மாங்காய் சட்னி

தேதி: March 28, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.7 (3 votes)

 

தேங்காய் - அரை மூடி
மாங்காய் - 4 துண்டுகள்
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 3 (அ) 4
உப்பு - தேவையான அளவு
எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை - தாளிக்க


 

தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். தேங்காய் மற்றும் மாங்காயை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். (அல்லது) துருவிக் கொள்ளவும்.
மிக்ஸியில் தேங்காயுடன் மாங்காய், இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் உப்புச் சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்தெடுக்கவும்.
தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து சட்னியில் சேர்க்கவும்.
சுவையான மாங்காய் சட்னி தயார்.

மாங்காயை அதன் புளிப்புத் தன்மைக்கேற்ப கூடுதலாகவோ, குறைவாகவோ சேர்க்கலாம். பார்ப்பதற்கு தேங்காய் சட்னி போன்றே இருக்கும். பச்சை மாங்காயின் மணத்துடன் சுவையாக இருக்கும்.

கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவதற்கு உகந்தது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நல்ல ஐடியா வாணி மாங்காய்ல சட்னி சூப்பர் இது வரைக்கும் செய்யாத சட்னி. இனி வருவது மாங்காய் சீசன் கண்டிபாக செய்கிறேன்.

வாணி... சீசன் வரும் போதே ரெசிபி வருது ;) அவசியம் செய்துடுறேன் வாணி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எங்க வீட்ல இரண்டு மாமரம் இருக்கு. கண்டிப்பா ட்ரை பண்ணிடுறேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

ம்ம்ம்ம் மாங்காய் சட்னி நாவூறுது.சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ஆசையா இருக்கு பார்க்க. இங்க எங்க மாங்காய்! நீங்கதான் பார்சல் அனுப்பணும். :-)

‍- இமா க்றிஸ்

வித்யாசமான குறிப்பு இதுவரை செய்ததில்லை, மாங்கா இருக்கு செய்து பார்க்கிறேன் :) பதிவிடும்போதே வாயூறுது.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

வெண் பொங்கலுக்கு இந்த சட்னி நல்லாருக்குமா?

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

அன்பு வாணி,
தினம் தினம் மாங்காய் விழுந்துகிட்டே இருக்கு. ஒரு நாள் பண்ணிட‌ வேண்டியது தான். நான் லேசாக‌ வதக்கி அரைப்பேன். பச்சையாகவும் செய்து பார்க்கலாம்.

அன்புடன்,
செல்வி.

நன்றி பாலபாரதி, செய்துட்டு சொல்லுங்க

நன்றி வனி, எனக்கு மாங்காய் சீசன் எல்லாம் மறந்தேப் போச்சு, இங்கே எப்போ கிடைக்குதோ அப்பல்லாம் பயன் படுத்திக் கொள்வது தான்

டிரை பண்ணுங்க உமா, வெண்பொங்கலுக்கு நல்லா இருக்கும்.அரைக்கும் போது கொஞ்சம் மல்லி தழை சேர்த்துக்கோங்க.நன்றி

நன்றி முசி, உங்க தானியக் கஞ்சியில் ஒரு சந்தேகம் கேட்டுள்ளேன், ஃப்ளீஸ் பார்த்து பதில் கொடுங்க.

வருகைக்கும், பதிவிற்க்கும் நன்றி இமா, அனுப்பிட்டா போச்சு. வால்மார்ட்- ல் Raw mangoes என்று விற்ப்பார்களே, இல்லையென்றால் ஸ்ரீலங்கன் தமிழ் கடைகளில் frozen mango pieces கிடைக்குமே, அதிலும் செய்யலாம்

செய்துப் பாருங்க அருள் , நன்றி

நன்றி செல்வி மேடம், பச்சையாகவும் அரைத்துப் பாருங்கள். நல்ல வாசனையா இருக்கும்.

அட சீசனுக்கு ஏற்ற குறிப்பு ,எதிர் வீட்டுல மாங்காய் காய்த்து தொங்குது,ஒரு நாள் வாங்கி அரைச்சுட வேண்டியதுதான்.

Be simple be sample

அவசியம் செய்து பாருங்க ரேவதி, நன்றி

இங்க எங்க வால்மார்ட்! பச்சை மாங்காய் - ஃபிஜியன் கடைல கிடைக்கக் கூடும். அந்தக் கடைப் பக்கம் போய் வருடக் கணக்காச்சு.
//frozen mango// நல்ல ஐடியா. தாங்க்ஸ். ட்ரை பண்ணிருறேன்.

‍- இமா க்றிஸ்

நானும் அவசரத்துக்கு ஃபுரோஸன் மேங்கோ தான் உபகோகிப்பேன் இமா. டிரை பண்ணிட்டு சொல்லுங்க.
நன்றி