வெள்ளை உளுந்து சாதம்

தேதி: March 28, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (2 votes)

 

புழுங்கலரிசி - ஒரு கப்
உருட்டு உளுந்து - கால் கப்
தேங்காய் - ஒரு மூடியில் பாதி அளவு
கறுப்பு எள் - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 5 - 6 பல்
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
காய்ந்த மிளகாய் - 2
தாளிக்க:
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி


 

தேவையானவற்றைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
தேங்காயை துருவி வைக்கவும். பூண்டுப் பற்களை தோலுரித்து நீளவாட்டில் மெல்லிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். வாணலியில் உளுந்துடன் வெந்தயத்தைச் சேர்த்து சிவக்க வறுத்தெடுத்துக் கொள்ளவும். அரிசியைக் களைந்து ஊற வைக்கவும்.
ப்ரஷர் பானில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை தாளிக்கவும். அத்துடன் காய்ந்த மிளகாய் மற்றும் எள் சேர்த்து பொரியவிடவும்.
எள் பொரிந்ததும் தேங்காய் துருவலைப் போட்டு கிளறிவிட்டு, பூண்டுப் பற்களைச் சேர்க்கவும்.
பிறகு வறுத்த உளுந்து, வெந்தயம் மற்றும் அரிசி சேர்த்துக் கிளறிவிட்டு, (அரிசியை நீரை வடித்துவிட்டு சேர்க்கவும்) மஞ்சள் பொடியைச் சேர்த்து 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி ப்ரஷர் பானை மூடி, 3 விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கவும்.
ப்ரஷர் பான் ஆறியதும் திறந்து உப்பு சேர்த்துக் கிளறவும். சுவையான உளுத்தம் பருப்பு சாதம் தயார். நல்லெண்ணெயுடன் எள்ளுத் துவையல் அல்லது தேங்காய்த் துவையல் சேர்த்துப் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். வற்றல், அப்பளம், கீரைப் பொரியல் மற்றும் அவியல் ஆகியவை இதற்கு பொருத்தமான சைட் டிஷ்.

சாதாரணமாக தோல் உளுந்து சேர்த்து செய்வதுண்டு. இதில் வெள்ளை உளுந்து, எள், வெந்தயம் சேர்ப்பதால் நல்ல வாசனையாக இருக்கும்.

நெல்லை மாவட்டத்தில் பூப்படைந்த பெண் குழந்தைகளுக்கு மாதம் ஒரு முறையாவது உளுந்து சாதம், உளுத்தங்களி, துவரம் பருப்பு சாதம் ஆகியவற்றைச் செய்து தருவார்கள். உளுந்து இடுப்பு எலும்புக்கு பலம் சேர்க்கும் என்பதால் இதை அவசியமாகச் சாப்பிட வைப்பார்கள்.

தேங்காய் மற்றும் வெந்தயம் உடலுக்குக் குளிர்ச்சியையும், வலிமையையும் தரும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சுவையான வெள்ளை உளுந்து சாதம் அருமை.

உளுந்து போட்டு சாதம் இப்ப தான் முதல் முறை கேட்கறேன், இப்படி சுலபமான குறிப்பை எல்லாம் உடனே செய்துடுறது வனி வழக்கம்... செய்துட்டு படங்காட்டுறேன் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உளுந்து சாதம் வித்தியாசமான குறிப்பு. இப்பதான் கேள்விபடுறேன். சூப்பர்ம்மா.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நான் உழுந்து சாதம் சற்று வித்தியாசமாக‌ தேங்காய் பால் சேர்த்து செய்வேன்.உஙக‌ குறிப்பும் நல்லாயிருக்கு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

சீதாமேடம் நல்ல ஆரோக்கியமான குறிப்பு, செய்துபார்த்து பதிவிடுகிறேன் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

உளுந்துல‌ சாதமா?!!. பாக்கவே யம்மியா இருக்கு. கண்டிப்பாக‌ செய்து பார்க்கிரேங்க‌!...

அன்புடன்
உஷா

அன்பு சீதாலஷ்மி,
உளுந்து சாதம் பார்க்க‌ சூப்பரா இருக்கு. நாங்க‌ தோலோடு இருக்கிற‌ உளுந்துல‌ செய்வோம். இப்ப‌ குழந்தைகள் சாப்பிட‌ தான் யோசிக்குது.

அன்புடன்,
செல்வி.

உளுந்து போட்ட சாதம் என் அம்மா தோல் உளுந்தில் செய்வாங்க,ரொம்ப ருசியா இருக்கும்.
சத்தான குறிப்பு மேடம்

சுவையான ஹெல்தியான சாதம்,செய்துபார்த்துடறோம் சீக்கிரம்

Be simple be sample

பதிவிட்டு, பாராட்டிய அன்புத் தோழிகள் அனைவருக்கும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி