பூரணக் கொழுக்கட்டை

தேதி: March 17, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

 

பச்சரிசி மாவு - ஒரு கப்
உருண்டை வெல்லம் - அரை கப்
தேங்காய் - ஒரு மூடி
உப்பு - கால் தேக்கரண்டி
உருக்கிய நெய் - 2 தேக்கரண்டி
ரீஃபைண்ட் ஆயில் - 2 தேக்கரண்டி
ஏலக்காய்ப் பொடி - சிறிது
கொழுக்கட்டை அச்சுக்கள்


 

தேவையானப் பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
வெல்லத்தை தூள் செய்து கொள்ளவும், தேங்காயைத் துருவி, ஒரு கப் அளவு எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் சிறிது நெய் ஊற்றி தேங்காய் துருவலைப் போட்டு வாசனை வரும் வரை வதக்கவும்.
அதனுடன் வெல்லத்தையும் சேர்த்து மிதமான தீயில் வைத்து, வெல்லம் இளகி தேங்காயுடன் சேரும் வரை கிளறவும். பிறகு ஏலக்காய்ப் பொடியையும் சேர்த்துக் கிளறிவிடவும். பூரணம் தயார்.
அகலமான பாத்திரத்தில் பச்சரிசி மாவுடன் உப்பு போட்டு, தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து சிறிது சிறிதாக மாவில் ஊற்றி கரண்டிக் காம்பால் நன்கு கிளறவும். மாவு கொழுக்கட்டை உருட்டும் பதத்திற்கு வரும் வரை கிளறவும். (ஒரு கப் மாவிற்கு இரண்டு கப் தண்ணீர்).
தயார் செய்துள்ள பூரணத்தை நெல்லிக்காய் அளவில் சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
பிசைந்த பச்சரிசி மாவை சற்று பெரிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
கையில் சிறிது எண்ணெய் தடவிக் கொண்டு பச்சரிசி மாவு உருண்டையை உள்ளங்கையில் வைத்து தட்டை போல மெல்லியதாகத் தட்டி, கொழுக்கட்டை அச்சில் வைத்து, அதன் நடுவில் பூரணத்தை வைத்து, நன்றாக அழுத்தி மூடவும்
இதேபோல் அனைத்து உருண்டைகளையும் தட்டை போல தட்டி, பூரணத்தை உள்ளே வைத்து கொழுக்கட்டைகளாகத் தயார் செய்து, இட்லித் தட்டில் வைத்து வேகவிட்டு எடுக்கவும்.
சுவையான பூரணக் கொழுக்கட்டை தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நான் தான் முதல்ல... கொழுக்கட்டை எனக்கு தான். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கும், வனி அக்காவுக்கும் 50-50.. வனி அக்கா கோவிச்சுக்க மாட்டாங்க..

கலை

கொழுக்கட்டை அருமை சீதாம்மா. அடுத்த தடவை செய்றப்போ எனக்கும் வேணும்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

கலை.. “என்ன நல்லவன்னு சொல்லிட்டீங்களே” [இதை வடிவேல் வாய்ஸ்லயே படிச்சுக்கங்க]. உமா... உங்களுக்கும் ஒரு ஷேர் இப்பவே தரோம்... :) உங்களுக்குலாம் இல்லாமலா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பூரணக்கொழுக்கட்டை சூப்பர்:) இது போன்ற‌ அச்சு இனிமேதான் வாங்கணும், பாத்திரக்கடைகளில் கிடைக்குமல்லவா சீதாமேடம் ?

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கொழுக்கட்டை பார்த்ததும் சாப்பிட ஆசைதான், சோமாசி அச்சு உள்ளது,நிச்சயம் செய்துப் பார்க்கிறேன்

கொழுக்கட்டை யை வாய் சாப்பிட முன் கண் சாப்பிட்டு விட்டது சாப்பிடாமலே கொமன்ட்ஸ் தர்ரன் நல்லாருக்கு வீட்ல சர்கரை மட்டும் தான் கம்மி வாங்கினதும் செய்துடனும்

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

MOm , பூரணக் கொழுக்கட்டை சாப்டற ஆசை வந்துருச்சு மா,அச்சு நான் இப்ப‌ தா பாக்கற, அம்மா கையில‌ தா பன்னுவாங்க, இது இப்ப‌ தா பாக்கற மா,

Yours Lovable
Maha

பூரணக்கொழுக்கட்டை அருமை படங்கள் சூப்பரோ சூப்பர். எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச இனிப்பு இது.

அன்பு வனி,

முதல் பதிவுக்கு மிகவும் நன்றி. எடுத்துக்கோங்க‌. எல்லோருக்கும் கொடுக்கத்தான் செய்திருக்கோம், சரியா.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு கலை,

பதிவுக்கு மிகவும் நன்றி. எடுத்துக்கோங்க‌. வனி கோவிச்சுக்கவே மாட்டாங்க‌. எல்லோருக்கும் கொடுக்கத்தான் செய்திருக்கோம், சரியா.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு உமா,

உங்களுக்கு இல்லாமலா, இப்பவே எடுத்துக்கோங்க‌.

பதிவுக்கு மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு அருள்,

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

எல்லா பாத்திரக் கடைகளிலும் கிடைக்கும். ப்ளாஸ்டிக்கிலும் கிடைக்கிறது என்று நினைக்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு வாணி,

பதிவுக்கு மிகவும் நன்றி. சோமாசி அச்சிலும் செய்யலாம், நன்றாக‌ இருக்கும். செய்து பாருங்க‌.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு ஜனாதுல்,

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி. செய்து பார்த்து சொல்லுங்க‌.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு மஹா,

நாங்களும் கையினால் செய்து, பூரணம் வைத்து, மடித்து, வேக‌ வைத்து, செய்வதுண்டு. இப்ப‌ அச்சு வாங்கியதும் கொஞ்சம் சுலபமாக‌ இருக்கு.

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு உமாகுணா,

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

சீத்தாம்மா,
எங்க‌ அம்மாவும் இது போல‌ தான் செய்வாங்க‌,
ஆனா கடலைபருப்பு வேகவைத்து அதுல பாகு சேர்த்து செய்வாங்க‌.
எங்க‌ ஆளு வினாயருக்கு பிடிச்சதுனால‌ எனக்கும் கொளுகட்டைனா ரொம்ப‌ பிடிக்கும்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

அன்பு சுபி,

கடலைப்பருப்பு பூரணமும் ஒரு தனி ருசிதான்.

பதிவுக்கு மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

கொழுகட்டை பார்க்கவே பழபழன்னு சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அன்பு சீதாலட்சுமி,
கொழுக்கட்டை என்னை மாதிரி கொழுகொழுன்னு இருக்கு;)

ஒரு சின்ன‌ ஆலோசனை. தப்பா எடுத்துக்காதீங்க‌.. வெள்ளை கொழுக்கட்டையை டார்க் கலர் பிளேட்ல‌ வச்சு எடுத்து இருந்தா இன்னும் எடுப்பா இருந்திருக்கும்.

அன்புடன்,
செல்வி.

அன்பு செல்வி மேடம்,

நல்ல யோசனை, இனி புகைப்படம் எடுக்கறப்ப, தட்டுக்களின் நிறத்திலும் கவனம் வைக்கிறேன். நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி