ப்ரோக்கோலி கூட்டு

தேதி: March 18, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

ப்ரோக்கோலி - பாதி
பாசிப்பருப்பு - ஒரு கைப்பிடி
சின்ன வெங்காயம் - 4
தக்காளி - ஒன்று
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகு - 6
அரிசி - 3 தேக்கரண்டி
தேங்காய் - 3 கீற்று (துருவல் என்றால் 3 மேசைகரண்டி)
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
பூண்டு - 4 பல்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 10 இலைகள்
சீரகம் - கால் தேக்கரண்டி


 

தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும். ப்ரோக்கோலியை நறுக்கி வெந்நீரில் போட்டு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பைக் கழுவி வைக்கவும். வெங்காயத்தை வட்டமாகவும், தக்காளியை நீளமாகவும் நறுக்கிக் கொள்ளவும்.
வெறும் வாணலியில் அரிசி, சீரகம், மிளகு ஆகியவற்றைப் பொரியும் வரை வறுத்தெடுத்து ஆறவைக்கவும்.
ஆறியதும் தேங்காய் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
குக்கரில் பாசிப்பருப்புடன் ப்ரோக்கோலி, பூண்டு, வெங்காயம், தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்புச் சேர்த்து 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி 3 விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கி வைக்கவும்.
ஆவி அடங்கியதும் குக்கரைத் திறந்து அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்து கூட்டு கெட்டியானதும் ஒரு கரண்டி எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் போட்டு பொரிந்தவுடன் கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கூட்டில் சேர்க்கவும்.
சுவையான ப்ரோக்கோலி கூட்டு தயார். சாதம், சப்பாத்தி, தோசைக்கு பொருத்தமாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கூட்டு நல்லா செய்து இருக்கிங்க‌,அருமை.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

கம கம கூட்டு சூப்பர் அக்கா.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

வாசமான கூட்டு... நல்லா இருக்குங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

செல்விக்கா ப்ரோக்கோலி கூட்டு பார்க்கவே நல்லா இருக்கு :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அன்பு முசி,
மிக்க நன்றி. டேஸ்டும் பாருங்க‌.

அன்புடன்,
செல்வி.

அன்பு உமா,
உண்மையில் ரொம்ப‌ மணமாக‌ இருக்கும் இந்த‌ கூட்டு.

அன்புடன்,
செல்வி.

அன்பு வனி,
பதிவுக்கும், பாராட்டுக்கும் நன்றி.

அன்புடன்,
செல்வி.

அன்பு அருட்செல்வி,
பார்க்க‌ மட்டும் இல்லை, சுவையும் நல்லா இருக்கும்.

அன்புடன்,
செல்வி.

புரோக்கோலி எனக்கு ரொம்பப் பிடிக்கும்,இந்த முறையில் செய்ததில்லை,நிச்சயம் செய்து விடுகிறேன், செல்வி மேடம்

அன்பு செல்வி மேடம்,

சத்தான‌ சுவையான‌ ரெசிபி தந்திருக்கீங்க‌. அவசியம் செய்து பார்க்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு வாணி,
எனக்கும் ரொம்ப‌ பிடிக்கும். இதுக்காகவே வாராவாரம் அந்தக் கடைக்கு போவேன். அங்கே மட்டும் தான் தவறாமல் கிடைக்கும்.செய்து பாருங்க‌. பிடிக்கும்.

அன்புடன்,
செல்வி.

அன்பு சீதாலஷ்மி,
அவசியம் செய்து பாருங்க‌. கான்சர் எதிர்ப்பு சக்தி இதில‌ நிறைய‌ இருக்குன்னு சொல்றாங்க‌. நல்லதும் கூட‌.

அன்புடன்,
செல்வி.

இன்றக்கு மதியம் உங்க ஃப்ரோக்கொலி கூட்டு செய்தேன்,நல்லா இருந்தது.இதுவரை நிறைய முறை ஃப்ரொக்கோலி வாங்கி சமைத்ததுண்டு , ஆனால் கூட்டு செய்தது இதுவே முதல் தடவை,சுவையான குறிப்பிற்க்கு நன்றி மேடம்