பீட்ரூட் தயிர் பச்சடி

தேதி: April 5, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.7 (3 votes)

 

பீட்ரூட் - 2
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
பச்சை மிளகாய் - ஒன்று
தயிர் - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - அரை தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி


 

தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
பீட்ரூட் மற்றும் இஞ்சியை துருவிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளிக்கவும்.
அதனுடன் துருவிய பீட்ரூட், இஞ்சி மற்றும் பச்சை மிளகாயைப் போட்டு சிறிது நேரம் வதக்கவும்.
வதங்கியதும் உப்புச் சேர்த்து வதக்கி, வெந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.
ஆறியதும் அதனுடன் தயிரைச் சேர்த்துக் கலக்கவும்.
சத்தான, சுவையான குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பீட்ரூட் தயிர் பச்சடி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வித்தியாசமா இருக்குங்க... இந்த மாதிரி பச்சடி. ட்ரை பண்றேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பச்சடி வித்தியாசமா இருக்கு மீன்ஸ். ட்ரை பண்ணி பார்க்குறேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

பல வருடங்களுக்கு முன் ஒரு மலையாள தொலைக் காட்சியில் ஓணத்திற்க்கென்று இந்த பச்சடி குறிப்பை பார்த்த நினைவு, ஆனால் செய்ததில்லை, அடுத்த முறை முயற்ச்சிக்கிறேன். படங்கள் தெளிவு.

அன்பு மீனாள்,
கலர்ஃபுல்லான‌ பச்சடி. பார்க்கவே நல்லா இருக்கு.

அன்புடன்,
செல்வி.

எனது இரண்டாவது குறிப்பினை வெளியிட்டு எனது ஆர்வத்தை அதிகப்படுத்திய திரு.அட்மின் மற்றும் அறுசுவை குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

Expectation lead to Disappointment

நன்றி வனிதா.நீங்கள் தான் நான் குறிப்பு கொடுக்க ஒரு இன்ஸ்பிரேஷன்.தாங்க்ஸ் வனி.

Expectation lead to Disappointment

நன்றி உமா.அவசியம் செய்து பார்த்துட்டு சொல்லுங்க.

Expectation lead to Disappointment

நன்றி வாணி.என்னுடைய ஒரு மலையாள தோழி சொன்னது தான்.ஆனால் நான் ஒரு சிலவற்றை மாற்றி ஈஸியா இருக்க செய்தேன்.என் வீட்டு குட்டீஸ் க்கு ரொம்ப பிடிச்சது.

Expectation lead to Disappointment

ரொம்ப நன்றி.உங்களை போன்ற சமையலில் சிறந்தவர்களிடம் பாராட்டு கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

Expectation lead to Disappointment

எனக்கு ரொம்ப பிடிச்ச பச்சடி :) வாழ்த்துக்கள் மீனாள் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

மீனாள்,

பீட்ருட்டில் வித்தியாசமான கலர்ஃபுல்லான‌ பச்சடி. பார்க்கவே நல்லா இருக்கு. கண்டிப்பா செய்துபார்க்கிறேன்.

அன்புடன்
சுஸ்ரீ

மீனா வித்தியாசமான பச்சடி, நிச்சயம் செய்து பார்க்கிறேன். பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு

உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி.

Expectation lead to Disappointment

உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி.செய்து பார்த்துட்டு சொல்ல்லுங்க.

Expectation lead to Disappointment

நன்றி தேவி.செய்து பார்த்திட்டு சொல்லுங்க.

Expectation lead to Disappointment