அவல் பணியாரம்

தேதி: December 3, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அவல் - 400 கிராம்
பச்சரிசி - 400 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 6
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - கால் கப்
கறிவேப்பிலை - ஒரு கொத்து


 

சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அவலை புடைத்து சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும்.
அரிசியை அரை மணிநேரம் ஊற வைக்கவும். ஊறியதும் அரிசியை எடுத்து களைந்து மிக்ஸியில் போட்டு நைசாக அரைக்கவும்.
முக்கால் பதம் அரைத்ததும் அலசிய அவலை போட்டு உப்பு சேர்த்து அரைக்கவும். அரைத்த மாவை அரை மணிநேரம் புளிக்க வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் கால் கப் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து, நறுக்கின வெங்காயம் போட்டு வதக்கவும்.
அத்துடன் மிளகாய் வற்றலைக் கிள்ளிப் போட்டு கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
அதை புளிக்க வைத்த மாவுடன் சேர்த்து கிளறி விடவும். அரை கப் தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் பணியாரச் சட்டியை வைத்து அதில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் ஒரு கரண்டியால் மாவை எடுத்து குழிகளில் ஊற்றி வேகவிடவும்.
ஒரு புறம் லேசாக சிவக்க வெந்ததும் திருப்பி போட்டு மறுபுறத்தையும் வேக வைத்து எடுக்கவும்.
இந்த பணியாரம் வெள்ளை நிறமாகத்தான் இருக்கும். நன்கு சிவக்க விடக்கூடாது. தேங்காய் சட்னி, காரச் சட்னியுடன் சேர்த்து சாப்பிட சுவையாய் இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

naRaka irunthathu .buvakaiyana uNavaakavum irunthathu.thanjkaLUkku nanRi.