பனானா புட்டிங்

தேதி: March 27, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (4 votes)

வாழைப்பழம் - 2 (சிறியது)
ப்ரெட் - 2 துண்டுகள்
வற்றிய பால் - அரை கப்
கன்டண்ஸ்டு மில்க் - 2 மேசைக்கரண்டி
சீனி - 5 மேசைக்கரண்டி + 4 மேசைக்கரண்டி
முட்டை - ஒன்று
வெனிலா எசன்ஸ் - அரை தேக்கரண்டி

கேக் ட்ரேயில் 4 மேசைக்கரண்டி சீனியைப் போட்டு அடுப்பில் வைத்து மிதமான தீயில் சீனிப் பாகு காய்ச்சவும். பாகு ப்ரவுன் கலராக வரும் போது வெனிலா எசன்ஸ் சேர்த்து முறுகியவுடன் அடுப்பை அணைத்துவிடவும். முறுகிய பாகு (கேரமல்) ட்ரேயில் நன்கு பரவலாக இருக்கும்படி செய்து கொள்ளவும்.
பாத்திரத்தில் ப்ரெட் மற்றும் வாழைப்பழத்தை உதிர்த்துப் போடவும்.
இரண்டையும் நன்றாக பிசைந்துவிட்டு, கன்டண்ஸ்டு மில்க்கைச் சேர்த்துக் கலக்கவும்.
அதனுடன் முட்டையைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
பிறகு சீனி மற்றும் வற்றிய பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
கலந்து வைத்துள்ள கலவையை கேரமல் வைத்துள்ள பாத்திரத்தில் ஊற்றி, 15 நிமிடங்கள் நீராவியில் வேகவிட்டு எடுக்கவும்.
ஆறியதும் ஒரு தட்டில் கவிழ்க்கவும்.
டேஸ்டி பனானா புட்டிங் ரெடி. ஃப்ரிட்ஜில் வைத்து பரிமாறவும்.

இந்த புட்டிங்கை முட்டை சேர்க்காமலும் செய்யலாம். ப்ரெட்டின் அளவை மூன்று துண்டுகளாகச் சேர்த்து செய்யவும்.

முக்கியமாக ஆவியில் வேகவைக்கும் போது ஆவி வெளியாகாதவாறு பாத்திரத்தை சரியாக மூடி வைக்க வேண்டும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

புட்டிங் பார்க்கவே கண்ணை கவருது முசி, விரைவில் செய்துப் பார்க்கிறேன்.

சூப்பரோ சூப்பர் :) ட்ரை பண்றேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பனானா புட்டிங் அருமையாக‌ உள்ளது.. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்

குறிப்பினை வெளியிட்ட‌ அட்மின் மற்றும் குழுவிர்க்கு ரொம்ப‌ நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

முதல் பதிவிர்க்கும்,வாழ்த்திர்க்கும் மிக்க‌ நன்றி.செய்து பாருங்க‌,நல்லா இருக்கும்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

பதிவிர்க்கு மிக்க‌ நன்றி,அவசியம் செய்து பாருங்க‌,எல்லோருக்கும் பிடிக்கும்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

பதிவிர்க்கும்,வாழ்த்திர்க்கு மிக்க‌ நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

புட்டிங் கலர்ஃபுல்லா அழகா இருக்கு முசி. சூப்பர்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

அன்பு முசி,
காரமல் கஸ்டர்ட் அடிக்கடி செய்வேன். அதை விட‌ இது சுலபமாக‌ இருக்கு. கண்டிப்பாக‌ செய்துட்டு சொல்றேன். படங்கள் அழகு.

அன்புடன்,
செல்வி.

ஹாய் முசி அஸ்ஸலாமு அழைக்கும் நல்லா இருக்கீங்களா பேசி ரொம்ப நாள் ஆக்சு பனானா புட்டிங் ரொம்ப அருமையா இருக்கு ஸூபர் வாழ்த்துககள்

முசி புட்டிங் பார்க்கவே அழகா இருக்கு, குறிப்பு அருமை :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

பார்க்கவே டேஸ்ட் பண்ணனும் போல இருக்கு, அவன் இல்லாமல் செய்யலாம் போல எளிமையாவும் இருக்கு. செய்துட்டு சொல்றேன் முசி

நன்றி உமா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

பதிவிர்க்கு நன்றி,அவசியம் செய்து பாருங்க‌.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வ‌ அலைக்கும் சலாம்,நல்லா இருக்கேன்,நீங்க‌ எப்படி இருக்கீங்க‌?வாழ்த்திர்க்கு மிக்க‌ நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ரொம்ப‌ நன்றி,அருள்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நீராவியில் வேக‌ வைப்பது தான்.செய்து பாருங்க‌,நல்லா இருக்கும்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

முஸி உங்க பனான புட்டிங்செய்தேன் நல்ல இருந்தது

ஆனா நீங்க செய்த அளவு அழக இல்லா குக்கர்ல செய்தேன்

சும்மா வைத்து பார்த்தேன் வேகலா 2 விசில் வைத்து எடுத்தென்பா நல்ல

இருந்தது