உருளை குடைமிளகாய் வறுவல்

தேதி: March 14, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (4 votes)

திருமதி.சித்ரா துரை அவர்களின் குறிப்பைப் பார்த்துச் செய்த குறிப்பு இது.

 

உருளைக்கிழங்கு - 4
குடைமிளகாய் - 3
வெங்காயம் - 2
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 5
சோம்பு - ஒரு மேசைக்கரண்டி
மஞ்சள் பொடி - ஒரு தேக்கரண்டி
மிளகு பொடி - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க


 

தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். குடைமிளகாயை துண்டுகளாக்கி வைக்கவும். உருளைக்கிழங்கை தோல் சீவி வேக வைத்து நறுக்கிக் கொள்ளவும்.
சோம்பு, இஞ்சி, பூண்டு விழுது, காய்ந்த மிளகாய் மூன்றையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த கலவையை வேக வைத்து நறுக்கிய உருளைக்கிழங்குடன் சேர்த்து பிசறி 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
வாணலியை எண்ணெய் விட்டு காய்ந்ததும், தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து, வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் குடைமிளகாய், மஞ்சள் பொடி மற்றும் உப்புச் சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும்.
பிறகு உருளைக்கிழங்கு கலவை மற்றும் மிளகு பொடி சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் வதக்கவும்.
மசாலா பச்சை வாசனை குறைந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். (நான் வாணலியை மூடி வைத்து இடையிடையே கிளறிவிட்டேன்).
சுவையான உருளை குடைமிளகாய் வறுவல் தயார். தயிர் சாதம் முதல் அனைத்து வகையான கலந்த சாதத்துடனும் லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுத்துவிட ஏற்ற சைட் டிஷ் இது. சாம்பார், ரசம் சாதத்திற்கும் தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இப்படி படமெடுத்து போட்டா யார் தான் செய்ய மாட்டாங்க? சூப்பர். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாணி அக்கா,
பார்க்கவே சூப்பரா இருக்கு, சாப்பிடனும் போல‌ இருக்கு.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

பார்க்கவே அருமையா இருக்கு. இன்னைக்கே ட்ரை பண்ணிட்டு சொல்றேன்.
-விஜி

ஊக்கமளிக்கும் கருத்திற்க்கு நன்றி வனி

வருகைக்கும்,பதிவிற்க்கும் நன்றி

அவசியம் டிரை பண்ணுங்க விஜி , thank you

கலர்ஃபுல் வறுவல்......... அருமை வாணி....

அன்பு வாணி,

பட்டுச்சேலை கலர் காம்பினேஷன் மாதிரி கலர்ஃபுல்லா செய்திருக்கீங்க‌, அருமையாக‌ இருக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி

Vani Sister ,,
verity dish ah இருக்கு try பன்னி சாப்ட்டே ஆகனும்,, அக்கா, pictures பாக்கிரப்ப்ப‌ , so colour full,,,,,,,,,,,,

yours lovable
Maha

வாணி வறுவல் பார்க்கும் போதே வாயூறுது, ஃபோட்டோஸ் பளிச்னு அழகா எடுத்திருக்கீங்க :) உங்களுக்கும், சித்ராதுரை அவர்களுக்கும் வாழ்த்துக்கள் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

வறுவல் நல்லாருக்கு வாணி. விருப்பபட்டியலில் சேர்த்துருக்கேன் செய்துட்டு சொல்றேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

வருகைக்கும், பதிவிற்க்கும் நன்றி பிரியா

\\பட்டுச்சேலை கலர் காம்பினேஷன்// எப்படி இப்படியெல்லாம் அட்டகாசமா யோசிக்கிறீங்க சீதா மேடம். நன்றி

அவசியம் டிரை பண்ணுங்க
நன்றி

வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி அருள்

செய்து பார்த்துட்டு சொல்லுங்க உமா, நன்றி

இந்த சுவையான குறிப்பினை அறுசுவைக்கு கொடுத்த திருமதி, சித்ரா துரை அவர்களுக்கு தோழிகள் சார்பிலும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.