தேன் மெழுகு மலர்க் கொடி

தேதி: April 7, 2014

5
Average: 4.8 (8 votes)

 

தேன் மெழுகு - சிவப்பு, பச்சை நிறங்கள்
கேக் மெழுகுவர்த்தி - மஞ்சள் நிறம்
இதய வடிவ குக்கி கட்டர் - 2 அளவுகளில்
இலை வடிவ குக்கி கட்டர்
சிறிய பூ வடிவ குக்கி கட்டர்
சிறிய வட்ட வடிவ குக்கி கட்டர்
ரவுண்டட் டிப் க்ளே மாடலிங் டூல் (Rounded tip clay modelling tool)
ஹேர் ட்ரையர்
கத்தி
கத்தரிக்கோல்
காலண்டர் பேப்பர் / பேக்கிங் ஷீட்
க்ராஃப்ட் க்ளூ
சாஸர்
உயரமான சதுர வடிவ மெழுகுவர்த்தி & பொருத்தமான தட்டு

 

தேவையானவற்றைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். வேலை செய்யும் மேற்பரப்பில் காலண்டர் பேப்பர் அல்லது பேக்கிங் ஷீட் விரித்துக் கொள்ளவும். (நியூஸ் பேப்பர் பயன்படுத்த வேண்டாம். மெழுகிலுள்ள எண்ணெய்ப் பசை காரணமாக எழுத்துகள் பதிந்து கெட்டுவிடலாம்).
இதய வடிவ குக்கி கட்டரை வைத்து சிவப்பு நிற தேன்மெழுகில் ஒவ்வொரு பூவுக்கும் நான்கு இதயத் துண்டுகள் வீதம் வெட்டிக் கொள்ளவும்.
ஒரு துண்டை மட்டும் சாஸரில் எடுத்து, ஹேர் ட்ரையரை மிதமான சூட்டில் வைத்துக் காட்டவும். மெழுகு மெதுவே மினுக்கமடைய ஆரம்பிக்கும். (சாஸரில் வைக்காவிட்டால் பறந்துவிடும். இளகும் போது கடதாசியில் நிறம் இறங்கவும் கூடும்). இளகிய துண்டை விரல்களிடையே பிடித்து இதழ் போல வளைத்துக் கொள்ளவும்.
பச்சை நிறத்தில் சிறிய வட்டம் ஒன்று வெட்டி எடுத்து சூடு காட்டி நடுவில் மாடலிங் டூல் வைத்து குழிவாக அழுத்தி எடுக்கவும். சுழற்றிபடி அழுத்தவும். இல்லையெனில் டூல் மெழுகோடு ஒட்டிக் கொள்ளும். அதன் பிறகு இதழ் ஒன்றின் முனையைச் சூடு காட்டி பச்சை வட்டத்தில் வைத்து இப்படி அழுத்தவும்.
மீதி இதழ்களையும் இவ்வாறு இணைத்து எடுக்கவும்.
மஞ்சள் நிற மெழுகை சிறு துண்டுகளாக்கி சூடு காட்டி சிறிய மணிகளாக உருட்டிக் கொள்ளவும். (என்னிடம் மஞ்சள் நிறத் தேன் மெழுகு இருக்காத காரணத்தால்தான் மெழுகுவர்த்தியைப் பயன்படுத்தியிருக்கிறேன்).
இவற்றை இளக்கி பூவின் மத்தியில் மகரந்தம் போல் வைத்து அழுத்திவிடவும்.
சிறிய பூக்கள் வெட்டி எடுத்து முன்பு செய்தது போலவே சூடு காட்டவும். மாடலிங் டூல் குமிழ் முனையை வைத்து அழுத்தினால் இதழ் குழிவாக வரும்.
பூவைத் திருப்பிப் பிடித்து இதே போல் நடுவிலும் ஒரு முறை அழுத்தி எடுக்கவும். இதன் நடுவிலும் மகரந்தம் வைத்துவிடவும்.
கத்தரிக்கோலால் பச்சை நிறத்தில் 3 மில்லி மீட்டர் அகலமான நீளத் துண்டுகள் சில வெட்டி எடுக்கவும்.
இவற்றைச் சூடுகாட்டி மெதுவே உள்ளங்கைகளின் நடுவில் வைத்து உருட்டவும்.
பச்சை நிறத்தில் இலை வடிவங்கள் சில வெட்டி வைக்கவும்.
இலைகளின் அடிப்பாகத்தைச் சூடு காட்டி உருட்டி வைத்துள்ள துண்டு ஒன்றின் மேல் இப்படி ஒட்டி வைக்கவும்.
இதய வடிவத் துண்டு ஒன்றை இளக்கி, பூவிற்கு தயாராக்கியது போல் வளைத்து எடுக்கவும். அதன் வளைவான பகுதியிலிருந்து ஆரம்பித்து மொட்டு போல ஓரங்களை இணைத்து ஒட்டவும். ஒட்டும் போதே உள்ளே காம்பையும் சொருகிவிட்டு ஒட்டவும்.
இலைகள் வெட்டியதில் மீந்து போனவற்றிலிருந்து சிறிய முக்கோணத் துண்டுகள் சில தெரிவு செய்து மொட்டைச் சுற்றி ஒட்டவும்.
போதுமான எண்ணிக்கை பூக்கள், இலைகள் தயாரானதும். மெழுகுவர்த்தியை தட்டில் உறுதியாக ஒட்டிக் கொண்டு விரும்பியவாறு அலங்கரிக்கலாம். பூக்கள், இலைகளை மீண்டும் சிறிது சூடுகாட்டிவிட்டு தேவையான இடத்தில் வைத்து டூல் அல்லது கத்தி முனையினால் மெதுவாக அழுத்திவிட்டால் ஒட்டிக்கொள்ளும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

வாவ் மிகவும் அழகாக உள்ளது இமா மேடம். வாழ்த்துக்கள். விரைவில் செய்து பார்க்கிறேன்

அருமையாக‌ செய்து இருக்கீங்க‌.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

காலையில் இருந்து பார்த்துட்டு இருந்தேன் வரல... வெளிய போயிட்டு வரும் முன் வந்துடுச்சு ;) அழகாய் இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப அழகா இருக்குங்..ரொம்ப அருமைங்க ..

நட்புடன்
குணா

ரொம்ப அழகா இருக்கு இமாம்மா. க்ராப்ட் செய்ய உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா ரொம்ப பொருமையா நேர்த்தியா செய்திருக்கீங்க

நன்றி கவிசந்துரு, முசி & குணா. :-)

//க்ராப்ட் செய்ய உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா// ரொம்...ப பிடிக்கும் தேவி. பாராட்டுக்கு என் அன்பு நன்றி.

‍- இமா க்றிஸ்

அது எடிட்டர் வரும் வரை காத்துட்டு இருந்து இருக்கு போல. :-)
அழகுதான். ஆனால் பெரிதாக வேலை எதுவும் இருக்கவில்லையே! நன்றி வனி.

‍- இமா க்றிஸ்

முல்லைக்கு தேர் தந்த‌ மாதிரி கொடி படர‌ மெழுகுவர்த்தியா?
டெக்கரேஷன் அழகு.

உங்கள் பதிலை ரசித்தேன் நிகிலா. ;) நன்றி.
முதலில் கொடி ஒரு வட்டமான ப்ளாஸ்டிக் தூணில்தான் படர்ந்திருந்தது. வனி பார்த்திருக்காங்க. பிறகு தூணை விட இது அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று மாற்றிவிட்டேன்.

‍- இமா க்றிஸ்

தேன் மெழுகு மலர்க்கொடி மிக அழகு இமா, கிராப்ஃட்கும் எனக்கும் ரொம்ப தூரம். என் மகளுக்கு இதைப் போன்று சொல்லிக் கொடுக்கிறேன்