இராகி கொழுக்கட்டை

தேதி: March 31, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (4 votes)

 

இராகி மாவு - ஒரு கப்
பாசிப்பருப்பு - 2 மேசைக்கரண்டி
தேங்காய்த் துருவல் - அரை கப்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
துருவிய வெல்லம் - அரை கப்
ஏலக்காய் - அரை தேக்கரண்டி


 

தேவையானவற்றைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
இராகி மாவை வெறும் வாணலியில் குறைந்த தீயில் வைத்து வாசனை வரும் வரை வறுத்தெடுத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் பாசிப்பருப்பை மிதமாக சிவக்கும் வரை வறுத்தெடுத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் கால் கப் தண்ணீர் ஊற்றி, 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கொதித்தவுடன் துருவிய வெல்லத்தைப் போட்டுக் கரைத்து வடிகட்டவும்.
வடிகட்டிய வெல்லக் கரைசலை அடுப்பில் வைத்து மிதமாக கெட்டியாகும் வரை கிளறவும்.
அதனுடன் சிறிது சிறிதாக இராகி மாவைச் சேர்த்துக் கிளறவும்.
கெட்டியான பதம் வந்ததும் தேங்காய்த் துருவல், பாசிப்பருப்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து 2 நிமிடங்கள் அடுப்பில் வைத்து நன்கு கிளறிவிட்டு இறக்கவும்.
கலவை மிதமான சூட்டில் இருக்கும் போதே சிறு கொழுக்கட்டைகளாகப் பிடித்து, இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடங்கள் வேக வைத்தெடுக்கவும்.
சத்து நிறைந்த சுவையான இராகி கொழுக்கட்டை தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சத்தான கொழுக்கட்டை செல்வி. கண்டிப்பா ட்ரை பண்றேன். என்னோட அடுத்த குறிப்பு கூட ஒரு ராகி ஸ்பெஷல்தான். அனேகமா நாளைக்கு வெளிவரும்னு நினைக்கிறேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

சூப்பர் கொழுக்கட்டை... ராகியில் எதை சொன்னாலும் வனி செய்துடுவேன் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இராகி கொழுக்கெட்டை ஆரோக்கியமான குறிப்பு. சூப்பர்

ஒரே ஆரோக்கிய சமயலா கொடுத்து அசத்துரீங்க போங்க அருள், உங்க பிள்ளைகள் ஆரோக்கியமா வளர்ராங்க, நல்லது.

சத்தான‌ குறிப்பு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அன்பு அருட்செல்வி,
சத்தான‌ குறிப்பு. கொழுக்கட்டை உருண்டை உருண்டையா இருக்கு:) நான் பாசிப்பருப்பு சேர்க்காமல் செய்வேன்.

அன்புடன்,
செல்வி.

அருள்,

இராகி கொழுக்கட்டை குறிப்பு அருமையா இருக்கு! வெல்லம், பாசிப்பருப்பு எல்லாம் சேர்த்து நல்ல சத்தான ஐய்ட்டம், கட்டாயம் செய்துப்பார்க்கிறேன். நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

கொழுக்கட்டை சாப்பிட்டுகிட்டேதான் டைப் பண்றேன். சூப்பரா இருக்கு. நன்றி செல்வி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

உமா செய்து பார்த்துட்டு சொல்லுங்க, சுவை நல்லா இருக்கும். மிக்க நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

வனி செய்து பார்த்திட்டு சொல்லுங்க, மிக்க நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

பாரதி மிக்க நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நல்ல‌ சத்தான‌ குரீப்பு செயெதிது பார்த்திடலாஇம்

வாணி இது போன்ற சமையல் எனக்கும், என்னவருக்கும் மிகவும் பிடிக்கும். கொஞ்சம் சிரமப்பட்டுத்தான் சாப்புடறாங்க புள்ளைங்க. ரொம்ப அடம்பிடிச்சா, தானிய வகைகளை தோசையாக மாற்றிடுவேன் ,மிக்க நன்றி தோழி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

முசி மிக்க நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

செல்விக்கா அடுத்த முறை கொழுக்கட்டை ஷேப் சரியாக செய்துவிடுவேன். ஏனா அச்சு வாங்கி இருக்கேன் :) பாசிப்பருப்பு போட்டால் சுவை கூடும், செய்து பார்த்திட்டு சொல்லுங்க, மிக்க நன்றி செல்விக்கா :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

சுஸ்ரீ கட்டாயம் செய்து பாருங்கரொம்ப பிடிக்கும், மிக்க நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

உமா செய்து பார்த்து சுவையை கூறியமைக்கு மிக்க நன்றி :) நாந்தான் நன்றி சொல்லணும்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

மிக்க நன்றி பாரதி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

உங்க அனைத்து குறிப்புகளும் அசத்தல்+ஆரோக்கியம்... ஒவ்வொண்ணா ட்ரை பண்றேன்