மண் பாத்திரம் பழக்குதல்

எப்படி புது மண் பாத்திரங்களை சமையலுக்குப் பழக்கி எடுக்கனும்

மண் பாத்திரங்கள் தோசைக்கல், குழிப்பணியார‌ சட்டி இவற்றை மண் மற்றும் எண்ணைப் பசை போகக் கழுவிவிட்டு அவற்றை விட‌ பெரிய‌ பேசின் போன்ற‌
டப்பில் போட்டு அதில் மூன்று நாள் போல‌ அரிசி கழுவிய‌ தண்ணீரை ஊற்றி
வைக்கவும். மண்பாத்திரங்களுக்கு தினமும் கழுநீரை மாற்ற‌ வேண்டும், நான்காம் நாள் அரிசி கழுவிய‌ இரண்டாம் தண்ணீரோடு மண் பாத்திரங்களை
அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க‌ வைக்கவேண்டும். மறு நாள் நன்கு கழுவிவிட்டு பயன்படுத்தலாம். காஸ் அடுப்பிலும் வைக்கலாம். வெறும் மண்
பாத்திரங்களாக‌ வைக்கக் கூடாது.
இரும்பு தோசைக்கல், கடாய். குழிப்பணியார‌ சட்டி இவற்றை அவற்றில்உள்ள‌
கடைஎண்ணெய் போக‌ நன்றாகத்தேய்த்துக் கழுவிவிட்டு(கோடு விழும்படி
தேய்க்கக் கூடாது)பிறகு விளக்கெண்ணெய் தடவி வைக்கவும்.முதலில் பயன்
படுத்தும் போது வீணாகிப்போன‌ மாவுகளைக் கரைத்து ஊற்றி மூடி போட்டு
சுட்டு எடுத்து காக்காய்க்குப் போடவும்( காக்காய்க்குக் போட்டால் புண்ணியம்
என்று யாரோ காற்று வாக்கில் சொன்னதாகக் கேள்வி). பிறகு பயன் படுத்தலாம்
தோசைக்கு நீங்கள் பயன் படுத்தும் எண்ணெய்யோடு 100 மில்லிக்கு இரண்டு
தேக்கரண்டி விளக்கெண்ணெய் சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ளவும்.
அந்த‌ எண்ணெய்யை தொட்டுத் தடவி தோசை ஊற்றி மூடி போட்டு சுட்டால்
வேண்டுமானால் கொஞ்ச‌ம் நல்ல‌ நெய்யும் கலந்து கொள்ளலாம். அருமையாய்
தோசை வரும். பணியாரமும் இதே போலத் தான்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

நான் இந்தியாலேருந்து வரும்போது மண் பாணைசட்டி எடுத்து வந்தேன். hand luggage ல தான் வைத்து எடுத்து வந்தேன். ஆனாலும் சின்னதா crack விட்டுடுச்சு. light ஆ ஒழுகுது. நான் அதில் cement பூச்சி outside பூசி use பண்ணலாமா?

என் friend ஒருவர் use பண்ணகூடாது அப்படின்னு சொல்லராங்க. எனக்கு பானையை தூக்கிபோட மனசு வரலை. எதாவது tips கொடுங்க please.

thank you

சீமெந்து... சட்டி சூடாகும் போது உதிர்ந்து போகக் கூடும். சரியாகத் தெரியவில்லை. முயற்சி செய்து பாருங்கள். சரிவராவிட்டால், சட்டி வறுக்கும் வேலைகளுக்காவது ஆகும். அதற்கும் நல்லதில்லை என்றால் செடி வைக்கலாம்.

முன்பு அப்பா பெரிய‌ குடிநீர்ப் பானையில் குழாய் மாட்டி சீமெந்து பூசியிருந்தார். ஆரம்பத்தில் நீரில் சுவையும் வாடையும் தெரிந்தது. பிறகு சரியாகி விட்டது.

வெளிப் பூச்சு, பிரச்சினையாக‌ இராது. சமைக்கும் போது அடுப்பின் சூடு, உள்ளே உள்ள‌ உணவிற்கு சீமெந்துச் சுவை கடத்தப் படுவதைத் தவிர்க்க‌ வேண்டும். சமைத்ததும் மறக்காமல் உணவை வேறு பாத்திரத்துக்கு மாற்றிவிடுங்கள்.

நீங்கள் இருக்கும் இடத்தில் ம‌ண்பாத்திரங்கள் கிடைக்குமே!

‍- இமா க்றிஸ்

First 2 days ethavathu cooking oil pot ullayum veliyayum nalla apply panni veyilla kaya vechutu 3 rd day andha pot a water la complete a immerse panni one full day vitutu apuram eduthu use pannina seepage agadhu.

Effort without direction is activity. Effort with direction is productivity..

மேலும் சில பதிவுகள்