பீர்க்கங்காய் தோல் துவையல்

தேதி: March 26, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

பீர்க்கங்காய் தோல் - ஒரு கப்
தேங்காய் - 2 கீற்று (அ) தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
பூண்டு - 3 பல்
உளுத்தம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
கொத்தமல்லித் தழை - சிறிது
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
கறிவேப்பிலை - 5
எண்ணெய் - 2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 3
உப்பு - தேவையான அளவு


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும். பருப்பு வகைகள் சிவந்தவுடன் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் புளி மற்றும் பீர்க்கங்காய் தோல் சேர்த்து வதக்கவும். தோல் நன்கு வதங்கியதும் தேங்காய், கொத்தமல்லித் தழை சேர்த்து கிளறிவிட்டு இறக்கி வைத்து ஆறவிடவும்.
ஆறியதும் உப்புச் சேர்த்து அரைக்கவும். (நைசாக அரைக்காமல் சற்று கொரகொரப்பாக அரைக்கவும்). சுவையான பீர்க்கங்காய் தோல் துவையல் ரெடி. சாதம், தோசைக்கு பொருத்தமாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

selvi mom , துவையல் செய்முரை வைத்து செய்து பார்கிறேன், last picture very nice,,,,,,நா தோலோட‌ காயையும் சேர்த்து போட்டு,அரைச்சுடுவேன் , தோல் மட்டும் போட்டு அரைச்சு பார்க்கிரேன்,,

Yours Lovable
Maha

என் மகளுக்கு ரொம்ப பிடிச்ச துவையல் அக்கா. நல்லாருக்கு. நான் சின்ன வெங்காயம், மல்லித்தழை சேர்க்காமல் அரைப்பேன். இனி இந்த முறையில் ட்ரை பண்றேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

பீர்க்காங்காய் தோல் துவையல் எல்லா வகை சாத்துக்கும் தொட்டுக்கொள்ள அருமையான துவையல்.

ரொம்ப நல்லா இருக்குங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நல்ல‌ குறிப்பு.வீட்டில் செய்வாங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

செல்விக்கா, பீர்க்கங்காய் தோலை இதுவரை சட்னிக்கு பயன்படுத்தியதில்லை. பீர்க்கங்காய்லதான் செய்திருக்கேன். அடுத்தமுறை கட்டாயம் செய்துபார்க்கிறேன். நார்சத்து மிக்க ஆரோக்கியமான குறிப்பு :) பீர்க்கங்காய் ப்ரியர்கள் நாங்கள்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நானும் செய்துபார்க்கிறேன்.குறிப்பு கிடைச்சுடுச்சுல.இனி வேஸ்ட் பண்ணமாட்டேன்.

Be simple be sample

அன்பு மகா,
காய் இல்லாமல் தோல் மட்டும் வைத்து செய்து பாருங்கள். நல்ல‌ சுவையாக‌ இருக்கும். நன்றிம்மா.

அன்புடன்,
செல்வி.

அன்பு உமா,
வெங்காயம், மல்லித்தழை சேர்த்தால் இன்னும் சுவை கூடும். முயற்சித்து பாருங்கள். மகளுக்கு பிடிச்சிருக்குல்ல‌. அடிக்கடி செய்து கொடுங்க‌.

அன்புடன்,
செல்வி.

அன்பு பாலபாரதி,
சாத வகைக்கு மட்டுமல்ல. தோசைக்கும் நல்லா இருக்கும். நன்றி.

அன்புடன்,
செல்வி.

அன்பு வனி,
மிக்க நன்றி வனி.

அன்புடன்,
செல்வி.

அன்பு முசி,
நீங்களும் செய்து பாருங்க. நன்றி.

அன்புடன்,
செல்வி.

அன்பு அருட்செல்வி,
பீர்க்கங்காயை பொரியல் பண்ணிட்டு தோலை துவையல் அரையுங்க. எனக்கும் ரொம்ப பிடிக்கும்:)

அன்புடன்,
செல்வி.

அன்பு ரேவதி,
தோலை வேஸ்ட் பண்ணாமல் செய்து பாருங்க. அப்பறம் தூக்கிப் போடவே மாட்டீங்க.

அன்புடன்,
செல்வி.

நானும் பீர்க்கங்காய் தோலில் சட்னி செய்வேன்,ஆனால் இந்த முறையில் செய்ததில்லை,அடுத்த முறை டிரை பண்ரேன், சின்ன வெங்காயத்திற்க்குப் பதில் பெரிய வெங்காயம் சேர்க்கலா தானே மேடம்

அன்பு வாணி,
பெரிய வெங்காயமும் சேர்க்கலாம். எங்க ஊர்ல அதிகம் சின்ன வெங்காயம் பயன்படுத்துவாங்க. பெரிய வெங்காயம் பிரியாணிக்கும், தயிர்பச்சடிக்கு மட்டும் தான் பயன் படுத்துவாங்க. அந்தப் பழக்கம் எனக்கும். சின்ன வெங்காயம் சேர்த்தால் கொஞ்சம் சுவை அதிகமா இருக்கும். அவ்வளவுதான்.

அன்புடன்,
செல்வி.