சிக்கன் பிரியாணி

தேதி: March 15, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

சீரகச் சம்பா அரிசி - 3 கப்
பெரிய துண்டுகளாக நறுக்கிய சிக்கன் - அரை கிலோ
சிறிய துண்டுகளாக நறுக்கிய சிக்கன் - 150 கிராம்
நறுக்கிய உருளைக்கிழங்கு - ஒன்று (பெரியது)
பெரிய வெங்காயம் - கால் கிலோ
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிதளவு
தயிர் - அரை கப்
தேங்காய்ப்பால் - ஒரு கப்
புதினா - ஒரு கட்டு
கொத்தமல்லித் தழை - ஒரு கட்டு
இஞ்சி, பூண்டு - தலா 25 கிராம்
பிரியாணி மசாலா தூள் - 3 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரைத் தேக்கரண்டி
ஃபுட் கலர் - அரைத் தேக்கரண்டி
ஏலம் - 2
கிராம்பு - 3
பட்டை - ஒரு துண்டு
ஜாதிக்காய் - ஒரு துண்டு (கால் பாகம்)
எண்ணெய் - 5 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

வெறும் வாணலியில் ஏலம், கிராம்பு, பட்டை மற்றும் ஜாதிக்காயை வாசம் வரும் வரை வறுத்து இஞ்சி, பூண்டுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், 2 தக்காளி ஆகியவற்றை நறுக்கி வைக்கவும். புதினா மற்றும் கொத்தமல்லித் தழையை சுத்தம் செய்து வைக்கவும்.
சிறிய துண்டுகளாக நறுக்கிய சிக்கனுடன் அரைத் தேக்கரண்டி அளவு அரைத்த இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்புச் சேர்த்து கலந்து ஒரு மணித்தியாலங்கள் ஊறவைக்கவும். பெரிய துண்டுகளாக நறுக்கிய சிக்கனுடன் மீதமுள்ள இஞ்சி, பூண்டு விழுது, தயிர், கரம் மசாலா தூள், கால் தேக்கரண்டி ஃபுட் கலர், தேவையான அளவு உப்புச் சேர்த்து கலந்து 3 மணித்தியாலங்கள் ஊறவைக்கவும்.
புதினா மற்றும் கொத்தமல்லித் தழையுடன் மீதமுள்ள ஒரு தக்காளியைச் சேர்த்து விழுதாக அரைத்து வைக்கவும்.
உருளைக்கிழங்கு மற்றும் சிறிய துண்டுகளாக நறுக்கி ஊறவைத்த சிக்கன் ஆகியவற்றைப் பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
அரிசியை சுத்தம் செய்து 2 தேக்கரண்டி அளவு அரைத்து வைத்துள்ள புதினா, கொத்தமல்லித் தழை விழுது, தேங்காய்ப்பால், 4 கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்புச் சேர்த்து முக்கால் பதமாக வேகவிட்டு சாதத்தை எடுத்துக் கொள்ளவும். (அரிசியை ஊற வைக்கத் தேவையில்லை. ரைஸ் குக்கர் (அ) ஃப்ரஷர் குக்கரில் சாதத்தை வேகவிடவும்).
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் மீதமுள்ள புதினா, கொத்தமல்லித் தழை விழுது சேர்த்து எண்ணெய் பிரிய வதக்கவும்.
பிறகு பெரிய துண்டுகளாக நறுக்கி ஊறவைத்த சிக்கனைச் சேர்த்து 10 நிமிடங்கள் வதக்கி பிரியாணி மசாலா தூள் சேர்த்து மிதமான தீயில் வைத்து மூடிபோட்டு வேகவிடவும். (தண்ணீர் சேர்க்க வேண்டாம். சிக்கனில் உள்ள தண்ணீரிலேயே வேகவிடவும்).
சிக்கன் வெந்து எண்ணெய் பிரிந்து கிரேவி பதம் வந்ததும் உப்பு சரிபார்த்து இறக்கி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் சிறிது சாதத்தை பரவலாகப் போட்டு, அதன்மீது சிறிதளவு சிக்கன் கிரேவியை பரவலாக வைக்கவும்.
இதேபோல் சிறிது சாதம், சிறிது கிரேவி என மாற்றி மாற்றி போடவும். (மேலே சாதம் வருமாறு முடிக்கவும்). அதன்மேல் மீதியுள்ள ஃபுட் கலரைக் கரைத்து ஊற்றி பொரித்த சிக்கன் மற்றும் உருளைக்கிழங்கை பரவலாக வைத்து இறுக மூடி, அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அதன்மீது இந்த பாத்திரத்தை வைத்து 20 நிமிடங்கள் தம்மில் வைத்தெடுத்து கவனமாகக் கிளறிவிடவும். (சாதத்துடன் கிரேவியைக் கலந்து கொண்டும் தம்மில் வைக்கலாம்).
சூடான, சுவையான சிக்கன் பிரியாணி தயார். தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

hai Uma sister என்னோட fav பிரியானி சூபெர் வாழ்துக்கள்
by Elaya.G

பிரியாணியை மட்டும் எத்தனை விதமா சொல்லி கொடுத்தாலும் நான் அட்டம்ப்ட் அடிப்பேன் ;) இதையும் ட்ரை பண்ணிடுறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

செய்முறை நல்லா இருக்குங்க.... நல்லா மணம்மா இருக்கும் போல‌... சூப்பர்......

உமா புதுவிதமான ப்ரியாணி குறிப்பு அருமை :) அசத்தறீங்க வித்யாசமான குறிப்புகள் கொடுத்து வாழ்த்துக்கள் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

உமா பிரியாணி பார்க்கவே அப்படியே சுண்டி இழுக்குது, டெஸ்ட் நிச்சயம் அட்டகாசமா இருக்கும் நான் ஒரு பிரியாணி பிரியை, செய்து பார்த்து சாப்பிட்டு சொல்றேன் உமா அவசியம்.

உங்க பிரியானி மூக்கத்துழைக்குது இப்பவே செஞ்சு சாப்பிடனும் போல இருக்கு வி.பட்டியலில் சேர்த்திருக்கன்

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

அனைவரின் பதிவுக்கும், பாராட்டுக்கும் என் அன்பான நன்றிகள் தோழிஸ். கண்டிப்பா செய்துட்டு பதிவு போடுங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

இந்த பிரியாணி நேற்று செய்தேன், பொரித்த துண்டுகளுடம் சுவையும் பிரமாதம்

செய்து பார்த்து பதிவிட்டதுக்கு நன்றி வாணி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நாமே மசாலா அரைத்து பிரியாணி செய்யும் போது,அது தனி சுவைதான்.சூப்பர் பிரியாணி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நன்றி முசி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

அன்பு உமா,
இந்த‌ முறை வித்தியாசமா இருக்கு. முயற்சித்து பார்க்கிறேன்.

அன்புடன்,
செல்வி.

நன்றி அக்கா. செய்துட்டு சொல்லுங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா