சிவப்பு அவல் கிச்சடி

தேதி: March 22, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

சிவப்பு அவல் - 2 கப்
பாசிப்பருப்பு - ஒரு கைப்பிடி
சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 10
தேங்காய்த் துருவல் - ஒரு மேசைக்கரண்டி
கேரட் - ஒன்று
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித் தழை


 

வெங்காயத்தை நீளமாகவும், கேரட்டை பொடியாகவும் நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயையும் நறுக்கிக் கொள்ளவும்.
பாசிப்பருப்பைக் கழுவி மலர வேக வைக்கவும். (குழைந்துவிடக் கூடாது).
அவலை நன்கு களைந்து கல் அரித்து தண்ணீரை லேசாகப் பிழிந்து வைக்கவும்.
அடிகனமான வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப்பருப்பு போட்டு தாளிக்கவும் சிவந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் கேரட் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் அவல், வேக வைத்த பாசிப்பருப்பு மற்றும் உப்புச் சேர்த்து கிளறவும்.
பிறகு தேங்காய்த் துருவல் சேர்த்து கிளறிவிட்டு, கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும். (விரும்பினால் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து கிளறி இறக்கலாம்).
சுவையான, சத்தான சிவப்பு அவல் கிச்சடி ரெடி. காலை டிபனுக்கு மிகவும் நல்லது. வயதானவர்களுக்கு எளிதில் ஜீரணமாகும். வேண்டுமெனில் வேக வைத்த பீன்ஸ், பட்டாணியும் சேர்த்து செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அருமையான ரெசிபி அவல் சாப்பிடுவது உடம்பிற்கு மிகவும் நல்லதுனு எங்க பாட்டி சொல்லுவாங்க ஆனால் அவல் வைத்து எப்படி செய்வதுதான் தெரியாது ஆனால் இனி கிச்சடி செய்ய போறேன். சூப்பர்.

அருமையான அவல் கிச்சடி. நல்லாருக்கு அக்கா.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

Hai Akka ,
அவல் கிச்சடி சூப்பர், நா செய்முறை வைத்து செய்து பார்கிறேன்\

வெள்ளை அவல் தாளிக்கும் முறை லீங்க் இருத்தா சொல்லுங்க‌ frnds,,, office la sir அவல் தாளிது yellow colour la கொண்டு வந்தாரு, சூப்பரா இருந்தது, லீங்க் இருத்தா சொல்லுங்க‌

yours lovable
Maha

அவல் கிச்சடி , சத்தான குறிப்பு ,டிரை பண்ரேன் மேடம்

இங்கே அவல் குறிப்புகள் அதிகம் செய்வாங்க. இவங்க செய்யும் அவல் லெமன் கிச்சடி எல்லாம் எனக்கு ஃபேவரட். நிறைய செய்ய கத்துகிட்டேன். இதையும் ட்ரை பண்ணிடுறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சத்தான குறிப்பா கொடுத்திருக்கீங்க..நிச்சயம் சுவையும் நல்லா இருக்கும்னு தெரிது. செய்துபார்த்துட்டு சொல்றேன் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அன்பு பாலபாரதி,
அவல் உடம்புக்கு ரொம்ப‌ நல்லது தான். செய்து பாருங்க‌. ரொம்ப‌ நல்லா இருக்கும்.
நன்றி1

அன்புடன்,
செல்வி.

அன்பு உமா,
பாராட்டுக்கு நன்றி.

அன்புடன்,
செல்வி.

அன்பு மகா,
அவசியம் செய்து பாருங்க‌.

வெள்ளை அவல் செய்முறை என்னுடைய‌ குறிப்பிலும் இருக்கும். பாருங்க‌.

அன்புடன்,
செல்வி.

அன்பு வாணி,
டிரை பண்னிப் பாருங்க‌. நல்லா இருக்கும்.

அன்புடன்,
செல்வி.

அன்பு வனி,
ஆமா, அங்கே நிறைய‌ அவல் உணவு செய்வாங்க‌. பச்சை மொச்சை சேர்த்து கூட‌ செய்வாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். முயற்சித்துப் பாருங்க‌.

அன்புடன்,
செல்வி.

அன்பு அருட்செல்வி,
சுவையும் நல்லா இருக்கும். செய்து பார்த்துட்டு சொல்லுங்க‌. நன்றி.

அன்புடன்,
செல்வி.

சத்தான‌ குறிப்பு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.