சன்னா மசாலா

தேதி: December 3, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (8 votes)

 

கொண்டைக்கடலை - கால்கிலோ
வெங்காயம் - இரண்டு
தக்காளி - இரண்டு
இஞ்சி விழுது - ஒரு தேக்கரண்டி
பூண்டு விழுது - அரைதேக்கரண்டி
காய்ந்தமிளகாய் - இரண்டு
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - இரண்டு
ஏலக்காய் - இரண்டு
மிளகாய்த்தூள் - ஒன்றரை தேக்கரண்டி
தனியாத்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சத்தூள் - அரைத் தேக்கரண்டி
கொத்தமல்லி - ஒரு பிடி
வெண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி
எண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி
உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி


 

கொண்டைக்கடலையை இரவு முழுவதும் ஊறவைக்கவும். வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். காய்ந்தமிளகாய், சீரகத்தை ஒன்றும் பாதியுமாக பொடித்து கொள்ளவும்.
கொண்டைக்கடலை ஊறவைத்த தண்ணீருடன் ஒரு தேக்கரண்டி ஊப்புத்தூளை சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். வேகவைத்த கடலையில் கால் கோப்பை தனியாக எடுத்து வைத்து கரண்டியின் உதவியால் நன்கு மசித்துக் வைக்கவும்.
பிறகு வாயகன்ற சட்டியில் வெண்ணெய், எண்ணெய்,இரண்டையும் கலந்து ஊற்றி காயவைக்கவும். பிறகு வாசனைப் பொருட்களைப் போட்டு வறுத்து வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.
தொடர்ந்து இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு நன்கு வதக்கவும். பிறகு எல்லாத்தூள்களையும், பொடித்த சீரகத் தூளையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்னர் நறுக்கினத் தக்காளியைக் கொட்டி, உப்பைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
தக்காளி நன்கு வெந்து, எல்லாம் ஒன்றாய் சேர்ந்து மசாலா பதத்திற்கு வரும் வரை வேகவிடவும்.
பிறகு வேகவைத்த கடலையை தண்ணீரோடு சேர்த்து கொட்டி நன்கு கலக்கி விட்டு கொதிக்கவிடவும்.
மசாலா நன்கு கொதித்து கெட்டியான பதம் வந்தவுடன் மசித்து வைத்துள்ள கடலையை போட்டு நன்கு கிளறி விடவும்.
பின்னர் கொத்தமல்லியை தூவி அதையும் நன்கு கிளறி விட்டு இறக்கி விடவும். இதனை சூடாக பூரி, சப்பாத்தியுடன் பரிமாறவும். சன்னா மசாலாவை விருந்துக்களுக்கு தயார் செய்யும் பொழுது ஒரு நபருக்கு ஒரு கையளவு என்ற அளவில் கடலையை ஊறவைத்து செய்தால் சரியாக இருக்கும்.
சென்னையில் பிறந்து, வளர்ந்த திருமதி. மனோகரி ராஜேந்திரன் அவர்கள் தற்போது வசிப்பது கனடாவில். சமையலில் நீண்ட அனுபவம் உள்ள இவர் சைவ, அசைவச் சமையல் இரண்டிலும் அசத்தக்கூடியவர். அறுசுவையில் நூற்றுக்கணக்கான சைவ, அசைவ உணவுக் குறிப்புகளை தொடர்ந்து கொடுத்துவருகின்றார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Dear Manohari madam...
How are you? i have tried channa masala in your method it was good too. Thanks a lot, as i'm a beginner in cooking your recipes with pictures are very helpful and easy to understand. It was so delicious. Expecting more recipes with picture from you.

jpriya

do we have to use only white channa? I have green channa also, if I'm going to use it,what are the changes i have to do in the method,because the outer skin is too thick in green channa, please let me know.

jpriya

ஹலோ டியர் jpriya, எப்படி இருக்கீங்க?இந்த சன்னா மசாலா குறிப்பை செய்து பார்த்ததற்கு மிக்க நன்றி. தங்களின் விருப்பம் போலவே நிச்சயமாக நிறைய குறிப்புகளைச் செய்து காட்டுகின்றேன். மேலும் நீங்கள் கூறியுள்ள green channa வையும் இதேப்போல் செய்யலாம். ஆனால் இரண்டு மேசைக்கரண்டி தேங்காய் விழுதை சேர்த்து கொண்டு, வெண்ணெயைத் தவிர்த்து விடவும், நன்றாக இருக்கும். நன்றி.

I am a regular visitor of this site.
i tried your channa masala it turned out very well.the taste like in restaurant.we really enjoyed it.thanks a lot.
if you know recipe for mattar paneer please post it.
keep sharing your recipes.
thanks

Helo மேடம் எப்படி இருக்கிங்க? உங்க சன்னா மசால் ரெசிப்பி ரொம்ப yummy. முதல் முறை சரியா வரலைbut இரன்டாவது முறை சூப்பர். இவ்ளோ நல்ல ரெசிப்பிக்கு நன்றி

அன்புடன்
சங்கீதா

டியர் அனூப் எப்படி இருக்கீங்க?இந்த சன்னா மசாலா குறிப்பு தங்களுக்கு பிடித்திருந்ததை அறிந்து மிக்க மகிழ்ச்சி. நிச்சயமாக கூடிய விரைவில் உங்களுக்காக மட்டர் பன்னீரையும் சமைத்து காட்டுகின்றேன் சரியா. பின்னூட்டம் அனுப்பியதற்கு மிக்க நன்றி.

டியர் சங்கீதா எப்படி இருக்கீங்க? சன்னா மசாலாவை தாங்கள் இரண்டாம் முறையாக விடா முயற்சியுடன் செய்து பார்த்ததைப் படித்து மகிழ்ச்சியாக இருந்தது. நான் அடிக்கடி செய்யும் குறிப்பு தான் இது. எனது மற்ற குறிப்புகளையும் செய்து பார்க்கும்படி கேட்டுக் கொள்கின்றேன். பின்னூட்டம் அனுப்பியதற்கு மிக்க நன்றி.