கொத்து ரொட்டி

தேதி: March 17, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (3 votes)

 

ப்ரெட் - 10 துண்டுகள்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
கேரட் - ஒன்று
குடைமிளகாய் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
முட்டை - 2
கொத்தமல்லித் தழை - சிறிது
எலுமிச்சை சாறு - சிறிது
எண்ணெய், உப்பு - தேவையான அளவு


 

வெங்காயம், பச்சை மிளகாய், குடைமிளகாய், தக்காளி மற்றும் கொத்தமல்லித் தழையைப் பொடியாக நறுக்கி வைக்கவும். கேரட்டை துருவிக் கொள்ளவும்.
ப்ரெட்டை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் குடைமிளகாய் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி, தக்காளி மற்றும் கேரட்டை சேர்த்து வதக்கவும். (நான் இத்துடன் சாசேஜ் கறி சேர்த்துள்ளேன்).
வதங்கியதும் கரம் மசாலா தூள், கொத்தமல்லித் தழை மற்றும் உப்புச் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் முட்டையை உடைத்து ஊற்றவும்.
பிறகு ப்ரெட்டைச் சேர்த்து நன்கு பிரட்டிவிட்டு, கடைசியாக எலுமிச்சை சாறு சேர்த்து கிளறிவிட்டு இறக்கவும்.
ருசியான கொத்து ரொட்டி தயார். சூடாகப் பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரொம்ப சிம்பிள் & சூப்பர். :) ட்ரை பண்றேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஈசி ரெசிபி. சூப்பர்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

காய்கறிகள் போட்டு எளிதா சொல்லியிருக்கீங்க‌, படங்கள் அழகா வந்திருக்கு :)
வாழ்த்துக்கள் முசி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

சுலபமான டிபன் அயிட்டம். கிட்டத்தட்ட இதே முறையில் நான் சப்பாத்தியில் செய்வேன், படங்களுடன் அனுப்பியுள்ளேன்.அடுத்த முறை பிரட் ல் செய்கிறேன்

வித்தியாசமான குறிப்பா இருக்கே, இப்படி ஒரு குறிப்பு நான் சுவைத்ததே இல்ல, பார்த்ததே இல்ல. சாசேஜ் என்றால் என்ன முசி.

முசி,சூப்பர்.நானும் இதேபோல தான் செய்வேன்.ஆனால் குடைமிளகாய்,சாசேஜ் சேர்க்கமாட்டேன்.சாசேஜ் சேர்தால் சூப்பரா இருக்கும்னு நினைக்கிறேன்.

அன்பு முசி,

ப்ரெட் டோஸ்ட் செய்வதற்காக‌ வாங்கும்போது, கண்டிப்பாக‌ கொஞ்சம் மிச்சம் ஆகும். இந்த‌ முறையில் செய்வதற்கு நல்லதொரு வித்தியாசமான‌ குறிப்பு.

அன்புடன்

சீதாலஷ்மி

குறிப்பை வெளியிட்ட‌ அட்மின் மற்றும் குழுவிர்க்கு நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

முதல் பதிவிற்க்கும்,வாழ்த்திர்க்கும் நன்றி.வனி.
நன்றி,உமா.
வாழ்த்திர்க்கு மிக்க‌ நன்றி,அருள்.
நன்றி;வாணி.உங்க‌ குறிப்பிர்க்கும் ஆவலாக‌ உள்ளேன்.
நன்றி,சாஸேஜ் என்று கூகிளில் தேடி பாருங்க‌.அது ஒரு வித‌ ரெடிமேட் அரைத்த‌ கறி.உமாகுணா.
நன்றி,கலை.சாஸேஜ் சேர்த்து செய்து பாருங்க‌.நல்லா இருக்கும்.
பராட்டிர்க்கு நன்றி,சிதாம்மா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அன்பு முசி,
கொத்து ரொட்டி சுலபமா இருக்கு. அடிக்கடி நாங்க‌ பிரெட் வாங்கறது தான். செய்து பார்க்கிறேன்.

அன்புடன்,
செல்வி.

பதிவிர்க்கும் மிக்க‌ நன்றி,அக்கா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

பார்க்கவே நன்றாக உள்ளது

வாவ் சூப்பர் நானும் இதற்கு முன் இந்த METHOD ல் 2 முறை செய்திருக்கேன் BUT குடைமிளகாய் கேரட் கரம் மசாலா சேர்த்து செய்ததில்லை 1 தடவை மசாலா சேர்க்காமலும் மற்றொரு முறை MAGGI MASALA சேர்த்தும் செய்திருக்கேன் இன்று மாலையே இந்த முறையில் TRY பண்ணுகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்

பதிவிர்க்கு மிக்க‌ நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அலைக்கும் சலாம்.பதிவிர்க்கு நன்றி,அவசியம் செய்து பாருங்க‌,தனி ருசியா இருக்கும்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.