்னா எனக்கு இது போல ஐட்டம் எல்லாம் பயம், சமைச்சதும் இல்லை, சாப்பிட்டதும் இல்லை. ஆனாலும் உங்க படம் என்னை இங்கே கூட்டி வந்துடுது. :) வித்தியாசமான குறிப்பும் தான். கலக்குங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறிப்பு அருமை வாணி. வனி மாதிரிதான் நானும் இதெல்லாம் ட்ரை பண்றதில்லை. வீட்ல யாரும் சாப்பிட மாட்டாங்க. படங்கள் சூப்பரா இருக்கு.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

அடடா, வாயில் எச்சில் ஊறுதுங்க‌!! எங்க‌ வீட்டிலும் இதே மாதிரி தான் செய்வாங்க‌. அப்பப்ப‌ ரத்தமும் சேர்த்து செய்வாங்க. இது எனக்கு பிடித்த‌ உணவு. நான் எப்ப‌ ஊருக்கு போனாலும்,எங்க‌ அம்மா இதை அடிக்கடி செய்வாங்க‌!. ஆனா, எனக்கு இங்க‌ கிடைக்காது அது தான் பெரிய‌ சோகம் :(..

அன்புடன்
உஷா

அன்புடன்
உஷா

வனி நானும் திருமணத்திற்க்கு முன் வரை இதையெல்லம் பார்த்தது கூட இல்லை, ஆனால் என் கணவருக்காக சமைக்க கற்றுக் கொண்டேன்,
ஊக்கமளிக்கும் பதிவிற்க்கு மிக்க நன்றி

உங்கள் பின்னூட்டத்திற்க்கு மிக்க நன்றி உமா

என் கணவரும் சொல்வார்,இதில் ரத்தமும் சேர்த்து வறட்டுவாங்கன்னு. உங்க பின்னூட்டம் பார்த்ததில் மகிழ்ச்சி உஷா, நன்றி

ஆஹா... எப்படா ஊருக்கு போய் இத சாப்பிட போறோம் நு நினைச்சுட்டு இருக்கற எனக்கு வாயில் உமிழ் நீர் ஊரும் அளவு படங்களை போட்டு அசத்திடீங்க.. கண்ணுக்கு எட்டினது வாய்க்கு எட்டாம போச்சே ;-(

ஊருக்குப் போகும் போது நிச்சயம் இதே போன்று செய்து பாருங்கள்.
பதிவிற்க்கும்.பின்னூட்டத்திற்க்கும் நன்றி