Book Binding

ஹாய் தோழி, புக் பைன்டிங் எப்படி செய்வது. அதற்கு என்ன தேவை.

என்ன மாதிரியான புத்தகம் கட்டப் போகிறீர்கள்? நீள அகலம் & பருமன் சொல்லுங்கள்.

‍- இமா க்றிஸ்

எனக்கு ஸ்கூல் புக் எப்படி பைன்டிங் செய்வது என்று தெரிய வேண்டும். எல்லா வித அளவுகும் வேண்டும். தயவு செய்து கூறுங்கள்.

கோச்சுக்காதீங்க. எனக்கு நீங்க என்ன கேட்கிறீங்க என்பது இன்னமும் தெளிவாகப் புரியவில்லை. நீங்க எங்க இருக்கிறீங்க என்கிறதை வைச்சு கெஸ் பண்ணலாம்னா, எந்த விபரமும் கிடைக்கல.

//ஸ்கூல் புக் எப்படி பைன்டிங்// என்ன புக்!!! எந்த க்ளாஸுக்கு!!! அல்லது... ஸ்க்ராப் புக்கிங்!! ஃபீல்ட் புக்!!! கடையில் வாங்கிய பாடப் புத்தகத்துக்கு லைப்ரரி புக் போல திரும்ப அட்டை போடுவதைக் கேட்கிறீங்களா??? நீங்க டீச்சரா! ஒரு வேளை... லைப்ரேரியன்!!! அட்டை & துணி வைத்து போடுவதைக் கேட்கிறீங்களா!!! இல்ல, வேற டெக்னிக்ஸ் கேட்கிறீங்களா? அல்லது ஏற்கனவே பயன்படுத்திட்டு இருக்கிற புக் ரிப்பேர் பண்ணணுமா?? குழப்பமா இருக்கு. உங்களுக்காகவா, வேறு தேவைக்கா!! எத்தனை புக் இருக்கு! எப்ப வேலை முடிக்கணும்!

//எல்லாவித அளவுகளும் வேண்டும்// :-) முதல்ல மேல இருக்கிற கேள்விக்குப் பதில் போட்டு வைங்க. அரை மணி நேரம் கழிச்சு வந்து பார்க்கிறேன். எங்க இருக்கீங்க என்கிறதையும் சொன்னால் உதவியாக இருக்கும்.

‍- இமா க்றிஸ்

நான் நினைக்கிறேன், அவங்க சொல்லி இருப்பது, அழகான வேலைப்படுகளுடன் கூடிய கெட்டியான அட்டையுடன், துணிவைத்து, கெட்டியான நூல் கொண்டு தைப்பது. சின்ன வகுப்பு குழந்தைகள் பாடநூலின் அட்டை மற்றும் பக்கங்களை எளிதில் கிழியாமல், பாதுக்காப்பாக இருக்கும் வகையில் செய்வது. எனக்கும் இது வேணும் :)
இடையூறுக்கு மன்னியுங்கள் தோழி.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ஸாரி இமா, நான் சொல்வது குழந்தைகள் ஸ்கூல் புக் அட்டை போடுவது. என் குழந்தைகளுக்கு ரொம்ப புக்ஸ் வாங்கி இருக்கிறேன். பக்கங்களை எளிதில் கிழியாமல் இருக்கவும், கெட்டியான அட்டையுடன் போடும் முறை வேண்டும்.அருட்செல்விசிவப்பிரகாசம் சொல்வது போல வேண்டும். நான் House wife தான். நாகர்கோவிலில் வசிக்கிறேன்.

புக் பைன்டிங் எப்படி செய்வது பற்றி சொல்லவும்.

இது எனக்கும் உபயேகப்படும் என் குழந்தையும் பாடசாலை செல்கிரார் புத்தகங்களின் அடடையை கிளிக்கவும் மடிக்கவு்ம செய்கிரார் இதற்கு ஏற்றாற் போல் ஒரு அட்டை மாதிரியை கூரவும்

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

அருள் சில படங்கள் அனுப்பியிருந்தார். அதே விதமாக அல்லாவிட்டாலும் சுலபமாகக் கிடைக்கக் கூடிய பொருட்களை வைத்து அட்டை போடும் முறையைக் கைவினைக் குறிப்பாக கூடிய விரைவில் அனுப்பி வைக்கிறேன். அனேகம் இந்த வார இறுதியில் செய்ய இயலும் என்று நினைக்கிறேன்.

‍- இமா க்றிஸ்

புக் பைன்டிங் எப்படி செய்வது பற்றி சொல்லவும்.

மேலும் சில பதிவுகள்