முள்ளங்கி - பார்லி சூப்

தேதி: November 28, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

ரோஸ் முள்ளங்கி - கால் கிலோ
கேரட் - ஒன்று
பார்லி - 150 கிராம்
பால் - 100 மில்லி
மேகிப்பவுடர் - அரை ஸ்பூன்
மிளகுத் தூள் - அரை ஸ்பூன்
மல்லிக்கீரை - 2 கொத்து
உப்பு - ஒரு சிட்டிகை


 

பார்லியை கழுவி அத்துடன் ரோஸ் முள்ளங்கி, கேரட் சேர்த்து வேகவைக்கவும்.
நன்கு வெந்தவுடன் சற்று ஆறவிட்டு, அதை மிக்ஸியின் ஜூஸ் ஜாரில் போட்டு அரைக்கவும்.
பிறகு அத்துடன் பால் கலந்து, மிளகுத்தூள், மேக்கி பவுடர், உப்பு, நைசாக நறுக்கிய மல்லிக்கீரை சேர்த்து ஒரு கொதிவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.


இந்த முள்ளங்கி - பார்லி சூப் உடம்பில் தேங்கும் தேவையில்லாத நீரை வெளியாக்ககூடியது. உடம்புக்கு மிகவும் சத்தானது.

மேலும் சில குறிப்புகள்