ஆலு மேத்தி சப்ஜி

தேதி: April 2, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

உருளைக்கிழங்கு - 4
தக்காளி - 2 (பெரியது)
மேத்தி கீரை - 2 கட்டு
பூண்டு - 8 பல்
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை மேசைக்கரண்டி
கரம் மசாலா தூள் - முக்கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
ப்ரிஞ்சி இலை - 2


 

தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
கீரையை ஆய்ந்து 3 முறை தண்ணீரில் அலசி வைக்கவும். உருளைக்கிழங்கை தோலுரித்து சதுர வடிவில் நறுக்கிக் கொள்ளவும். மிக்ஸியில் தக்காளியை அரைத்துக் கொள்ளவும். பூண்டை தோலுரித்து சிறியதாக நறுக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் மற்றும் ப்ரிஞ்சி இலை தாளித்து, பூண்டு போட்டு வதக்கவும்.
பிறகு உருளைக்கிழங்கு மற்றும் கீரையைப் போட்டு சிறிது நேரம் வதக்கவும்.
வதக்கியவற்றை குக்கரில் மாற்றி தூள் வகைகள், தக்காளி விழுது மற்றும் உப்புப் போட்டு தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி 2 விசில் வரவிடவும். ப்ரஷ்ர் அடங்கியதும் உருளைக்கிழங்கை லேசாக மசித்துவிடவும். கிரேவி பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
சுவையான ஆலு மேத்தி சப்ஜி தயார். சப்பாத்தி, பூரிக்கு நல்ல சைட் டிஷ்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஆலு மேத்தி சப்ஜி பார்க்க சூப்பரா நல்ல டேஸ்டியா இருக்கும் நினைக்கிறேன் சூப்பர். எங்க வீட்ல அடிகடி சப்பாத்தி பூரிதான் அதனால் கண்டிபாக செய்கிறேன்.

முதல் குறிப்பே மிகவும் சத்துள்ள குறிப்பா கொடுத்திருக்கீங்க வாழ்த்துக்கள் மீனாள் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

Nalla kurippu.....seithu parthu solkiren.

எனது முதல் குறிப்பினை வெளியிட்டு ஊக்கப்படுத்திய அறுசுவை அட்மின் மற்றும் குழுவினருக்கு நான் மனதார நன்றி தெரிவிக்கிறேன்.

Expectation lead to Disappointment

நன்றி பாலபாரதி.//ஆலு மேத்தி சப்ஜி பார்க்க சூப்பரா நல்ல டேஸ்டியா இருக்கும் நினைக்கிறேன் //கண்டிப்பா சூப்பரா இருக்கும்.செய்து பார்த்துட்டு சொல்லுங்க.

Expectation lead to Disappointment

நன்றி அருள்.நீங்க,வனி,சுமி,கல்ப்ஸ் கொடுத்த உற்சாகத்தால் தான் செய்தேன்.நான் தான் உங்கள் நால்வருக்கும் நன்றி சொல்லணும்.

Expectation lead to Disappointment

நன்றி இந்து.செய்து பார்த்துட்டு சொல்லுங்க.

Expectation lead to Disappointment

சப்ஜி சூப்பர் மீன்ஸ். பார்க்கும் போதே சாப்பிட தோணுது. இங்க வெந்தயகீரை கிடைக்காது. வீட்டில் வெந்தயம் முளைக்க வைத்து ட்ரை பண்ணி பாக்குறேன். 2 கட்டு கீரைக்கு எவ்வளவு வெந்தயம் போடனும்?

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

முதல் குறிப்பு வந்திருக்கு, நான் பார்த்து பதிவிட தாமதம் ஆகிட்டுது... ரொம்ப சாரி. வாழ்த்துக்கள் பல. இன்னும் வித்தியாசமான பல குறிப்புகள் தர வேண்டும், உங்களுக்கு நான் வாழ்த்து இழை துவங்க வேண்டும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

nalla kurippu meenal. enathu virupa pattialil serthu konden.

முதல் குறிப்பிற்க்கும்,மேலும் பல குறிப்புகள் கொடுப்பதற்க்கும் வாழ்த்துக்கள் மீனாள்.

முதல் குறிப்பே அசத்தலாக‌ இருக்கு,வாழ்த்துக்கள்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அன்பு மீனாள்,
முதல் குறிப்புக்கு வாழ்த்துக்கள்! குறிப்பு நன்றாக‌ இருக்கு. தொடரட்டும்

அன்புடன்,
செல்வி.

வாழ்த்திற்கு நன்றி உமா.வெந்தய கீரை கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை வெறும் உருளை வைத்து செய்து பாருங்கள்.கடைசியில் கொஞ்சம் உருளை மசித்து விடுங்கள்.2 கட்டு கீரை எவ்வளவு வெந்தயம் போடணும் என்று எனக்கு ஐடியா இல்லை உமா.

Expectation lead to Disappointment

வாழ்த்திற்கு ரொம்ப நன்றி வனி.நீங்களெல்லாம் கொடுத்த ஊக்கம் தான் குறிப்பு கொடுக்க உதவியா இருந்தது.சாரி எல்லாம் சொல்ல கூடாது.வனி பதிவு போட்டு வாழ்த்தியதே ரொம்ப சந்தோஷம்.

Expectation lead to Disappointment

ரொம்ப நன்றி கலை.

Expectation lead to Disappointment

வாழ்த்தியதற்கு நன்றி வாணி.

Expectation lead to Disappointment

வாழ்த்தியதற்கு மிக்க நன்றி முசி.

Expectation lead to Disappointment

அக்கா உங்க வாழ்த்திற்கு ரொம்ப சந்தோஷப்படுறேன்.நன்றி.

Expectation lead to Disappointment