Help me pls

Yanaku normal delivary.so stomacha nalla irukama clotha vachei kattitanga.but yanaku stomach paina iruku.yathanai naatkaluku ippadi kattikanum?stomach cinnatha aahidu ma?weighta yappadi reduce panradu?consive ku before yan weight 57 after 78.pls help me.

அன்பு ஹஃப்ரா,

குழந்தை பிறந்து ஒரு மாதம்தான் ஆகுதுன்னு நினைக்கிறேன். நிறைய‌ இழைகள் தொடங்கி இருக்கீங்க‌. நீங்க‌ ஏற்கனவே ஆரம்பித்திருக்கும் இழையிலேயே தொடர்ந்து கேளுங்க‌. அதே போல‌ தமிழில் பதிவு போட்டீங்கன்னா, தோழிகள் வந்து பதில் சொல்ல‌ வசதியாக‌ இருக்கும்.

மன்றத்தில் நீங்க‌ கேட்டிருக்கும் நிறைய‌ கேள்விகளுக்கு பதில் இருக்கு. நேரம் கிடைக்கிறப்ப‌, பொறுமையாகப் பாருங்க‌.

இப்ப‌ குழந்தைக்கு பால் கொடுப்பது, குழந்தையை கவனிப்பது இதெல்லாம்தான் முக்கியம்.

உங்க‌ எடை குறைப்புக்கு இப்ப‌ அவசரப்படாதீங்க‌. பொதுவாக‌, குழந்தை பிறந்த‌ பின், பீரியட்ஸ் ரெகுலராக‌ வர‌ ஆரம்பித்ததும், வயிறு , எடை எல்லாம் குறையும்.

தமிழில் தட்டச்சு செய்வது எப்படி என்பதை கீழே இருக்கும் லிங்க் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

http://www.arusuvai.com/tamil/node/27437

நீங்க‌ கொடுக்கும் தலைப்பையும் பொதுவாக‌ ஹெல்ப் என்றில்லாமல், குழந்தை வளர்ப்பு, எடை குறைப்பு இந்த‌ மாதிரி தலைப்பு கொடுத்தீங்கன்னா, தோழிகள் உடனே வந்து பார்க்கவும், பதில் சொல்லவும் வாய்ப்பு இருக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி

மேலும் சில பதிவுகள்