சத்து மாவுப் புட்டு

தேதி: April 1, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

சத்து மாவு - ஒரு கப்
தேங்காய்ப்பூ - 4 மேசைக்கரண்டி
சீனி - 1 (அ) 2 தேக்கரண்டி
தண்ணீர் - கால் டம்ளர்
உப்பு - ஒரு சிட்டிகை


 

தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
பாத்திரத்தில் சத்து மாவுடன் உப்புச் சேர்த்து, சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்துப் பிசறவும்.
புட்டுக் குழலில் முதலில் ஒரு மேசைக்கரண்டி தேங்காய்ப்பூ போடவும்.
பிறகு மூன்று மேசைக்கரண்டி பிசறி வைத்துள்ள மாவைப் போடவும். இதேபோல் தேங்காய்ப்பூ, மாவு என மாற்றி மாற்றி புட்டுக்குழல் நிரம்பும் வரை போட்டுக் கொள்ளவும்.
புட்டுக்குழல் நிரம்பியதும் மூடி குக்கரில் பொருத்தி 5 நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும்.
வெந்த பிறகு புட்டுக் குழலிலிருந்து புட்டை எடுக்கவும்.
சுவையான சத்து மாவுப் புட்டு தயார். சர்க்கரை அல்லது துருவிய வெல்லம் கலந்து சாப்பிடலாம்.

குழந்தைகளுக்கு இந்த சத்து மாவுப் புட்டுடன் சீனி மற்றும் வாழைப்பழம் சேர்த்து பிசைந்து உருண்டைகளாக உருட்டிக் கொடுக்கலாம்.

புட்டுக் குழல் இல்லாதவர்கள் பிசறிய மாவுடன் தேங்காய்ப்பூ கலந்து இட்லி தட்டில் வேகவைத்து எடுக்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

புட்டு அருமை வாணி. சத்தான ரெசிபி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

அருமையான சத்து மாவு புட்டு குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். சூப்பர்.

வாணி சத்துள்ள குறிப்பு வாழ்த்துக்கள் :) மாவை அடைக்கும் முன்பாக எண்ணைய் ஏதும் பூசவேண்டுமா, நான் நேற்று குழல் வாங்கினேன். தனியாக வேகவைக்கும் முறையில் உள்ளது.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அன்பு வாணி,
நல்ல‌ சத்தான‌ குறிப்பு. சத்து மாவு இருக்கும் போது நானும் இது போல‌ கொழுக்கட்டையாக‌ செய்து பார்ப்பேன்.

அன்புடன்,
செல்வி.

கலக்கல் புட்டு,ஹெல்தி சூப்பர்

Be simple be sample

சத்தான குறிப்பு.. புட்டு சாப்பிட ஆசையாக இருக்கு. எங்க வீட்லயும் இது போல செய்வோம்.

கலை

நல்ல சத்துள்ள குறிப்பு.வாழ்த்துக்கள்.இது சத்து மாவு என்று பாக்கெட் ல கிடைக்குது அதுல செய்யலாமா.எத்தனை நாள் வைத்திருக்கலாம்.

Expectation lead to Disappointment

மாவு கைவசம் இருக்கு, கட்டாயம் ட்ரை பண்ணனும், பிள்ளைகளுக்கு கொடுக்க புது வழி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாணி, குழலிருந்து வெந்த மாவை வெளியே எடுப்பது எப்படி? நான் இது போல் இராகியில் செய்தேன், ஆனால் அச்சாக வெளியே வராமல், உடைந்தாற்போல வந்தது. உள்ளிருக்கும் தட்டை ஸ்பூனால் தட்டினால் வளைந்துவிடாதா? தட்டியும் வரவில்லை..:(

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ராகி மாவு வறுக்கப் பட்டதா? ஏனெனில் வறுத்த மாவில் தான் புட்டு நன்றாக வரும். குழலில் எண்ணெய் எதுவும் தடவ வேண்டாம். மேலும் வெந்ததும் குழலின் பின்னால் உள்ள அச்சை ஒரு நீளமான குச்சி அல்லது கரண்டி காம்பினால் அச்சை தள்ள வேண்டும். அப்போது புட்டு துண்டங்களாக வெளியே வரும். பொதுவாக குக்கரில் பொருத்தும் புட்டு குழல்களில் ஒரு குச்சியும் எவர் சில்வரில் வரும். தனி குழலில் வருவதில்லை.வேறு ஏதேனும் சந்தேகம் எனில் கேளுங்கள்.

வருகைக்கும், பதிவிற்க்கும் நன்றி

வருகைக்கும், பதிவிற்க்கும் நன்றி

ஒரு முறை புட்டும் செய்து பாருங்க செல்வி மேடம், நல்லா இருக்கும்.நன்றி

வருகைக்கும், பதிவிற்க்கும் நன்றி

வருகைக்கும், பதிவிற்க்கும் நன்றி

பொதுவா புட்டு என்றால் சூடா சாப்பிட்டத்தான் நல்லா இருக்கும், தேங்காய் சேர்ப்பதால் ஃபிரிட்ஜில் வேணும்னா வைக்கலாம். ப்ரெஷ்ஷா இருந்தாதான் சாப்பிட சுவையா இருக்கும்.
நன்றி

டிரை பண்ணிட்டு பிள்ளைகளுக்குப் பிடித்திருந்ததான்னு சொல்லுங்க வனி.
நன்றி