கொத்து பன்

தேதி: March 29, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

சாண்ட்விச் பன் - ஒன்று (அல்லது) ப்ரெட் துண்டுகள் - 8
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
கொத்தமல்லித் தழை - சிறிது
நெய் - ஒரு தேக்கரண்டி
ப்ரிஞ்சி இலை - ஒன்று
முட்டை - ஒன்று
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு


 

பன்னை சிறிய துண்டுகளாக்கி அதன்மீது லேசாக தண்ணீர் தெளித்து வைக்கவும். வெங்காயம், தக்காளி மற்றும் கொத்தமல்லித் தழையைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் நெய் ஊற்றி ப்ரிஞ்சி இலை மற்றும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, கரம் மசாலா தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
அனைத்தும் நன்றாக வதங்கியதும், மசாலா கலவையை கடாயில் ஓரமாக ஒதுக்கிவிட்டு அதன் நடுவில் முட்டையை ஊற்றி கொத்திவிடவும்.
பிறகு கொத்தமல்லித் தழை மற்றும் உப்பு சேர்க்கவும்.
அதனுடன் பன் துண்டுகளைப் போட்டு பிரட்டவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து மசாலா பன்னுடன் சேரும்படி நன்கு கிளறிவிட்டு இறக்கவும்.
மாலை நேர டிஃபனுக்கு ஏற்ற சூடான கொத்து பன் ரெடி


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Kids like this recipe.thanks for your recipe.

super receipe pakka ve romba super ra irrukku.

கொத்து பன் நல்லாருக்கு ரஸி. வாய்ப்பு கிடைக்கும்போது செய்துட்டு சொல்றேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

அருமையான குறிப்பு பன் வைத்து செய்வதற்கு ஈசியான குறிப்பு.

ரொம்ப சூப்பர்... எனக்கு முன்பெல்லாம் இப்படி எதுலையாவது முட்டையை உடைத்து ஊற்றினால் பிடிக்காது, ஆனா உமாவின் டெவில்ட் கடலை சாப்பிட்ட பின் இந்த சுவை பிடித்துப்போயிற்று. அவசியம் ட்ரை பண்றேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நல்லா இருக்கு,என்னோட‌ கொத்து ரோட்டி குறிப்பும் இது போல் தான்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அன்பு ரஸியா,
பார்க்கவே நல்லா இருக்கு. சுலபமாகவும் இருக்கு.

அன்புடன்,
செல்வி.

சுலபமா, சீக்கிரமே பண்ணிடலாம், முசியின் குறிப்பு நினைவு வந்து விட்டது.

ஈசியான குறிப்பு சூப்பர்

Be simple be sample

முதல் பதிவிற்கு நன்றி இந்து

Eat healthy

ரொம்ப நன்றி சிவகாமி,செய்து பாருங்க

Eat healthy

நன்றி உமா,கட்டாயம் செய்து சாப்பிடுங்க

Eat healthy

ஆமாம் பாலா திடீரென வீட்டிற்கு விருந்தினர் வந்தால் உடனடியாக செய்யும் டிஃபன் வகை

Eat healthy

நன்றி வனிதா,ஓ அப்படியா! இதுவும் நன்றாக இருக்கும்,செய்து பாருங்க

Eat healthy

முசி,செந்தமிழ் செல்வி,வனி செல்வின்,ரேவதி உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி,சுலபமான குறிப்புதான்.

Eat healthy