கஸ்டர்ட் குக்கீஸ்

தேதி: March 26, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (2 votes)

 

உப்பில்லாத வெண்ணெய் - 250 கிராம்
மைதா - 250 கிராம்
கஸ்டர்ட் பவுடர் - 150 கிராம்
சர்க்கரைத் தூள் - 150 கிராம்
முட்டை - ஒன்று


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
முட்டையை அடித்து தனியாக வைக்கவும். பாத்திரத்தில் வெண்ணெயையும், சர்க்கரைத் தூளையும் ஒன்றாகச் சேர்த்து நன்றாகக் க்ரீம் போல் கலக்கவும். அதனுடன் அடித்து வைத்துள்ள முட்டையைச் சேர்த்து கலக்கவும்.
முட்டையைச் சேர்த்து நன்றாகக் கலந்த பிறகு மைதாவையும், கஸ்டர்ட் பவுடரையும் சேர்த்து கலக்கவும். (கலந்ததும் சப்பாத்தி மாவு போல இருக்கும்).
பிறகு மாவை சிறு உருண்டையாக உருட்டி சர்க்கரைத் தூளில் பிரட்டியெடுத்து ட்ரேயில் அடுக்கவும்.
உருண்டைகளின் மீது ஃபோர்க் கொண்டு அழுத்தவும். இவ்வாறு அழுத்துவதால் வட்ட வடிவ பிஸ்கட் போல் இருக்கும். பிறகு மைக்ரோவேவில் 15 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும், (நான் 350 ​டிகிரியில் வைத்தேன்). வெந்ததும் சிறிது நேரம் ஆறவிட்டு எடுத்து வைக்கவும்.
டேஸ்டி கஸ்டர்ட் குக்கீஸ் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

முதல் குறிப்புக்கு வாழ்த்துக்கள் ரேணு. படங்களும் பிஸ்கட்டும் சூப்பர். பார்க்கும்போதே சாப்பிட தோணுது. அந்த கடைசி ப்ளேட்ல இருக்க பிஸ்கட்ட அப்படியே பார்சல் அனுப்பிடுங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

முதல் குறிப்புக்கு என் அன்பான வாழ்த்துகள், பிஸ்கட் சூப்பர், பேக்கரி கடையில் பார்ப்பது போல் உள்ளது. அருமையான குறிப்பு.

ஆகா!!! முதல்ல போட முடியாம மிஸ் ஆகிடுச்சே!!! ;) பரவால்ல நம்ம உமா தானே. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள், அழகான படங்கள்... எனக்கு பிடிச்ச குக்கீஸ் குறிப்புக்கு நன்றி. அவசியம் ட்ரை பண்றேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குக்கீஸ் கலர்ஃபுல் ஆக‌ இருகிறது..

ஆஹா வந்திடுச்சா குக்கிஸ்:) அப்பாடா இத‌ போட‌ நான் பட்ட‌ பாடு இருக்கே, வனி உங்களை விடுவாத‌ இல்லை, என்னை எப்படியோ சமைக்க‌ வெச்சுட்டீங்க‌, இனி உங்க‌ முறை சமைச்சு படம் போடுங்க‌, இப்ப‌ ரேணு வெயிடிங், தயவு செய்து இனி சமைக்க‌ சொல்லாதீங்க‌ டென்சன் ஆகுது :)

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

மிக்க‌ நன்றி உமா, முகவரி தந்தால் பிளேட்டில் இருப்பது மட்டும் இல்லை மொத்தமும் அனுப்பிவிடுகிறேன் :)

உமா உங்க‌ டெவில்ட் கடலை நேற்று செய்தேன், அருமையாக‌ இருந்தது, போட்டோ எடுத்து முக‌ புத்தகத்தில் போட‌ நினைத்தேன், ஆனால் சமைத்து முடித்ததும் எல்லோரும் எடுத்து விட்டார்கள் அப்பறம் என்னத்த‌ எடுக்கன்னு விட்டுட்டேன், அடுத்த‌ முறை நிச்சயம், சுவை சூப்பர்பா...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

பால‌ பாரதி சுவையும் சூப்பராக‌ இருக்கும், இங்கு எல்லோருக்கும் பிடித்த‌ குக்கிஸாகி விட்டது, முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள்

அபிராமி இந்த‌ குக்கிஸின் கலரில் தான் நானும் மயங்கிவிட்டேன்:)நன்றி

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

இதெல்லாம் எஸ்கேப் ஆகும் வழி... ஒத்துக்க வனி ஆளில்லை. ;) ஒரு குறிப்பு அதுவும் சுலபமான சுவையான குறிப்பு... போதாததுக்கு பளிச்சுன்னு இத்தனை அழகான படம் வேற... இதெல்லாம் பார்த்த பின்னும் ஒரு அழகான குறிப்பு தரும் ஆளை விடுவோமோ??? முடியாதே... முடியவே முடியாதே ;) அடுத்த குறிப்பு என்னன்னு யோசிச்சு வைங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

யம்மி குக்கிஸ்,அவசியம் செய்து பார்த்து சொல்கிறேன்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வாவ்வ்.. சூப்பர், குக்கிஸும், ரோஸும் மேட்சிங்கா இருக்கு :) முதல் குறிப்பே அசத்தலா கொடுத்திருக்கீங்க, வாழ்த்துக்கள் ரேணு :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ரேணு முதல் குறீப்புக்கு வாழ்த்துக்கள்.குக்கிஸ் சூப்பர் ,கை பரபரன்னுது எடுத்துசாப்பிட

Be simple be sample

முதல் குறிப்பே அசத்தலாக இருக்கு.. வாழ்த்துக்கள்... போட்டோஸ் அனைத்தும் அழகா இருக்கு... கடைசி போட்டோ ரொம்ப ரொம்ப அழகா இருக்கு.

இன்னும் நிறைய குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்...

கலை

முதல் குறிப்பு அசத்தலான படங்களுடன் டேஸ்டி குக்கீஸ் சூப்பரா இருக்கு ரேணுகா. வாழ்த்துக்கள் ரேணுகா

முதல் குறிப்புக்கு வாழ்த்துக்கள், படங்களும் அருமை.கஸ்ட்டர்ட் குக்கீஸ் நேற்று மாலையே பண்ணியாச்சு ரேணுகா, நல்லா இருந்தது.

அன்பு ரேணுகா,
முதல் குறிப்புக்கு வாழ்த்துக்கள்! ஈசியான‌ குக்கீஸ். இந்த‌ வாரம் செய்ய‌ நிகைத்தேன். ஆனால், மகன் இந்த‌ வாரம் டயட்டில் இருக்கிறாராம்:(
அழகான‌ படங்கள்.

அன்புடன்,
செல்வி.

முசி கட்டாயம் செய்து பார்த்து சொல்லுங்க,, உங்களுக்கு பிடித்ததா இல்லையா என்று:)

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

செல்வி(கா) அப்பாடா இப்ப வெறும் ரேணு தான் இருக்கு:))

ஆரிகாமி பிளவர் வைத்து எடுக்க நினைத்தேன் சரி வரலை திடீர்ன்னு ரோஸ் நினைவு வந்து கை கொடுத்தது நான் மேட்சா தான் போஸ் குடுப்போம்ன்னு:) வாழ்ந்த்துக்கு நன்றி செல்வி(கா) :))))))எஸ்கேப்

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

என்ன ரேவதி கை பரபரன்னு இருக்கு செய்து பார்க்கன்னு வரும்ன்னு நினைச்சேன் சாப்பிடன்னு சொல்லிட்டீங்க, பக்கத்துல இருந்தா இந்நேரம் கொண்டு வந்திருப்பேனே:( வாழ்த்துக்கு நன்றி

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

கலை ரெம்ப ரெம்ப நன்றி, உங்க வாழ்த்தை படிக்கும் போது பறக்கற மாதிரி இருக்கு:))

ஆனா கடைசி வரில பொசுக்குன்னு கீழ தள்ளிவிட்டுட்டீங்களே:) நான் ஒரு குறிப்பு குடுக்க ஒரு ஆளு ரெம்ப பாடுபட்டாங்க, :)

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

தேவி மிக்க நன்றி முடிந்தால் செய்து பாருங்க,

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

வாணி செய்தாச்சா? எப்படி இருந்தது? வீட்டில் எல்லோருக்கும் பிடித்ததா??ரெம்ப நன்றி வாணி:)

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

செல்வி அக்கா உங்க மகனை அடுத்த வாரம் டயட்டை பாலோ பன்ன சொல்லுங்க:)நன்றி அக்கா, சீக்கரம் டயட்டை என் குக்கிஸ் கொண்டு முடிக்கனும்

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஆமாங்க எலோருக்கும் பிடித்திருந்தது,என் மகள் இன்றைக்கு ஸ்கூலுக்கும் சிலதை எடுத்துட்டுப் போய்விட்டாள்

ரெணுகா அக்கா கஸ்டர்ட் குக்கீஸ் செய்து கொண்டு இருக்கிறேன்.. செய்துட்டு பின்னூட்டம் தருகிறேன்

ரேணுகா அக்கா கஸ்டர்ட் குக்கீஸ் ல‌ // தேவையானவை//ல‌ கஸ்டர்ட் பவுடர் போட்டு இருகீங்க‌ ஆனா செய்முறை ல‌ கஸ்டர்ட் பவுடர் சேர்கவே இல்லையே.. நான் 2,3 முறை படித்து விட்டு தான் பின்னூட்டம் தருகிறேன். அக்கா மண்ணிக்கவும் நான் செய்து கொண்டு இருப்பதால் தான் கேட்டேன்.. ஒரு வேலை நான் சரியாக‌ பார்காமல் இருந்தால் கூட‌ மண்ணிக்கவும்.. நான் கஸ்டர்ட் பவுடர் சேர்காம‌லே செய்து அவனில் வெய்துள்ளேன்..

ரேணுகா அக்கா கஸ்டர்ட் குக்கீஸ் ரொம்ப‌ ரொம்ப‌ நல்லா இருக்கு என் கணவருக்கு மிகவும் பிடித்தது.. எனக்கு இது வரை குக்கீஸ் செய்ய‌ தெரியாது.. என் மகனுக்கு 9 மாதம் நடக்கிறது. அவன் இப்போ தான் குக்கீஸ் சாப்பிட‌ ஆரம்பித்துள்ளான்.. அவன் கையில் குக்கீஸ் வைத்து சாப்பிடும் அழகை நான் எப்பவும் ரசிப்பதுண்டு. அவனால் தான் எனக்கு குக்கீஸ் செய்து பழக‌ வேண்டும் என்ற‌ ஆசை வந்தது. என் மகனுக்கு கடையில் வாங்கி பழக்காமல் எல்லா வகை உணவும் நானே செய்து தர‌ வேண்டும் என்று விருப்ப‌ படுகிறேன்.. அதற்கான‌ முதல் படியே இது தான் எனக்கு மிகவும் சந்தோசமாக‌ உள்ளது... அறுசுவை குறிப்பை பார்த்து நான் நிறைய சமைத்துள்ளேன்.. ஆனால் என் மகனுக்காக‌ நான் சமைத்தது இது தான் முதல் முறை.. நன்றி !! நன்றி !!

செய்தாச்சுங்க... ரொம்ப அருமை :) பாதி அளவே தான் செய்தேன், அதுக்கே நிறைய குக்கீஸ் தான். ஈசியாவும் செய்ய முடிஞ்சுது. தேன்க்யூ ரேணு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா