பிஸிபேளாபாத்

தேதி: November 28, 2006

பரிமாறும் அளவு: 5நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

பச்சரிசி - இரண்டரைக் கோப்பை
துவரம்பருப்பு - ஒரு கோப்பை
முருங்கைக்காய் - இரண்டு
கேரட் - ஒன்று
பீன்ஸ் - ஒரு கைப்பிடி
பச்சை வேர்க்கடலை - ஒரு கோப்பை
பச்சை மக்காச்சோளம் - அரைக்கோப்பை
வெங்காயம் - இரண்டு
தக்காளி - இரண்டு
புளி - எலுமிச்சையளவு
தேங்காய்ப்பூ - அரைக்கோப்பை
மிளகு சீரகம் - தலா அரைதேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரைதேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
சாம்பார் பொடி - மூன்று தேக்கரண்டி
காய்ந்தமிளகாய் - இரண்டு
பட்டை - இரண்டு துண்டு
கிராம்பு - இரண்டு
மராட்டிமொக்கு - ஒன்று
உப்புத்தூள் - மூன்று தேக்கரண்டி
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
கொத்தமல்லி - ஒரு பிடி
எண்ணெய் - கால் கோப்பை
நெய் - கால் கோப்பை


 

அரிசியையும், பருப்பையும் நன்கு கழுவி அரைமணி நேரம் ஊறவைக்கவும். பிறகு அவற்றை குக்கரில் போட்டு மஞ்சள்தூள், பெருங்காயத்தூளை சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். குழைய வேக வைக்க வேண்டாம்.
புளியை ஊறவைத்து கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.
மிளகு சீரகத்தை சட்டியில் போட்டு பொரியவிட்டு அதனுடன் தேங்காய்ப்பூவையும் போட்டு வதக்கி மையாக அரைத்துக் கொள்ளவும்.
வெங்காயம் தக்காளியை நறுக்கி கொள்ளவும்.
காய்களை வேண்டிய அளவிற்கு நறுக்கி கொண்டு அதனுடன் வேர்கடலை, மக்காச்சோளத்தையும் சேர்த்து அரைவேக்காடாக வேகவைத்து வடித்து வைக்கவும்.
வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி காயவைத்து காய்ந்தமிளகாய் மற்றும் வாசனைப் பொருட்களைப் போட்டு வறுத்து, வெங்காயத்தைப் போட்டு நன்கு வறுக்கவும்.
பிறகு புளிக்கரைசலை ஊற்றி அதனுடன் தக்காளி, வேகவைத்த காய்கள், சாம்பார் பொடி, மற்றும் தேங்காய் விழுது ஆகியவற்றை சேர்த்து உப்பை போட்டு காய்கள் வெந்த நீரை சிறிது ஊற்றி நன்கு கிளறி வேகவிடவும்.
ஐந்து நிமிடம் கழித்து இதனுடன் வெந்த சோற்றையும் சூடாக்கிய நெய்யையும் ஊற்றி நன்கு கிளறி விட்டு கொத்தமல்லியைத் தூவி சூடாக பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

டியர் மனோகரி மேடம்,

இன்று இந்த ரெஸிப்பியை வைத்து பிஸிபேளாபாத் செய்தேன். ரொம்ப ரொம்ப ஜோராக நன்றாக இருந்தது. என் கணவர் ஏதாவது ரெடிமேட் பவுடர் யூஸ் பண்ணி செய்தாயா? இல்லை, எல்லாமே ஸ்க்ராச்-சாக செய்தாயா? என்று கேட்டு, ஃபிளேவர் எல்லாம் ரொம்ப நல்லா சூப்பராக வந்து இருக்கு, டேஸ்ட்டும் நல்லா இருக்கு என்று சொல்லி சாப்பிட்டார். நான் உங்க பெயரை சொல்லி, இது புது ரெஸிப்பி என்று சொன்னேன் - குறிப்பை ப்ரிண்ட் எடுத்தும் வைத்து விட்டேன்!. இனி எங்கள் வீட்டில் இதுவும் அடிக்கடி இடம்பிடிக்கும்.! அருமையான இந்த ரெஸிப்பிக்கு ரொம்ப நன்றி மேடம்.

அன்புடன்,
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

டியர் ஸ்ரீ, மிகவும் சந்தோசமாய் இருந்தது உங்க பின்னூட்டம், இனி அடிக்கடி உங்க வீட்டில் பிஸிபேளாபாத் செய்வீர்கள் என்றே நம்புகின்றேன். குறிப்பைச் செய்து பின்னூட்டம் அனுப்பியதற்கு மிக்க நன்றி.

இன்று பிஸிபேளாபாத் செய்தேன் சுவை அருமை. அப்பளமும் ஆனியன் பச்சடியும் வைத்து சாப்பிட்டோம்...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நன்றி இலா இந்த குறிப்பைச் செய்து பின்னூட்டம் அளித்தது மகிழ்வைத் தந்தது, இந்த சாதத்திற்கு ஏதேனும் ஊறுகாய்கூட பொருத்தமாக இருக்கும். நன்றி.